பெங்களூர்:அக்டோபர் 17, 2018 கபடி பயிற்சியாளராக இருந்த ருத்ரப்பா ஹோசாமனி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரால் அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எடுக்கப்பட்டது .பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் மூத்த கபடி பயிற்சியாளராக இருந்தவர் தான் இந்த ருத்ரப்பா ஹோசாமனி (59). உடை மாற்றும் அறைக்கு சென்று 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது .இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ருத்ரப்பாவை கடுமையாக தாக்கினர். பிறகு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.இதனால் அவமானம் தாளாமல் பெங்களூருவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் பயிற்சியாளர் ருத்ரப்பா ஹோசாமனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Read MoreYou are here
- Home
- sex harassment