சேலம்: சேலம் அருகே ஆத்தூரில் பள்ளி சிறுவனை சாக்குப்பையில் கடத்த முயன்ற மூதாட்டியை போலீஸார் கைது செய்தனர். வட மாநிலத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் ஆத்தூரில் உள்ள அம்பேத்கர் நகர் அரசு பள்ளி அருகே சுற்றித் திரிந்தார் . பள்ளிக்கு சென்ற ஒரு சிறுவனிடம் வட மாநிலத்தை சேர்ந்த மூதாட்டி பேச்சு கொடுத்தார்.
மொழி புரியாததால் அந்த சிறுவனும் ஏதோ விளக்கிக் கொண்டிருந்தான். அப்போது திடீர் என்று அந்த மூதாட்டி சிறுவனின் கையை பிடித்து இழுத்து சென்றார்.
பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வாயில் துணியை வைத்து ஒரு சாக்குப்பையில் போட்டு அடைத்தார். இதை பார்த்த சிலர் மூதாட்டியை விரட்டி பிடித்து ,சாக்குப்பையில் உள்ள சிறுவனை கண்டதும் மூதாட்டியை சரமாரியாக தாக்கினர். பின்னர் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸ் அந்த மூதாட்டியை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது .