வள்ளியூர் அருகில் கார் விபத்து! ஒரே குடும்பத்தை சார்ந்த 6 பேர் சாவு

Kanyakumari District : In a Road accident near Valliyur at Kanyakumari District of Tamilnadu, 6 people dead from a single family

 In a Road accident near Valliyur at Kanyakumari District of Tamilnadu, 6 people dead from a single family

வள்ளியூர் அருகே நடந்த கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி

நாகர்கோவிலிலிருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த கார் ஒன்று வள்ளியூர் அருகில் புறவழிச்சாலை பாலத்தில் புதன்கிழமையன்று மோதியதில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் அருகில் ஆலங்கோட்டையைச் சேர்ந்தவர் ராசையா (வயது 58). இவரது மகன் திரு.பாலசுப்பிரமணியன். இவர், சென்னையில் உள்ள பூந்தமல்லியில் புதிதாக வீடு ஒன்று கட்டியுள்ளார். இந்த வீட்டு கிரஹப் பிரவேச நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. இந்த விழாவில் கலந்துகொள்ள திரு.ராசையா மற்றும் அவரது மனைவி பத்மாவதி (வயது 55), அவரது மகள் கலைச்செல்வி (வயது 36), மருமகன் கோயில்ராஜ் (வயது 40), பேரன் சரவணன் (வயது 6) ஆகியோர் ஒரு காரில் சென்னைக்கு போனார்கள்.

அவர்கள் பிற்பகல் 2 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து கிளம்பினர். காரை ராமன்புதூரைச் சேர்ந்த தங்கராஜ் மகன் முருகன் (வயது 34) ஓட்டினார். அப்போது வள்ளியூர் அருகில் கோவனேரியில் இருக்கும் புறவழிச் சாலையில், சாலையிலே தேங்கிக் கிடந்த மழைநீரில் சகதியாக இருந்ததால் கார் சறுக்கியதாம்.

இதனையடுத்து புறவழிச் சாலை பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதிய கார், அதனையொட்டி அணுகு சாலையில் கவிழ்ந்தது. இதனால், காரில் பயணம் செய்த 6 பேரும் பலத்த காயமடைந்து அதே இடத்தில் பலியானார்கள். தகவலறிந்தவுடன் வள்ளியூர் தீயணைப்பு துறையினர், நிலைய அதிகாரி மோகன் தீயணைப்பு வீரர்களுடன் அங்கு சென்று, காரிலிருந்த 6 பேரையும் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள். இந்த விபத்து தொடர்பாக வள்ளியூர் காவல்நிலைய ஆய்வாளர் திரு.பரமசிவன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Kanyakumari District : In a Road accident near Valliyur at Kanyakumari District of Tamilnadu, 6 people dead from a single family

Related posts