உணவு பரிமாறி பில் கொடுக்கும் தானியங்கி ஜப்பான் உணவகம்

Automated Japanese restaurant serves without waiters ஜப்பான் நாட்டில் புதிய ஒரு உணவகம் அறிமுகம் திறக்கபட்டுள்ளது. இந்த உணவகத்தின் தனித்தன்மை என்னவென்றால் இதில் நமக்கு பரிமாற வெயிட்டர் யாரும் கிடையாது. இருக்கையில் அமர்ந்துகொண்டு கம்பியூட்டர் தொடுதிரையில் நமக்கு தேவையான உணவை ஆர்டர் செய்தால் போதும் சுமார் 5 மணித்துளிகளில் உணவு நம்மை தேடி வரும். அதுமட்டும் இன்றி அத்தனையும் தானியங்கி தான். மேலும் உங்களுடைய பில்லும் உடனுக்குடன் நீங்கள் அமர்ந்து இருக்கும் இடத்திலேயே பில்லிங் இயந்தரத்திலேயே பில் தயாராகி வந்துவிடும். இப்படி இந்த பூமி அடுத்த தலைமுறை இயந்திரங்களை நோக்கி நகர தொடங்கி விட்டது என்பதற்கான ஒரு சிறந்த உதாரணம் இது என கூறலாம். Automated Japanese restaurant serves without waiters The Japanese conveyor belt sushi restaurant: It is not…

Read More

ஜெர்மன் மதுபான விடுதி சண்டையில் மூக்கை கடித்து துப்பிய வாலிபன்

In Germany, man bites off part of nose in bar brawl மதுபான கடையில் ஏற்பட்ட தகராறில் எதிராளியுடைய மூக்கை கடித்து துப்பி தலைமறைவாகிபோன வாலிபரை ஜெர்மன் காவல்துறையினர்  தேடி வருகிறார்கள். ஜெர்மன் நாட்டில் பிரெமென் எனும் நகரத்தில் இருக்கும் மதுபான விடுதி ஒன்றில், நேற்று வாரக்கடைசி நாள்  ஞாயிறு என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. மதுபான விடுதியில் போதை கூடுதலான உள்ளூர் குடிமகனுக்கும், நார்டென்ஹாம் என்ற இடத்தை சேர்ந்த ஒரு குடிகாரருக்கும் வாய்த்தகராறு  ஏற்பட்டது. அந்த வாய் தகராறு அடிதடியாக மாறியது. மற்ற குடிகாரர்களின் தலையீட்டால் தற்காலிகமாக அவர்கள் பிரித்து வைக்கப்பட்டாலும், நார்டென்ஹாம் ஆத்திரம் அடங்காமல் உள்ளூர்வாசி அசந்த நேரத்தில் பாய்ந்து சென்று அவருடைய மூக்கை கடித்து குதறி அதை பிடுங்கி கீழே துப்பிவிட்டார். அந்த நார்டென்ஹாம் நபரை, மற்ற குடிமகன்கள் பிடிக்க…

Read More

இந்தியாவில் 91% பதிவு பெறாத எக்ஸ்-ரே நிலையங்கள்

91 pc of X-Ray units in country without registration இந்தியாவில் செயல்பட்டுகொண்டிருக்கும் 91 சதவிகிதமான எக்ஸ்-ரே நிலையங்கள் முறையாக பதிவு செய்யாமல் செயல்படுகிறது என்று, பொது கணக்கு கமிட்டி அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மருத்துவ சோதனைக்காக செயல்பட்டுகொண்டிருக்கும் எக்ஸ்-ரே எடுக்கும் நிலையங்கள், இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திடமிருந்து முறையாக பதிவு செய்து கொண்டு, அனுமதி வாங்கவேண்டும். இந்த அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் தான், இந்தியாவில் உள்ள எக்ஸ்ரே நிலையங்களுடைய செயல்பாடுகளை கண்காணித்து ஒழுங்குமுறைப்படுத்துகின்றது. இந்த அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தினுடைய செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வெளியிட்டிருக்கிறார். இதை, பி.ஏ.சி., என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாராளுமன்றத்தின் பொது கணக்கு கமிட்டி ஆய்வு மேற்கொண்டது. பொது கணக்கு கமிட்டி ஆய்வில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்துதிருக்கிறது. இந்தியாவில்…

