Full Body Python Massage becoming very famous in Indonesia
தற்போது இந்தோனேஷியாவில் மலைப்பாம்பு மசாஜ் செய்துகொள்வது அந்த நாட்டு மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மலைப்பாம்பு மசாஜ் செய்துக்கொள்வோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் இங்கு கூடுதலாகி வருகிறது. பெரும்பாலான சுற்றுலா தளங்களில் உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் உற்சாகம் அளிப்பதற்கென பல்வேறு வகையான மசாஜ்கள் செய்யப்படுகின்றன. இந்த நிலையில் இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவில் இருக்கும் ஒரு மசாஜ் நிலையத்தில் சற்று வித்தியாசமான வகையில் வாடிக்கையாளர்களை கவர மலைப்பாம்பு மசாஜ் செய்யப்படுகிறது. உடலின் மேல் மலைப்பாம்புகளை நகர விடப்பட்டு மசாஜ் செய்யப்படும். இந்த பாம்பு மசாஜ் மனிதர்களுக்கு புத்துணர்ச்சி உண்டாக்குவதாக இந்த நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த பாம்பு மசாஜூக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் கூடியுள்ளது. ஏராளமான பயணிகளும் உள்ளூர் மக்களும் இந்த மசாஜ் நிலையதிற்கு வந்து குவிகின்றனர்.