லக்னோ :அக்டோபர் 05, 2018
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னோவா, சிதாபூர், கோண்டா ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு தலைமை மருத்துவ மனையின் டாக்டர்கள் யாருக்கும் புரியாத வகையில் மருத்துவப் பரிசோதனை குறிப்பு மற்றும் மருந்து எழுதிக் கொடுத்த மூன்று டாக்டர்களுக்கு தலா 5000 ரூபாய் அபராதம் விதித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டி.பி.ஜெய்ஸ்வால், பி.கே.கோயல், கோண்டா ஆசிஷ் சக்சேனா ஆகிய மூவரும் அரசு டாக்டர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், அஜய்லாம்பா, சஞ்சய் ஹர் குலி ஆகியோர் அடங்கிய அமர்வு ஆகும் .
அதிக வேலை காரணமாக அவசரமாக எழுதுவதால் கையெழுத்து சரியாக இல்லை என டாக்டர்கள் விளக்கம் அளித்தனர், ஆனால் டாக்டர்கள் கூறிய காரணத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர் . விபத்தில் காயம் அடைந்தவருக்கு எழுதிக் கொடுத்த பரிசோதனை அறிக்கையை யாருமே படித்து புரிந்து கொள்ள முடியவில்லை. இப்படி இருந்தால் வேறு மருத்துவமனையில் எப்படி சிகிச்சை பெற முடியும்? மருந்து எப்படி வாங்க முடியும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் .டாக்டர்கள் மூவருக்கும் தலா 5000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர்.
இதையும் படியுங்கள்
- சிறுவனின் ஆணுறுப்பில் சூடு வைத்த பெண் !அதிர்ச்சியடைந்த தாய்…பாய்ந்தது போக்ஸோ
- 2 காஷ்மீர் மாணவர்கள் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது
- நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்க கோரிக்கை
- லஞ்சம் கேட்பது அரசுப் பணியின் ஒரு பகுதியா? ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17A பாதுகாப்பு கிடையாது என உச்ச நீதிமன்றம் விளக்கம்
- குழந்தைகளுக்கும் இணையப் பயன்பாடு அடிப்படை உரிமை: உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன? வயது அடிப்படையிலான முழுத் தடை ஏன் ஏற்கப்படவில்லை?
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
- அண்ணன் சீர் திட்டம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கக் காசு, பட்டுப் புடவை பெற ஆதார் கட்டாயம்; ரூ.812 கோடி ஒதுக்கீடு
← முந்தைய செய்தி: நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்க கோரிக்கை
அடுத்த செய்தி →: தாயே குழந்தையை கொன்றுவிட்டு கூறிய அதிர்ச்சி காரணம்