Read More

தமிழ்நாட்டில் 6 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி பணி இடமாற்றம்

district collectors and other IAS officers shuffled again in tamilnadu தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, மதுரை உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளர்கள். இது சம்பந்தமாக தமிழக அரசு வெள்யீடு செய்துள்ள செய்திக்குறிப்பினில் அறிவித்துள்ளதாவது:- மதுரை மாநகராட்சி கமிஷனராக இருக்கும் நந்தகோபால் தற்போது வேலூர் மாவட்ட ஆட்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கோவை மாவட்ட ஆட்சியாளராக உள்ள எம். கருணாகரன் மாற்றப்பட்டு நெல்லை கலெக்டர் சி.சமயமூர்த்திக்கு பதில் அந்த மாவட்ட ஆட்சியாளராக நியமிக்கபட்டிருக்கிறார். நீலகிரி மாவட்ட ஆட்சியாளராக உள்ள அர்ச்சனா பட்நாயக், கோவை ஆட்சியாளராக நியமிக்கபட்டிருக்கிறார். கோவை ஆட்சியாளராக இருந்த கருணாகரனுக்கு பதிலாக இவர் நியமிக்கபட்டிருக்கிறார். வேலூர் மாவட்ட ஆட்சியாளராக மதுரை மாநகராட்சி கமிஷனராக இருந்த நந்தகோபால் நியமிக்கபட்டிருக்கிறார். வேலூர் மாவட்ட ஆட்சியாளராக இருந்த டாக்டர். ஆர்.சங்கர் நீலகிரி மாவட்ட ஆட்சியாளராக நியமிக்கபட்டிருக்கிறார். தஞ்சை…

Read More

பராகுவே நாட்டில் 80 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து காதல் திருமணம்

103-year-old man marries 99-year-old woman in Paraguay பராகுவே நாட்டில் உள்ள வயதான காதல் ஜோடி ஒன்று காலம் கடந்தாலும் காதல் வெற்றிபெறும் என நிருபித்திருக்கிறார்கள். சுமார் 80 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து தற்சமயம் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் முன்னிலையில் அவர்கள் நடத்தி வைக்க திருமணம் நடைபெற்றது. பராகுவே நாட்டில் வாழ்ந்து வருபவர்கள் அந்நாட்டைச் சார்ந்த ஜோஸ் மேனுவல் ரெய்லா மற்றும் அவரது காதலி மார்டினா லோபஸ். காதலர்கள் இருவரும் காதலித்து, பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழத் தொடங்கினர். அதன்பிறகு குழந்தைகள் பெற்றெடுத்து பேரப்பிள்ளைகளை கண்ட பின் சுமார் 49 ஆண்டுகளுக்கு சென்ற பின்னர் சாதாரண முறையில் கல்யாணம் செய்து கொண்டார்கள். எனினும், பாதிரியாரின் முன்னிலையில் அத்திருமணம் நடக்கவில்லை. இது காதலி மார்டினாவுக்கு ஒரு மிகப்பெரிய குறையாக இருந்திருக்கிறது. ஆகவே, இப்போது தனது குடும்பத்தினரின்…

Read More

டைட்டானிக் கப்பலில் வாசிக்கப்பட்ட வயலின் 9 கோடி ரூபாய்க்கு ஏலம்

Titanic Violin Sells For Record £900,000 டைட்டானிக் கப்பல் மூழ்கும் நிலையில் இருந்த போது பயணிகளை சாந்த படுத்துவதற்காக வாசிக்கப்பட்ட வயலின் ஏலம் விடப்பட்டது. அந்த வயலின் எதிர்பார்த்ததை காட்டிலும் கூடுதலாக 8 கோடியே 91 லட்சத்து 93 ஆயிரத்து 792 ரூபாயிக்கு ஏலம் போனது. இங்கிலாந்தில் இருந்து கடந்த 1912ம் ஆண்டு அமெரிக்காவுக்கு புறப்பட்ட  டைட்டானிக் சொகுசு கப்பல் வடக்கு அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. இதில் 1,517 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். கப்பல் மூழ்கிகொண்டிருந்த போது பயணிகளை சாந்தபடுத்துவதற்காக இசைக்குழுவின் தலைவர் வாலஸ் ஹார்ட்லி இந்த வயலினை பயன்படுத்தி வாசித்துள்ளார். இங்கிலாந்தின் வில்ட்ஷயரில் இருக்கும் ஏல நிறுவனத்தில் ஹார்ட்லி வாசித்த வயலின் இசை கருவி நேற்று ஏலத்தில் விடப்பட்டது. ஏலம் ஆரம்பமான சுமார் 10 நிமிடங்களில் ஒரு நபர் அந்த வயலின் இசை…

Read More

காமன்வெல்த் நாடுகளின் சுற்றுச்சூழல் விருது பெற்ற இந்திய பெண்

Priti Rajagopalan wins commonwealth youth award   மிகுந்த வேகத்தில் மாசு அடைந்து வரும் உலகத்தின் சுற்றுச் சூழ்நிலையில் புதிய மாற்றம் கொண்டுவர சுற்றுச்சூழல் ஆர்வலரான இந்திய பெண் செல்வி.பிரீதி ராஜகோபாலன் (வயது 23) தீவிரமாக செயல்பட்டு வருகிறார். சக மாணவர்களுடன் சேர்ந்து கழிவு மேலாண்மை திட்டத்தை செல்வி.பிரீதி ராஜகோபாலன் தனது 18-வது வயதில் துவக்கினார். இதன் மூலம் இந்தியாவில் உள்ள 200 பள்ளிகள் மற்றும் 40 பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு கழிவுகள் மற்றும் உரமாகும் பொருட்களை தனித்தனியே பிரிப்பதற்காக ஒரு புதிய நவீன பயிற்சியின செல்வி.பிரீதி ராஜகோபாலன் அளித்துள்ளார். பிரிக்கப்பட்டு தயாரான அந்த உரங்கள் யாவும் மலிவு விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தா திட்டத்தை சுமார் 40 நகரங்களில் அவர் நடத்தி வருகிறார். இந்த திட்டத்திற்கு அரசு நிதியுதவி வழங்கி…

