சென்னை: அக்டோபர் 04, 2018
8 வருடங்களாக போலீசாரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு விபச்சாரம் செய்து வந்த 58 வயது புரோக்கர் டெய்லர் ரவி ஒருவழியாக கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணாநகர் டவர்பார்க் அருகில் உள்ள அடுக்குமரி குடியிருப்பு ஒன்றில்தான் ரவி வாழ்ந்து வந்துள்ளார் . ராமநாதபுரம் ஊரணிப்பேட்டையை சேர்ந்த இவர் பல பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருபவர். இது சமந்தமாக இவர் மீது 8 வழக்குகள் உள்ளது.
சில நடிகைகளை வைத்து விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்த கன்னட பிரசாத்துக்கு பிறகு ரவிதான் தலைதூக்க ஆரம்பித்தார். எத்தனையோ முறை பிடிக்க போகும் நேரத்தில் ரவி மாயமாகி கொண்டே வந்தார். இதற்கு காரணம் சில அதிகாரிகளும் ரவிக்கு உடந்தையாக இருந்து வந்ததுதான் என்று கூறப்படுகிறது .
இதுவரை ரவி கிட்டத்தட்ட 60 பெண்களை வைத்து தொழில் ஈடுபடுத்தி பணம் சம்பாரித்து வந்துள்ளார் . போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் ரவியை பிடித்தே ஆக வேண்டும் என்பதற்காக ஒரு தனிப்படையே அமைக்கப்பட்டு அவரது ரகசிய நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன.
வழக்கம்போல் இளைஞர்கள் ரவியின் வீட்டிற்குள் போவதும் வருவதுமாக இருந்தார்கள் . இதையடுத்து அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த போலீசார் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 4 இளம்பெண்களை மீட்டு ரவியையும் கைது செய்தனர்.
8 வருடங்களாக ரவியை காப்பாற்றிய உயர் அதிகாரிகள், பெரிய தலைகள் யார் என்பது பற்றி தெரியவரும் என்று கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்
- ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது சம்மந்தப்பட்ட 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு
- கணவரை கள்ளக்காதலன் உடன் சேர்ந்து கொலை செய்த மனைவி
- தஞ்சாவூரில் பிணத்துக்கு சிகிச்சை அளித்து பணம் பறித்த மருத்துவமனை- பரபரப்பு புகார்
- விஜய் அரசு ஆறு மாதம்: நலத்திட்டங்கள், பட்ஜெட், சர்ச்சைகள் – இதுவரை பதிவான தகவல்கள்
- வீரமணி போக்சோ வழக்கு: இதுவரை நடந்தது என்ன? குற்றப்பத்திரிகை எப்போது? நவ. 10 விசாரணை
- தீபாவளி 2026: தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்கும் நேரம் என்ன? விதிகள், விடுமுறை, அரசு அறிவிப்பு நிலவரம்
- சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கு எளிய விளக்கம்: பொது தீட்சிதர்கள், பிரிவு 26, 2014 தீர்ப்பு
← முந்தைய செய்தி: தஞ்சாவூரில் பிணத்துக்கு சிகிச்சை அளித்து பணம் பறித்த மருத்துவமனை- பரபரப்பு புகார்
அடுத்த செய்தி →: நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்க கோரிக்கை