Read More

பேஸ் புக் மூலம் தாய்ப்பால், சிறுநீரகம், கருமுட்டை விற்பனை

Mothers selling breast milk on Facebook: Report    தற்சமயம் பிரிட்டன் மட்டும் அமெரிக்க நாடுகளில்  தாய்ப்பால், சிறுநீரகம், கருமுட்டை, மற்றும் நீண்ட தலைமுடி (உரோமம்), ஆகியன விற்பனை பிரமாதமாக நடக்கிறது. சமூக வளையதலமான பேஸ்புக் போன்ற இணையதளம் வழியாக தான் ஏராளமானோர் இவற்றை பேரம் பேசி நல்ல விலை கொடுத்து வாங்குகிறார்கள். இதில் பெரும்பாலானோர் தங்களுடைய பேக் ஐ டி மூல்ம் இந்த வியாபாரத்தைத் தொடங்குகிறார்கள். குறிப்பாக கரு முட்டை விற்பனை செய்ய ஆயிரக்கணக்கான பெண்கள் கருத்தரிப்பு சிகிச்சை மையங்களில் தயாராக இருக்கிறார்கள். இவ்வகையில் நீண்ட கூந்தல் சுமார் ரூ.60 ஆயிரத்திற்கும், ஒரு அவுன்ஸ் தாய்ப்பால் ரூ.300 யும்   விலை கூறபடுகிறது. தாய்பால் ஒரு அவுன்ஸ் (30 மி.லி.,) 80 ரூபாய் முதல், 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பல காலமாக…

Read More

மும்பையில் 18 வயது பெண்ணை ஆசிட் குடிக்க வைத்து கொடுமை

18-Year-Old Girl Forced to Drink Acid by Stalker in Mumbai; Victim Battling for Life 18 வயது கல்லூரி மாணவியை மும்பை கோரா கடற்கரை பகுதில் பின் தொடர்ந்து வந்த ஒரு வாலிபர், அவரை வலுகட்டாயமாக ஆசிட் குடிக்க வைத்து கடலுக்குள் தள்ளிவிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரில் இருக்கும் தாஹிசார் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவியை அந்த பகுதியைச் சேர்ந்த ஜிதேந்திரா(வயது 20) என்பவன் கடந்த பல மாதங்களாக பின் தொடர்ந்து வந்திருக்கிறான். இதனையடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் ஜிதேந்திரா மீது காவல்துறையினரிடம் புகார் ஒன்றை கொடுத்தனர். காவல் துறையினர் அவரை அழைத்து எச்சரித்துவிட்டு அனுப்பி வைத்தார்கள். இந்த நிலையில் நேற்று இரவு ஜிதேந்திரா அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி வலுகட்டாயமாக ஆசிட்டை வில்…

Read More

நடிகர் சூர்யா ஆர்வத்துடன் முன்வந்து நடித்த விழிப்புணர்வு திரைப்படம்

safety while bursting crackers surya advise people about awareness நடிகர் சூர்யா, தீபாவளி பட்டாசு விபத்து நடவாமல் தடுப்பதற்கு ஒரு விழிப்புணர்வு படத்தில் நடித்துள்ளார். தமிழ்நாடு தீயணைப்பு துறை, இந்த விழிப்புணர்வு படத்தை வெளியிடஇருக்கிறது. கடந்த ஒரு வார காலமாக,  தீயணைப்பு துறையினர், தீபாவளி பண்டிகையின்போது ஏற்படக்கூடிய பட்டாசு விபத்துகளை தடுத்திட சென்னையின் பல பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தி வர்கிறார்கள். அத்துடன் விழிப்புணர்வு ஒத்திகையும் நடத்தி முன்னோட்டமாக காண்பித்து வருகின்றனர். இந்த நிலையில்  விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்று நடத்த சென்னை தி. நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தீயணைப்பு துறையினர், ஒரு விழிப்புணர்வை படத்தை நடிகர் சூர்யாவை வைத்து தயாரித்துள்ளனர். 2 நிமிடங்களே ஓடும் இந்த விழிப்புணர்வு குறும் படத்தில் நடிகர் சூர்யா பொது மக்களுக்கு அறிவுரை வழங்குகிறார்.…

Read More