cool Man Walks into the Hospital with 10 Inch Knife Buried in his Skull in china
சீனாவில் தலைக்குள் 10 அங்குலம் பாய்ந்த கத்தியோடு ஒரு நபர் நடந்து வந்து சிகிச்சை பெற்று கொண்டது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
சீனாவினுடைய வடகிழக்கில் இருக்கும் ஜீன் மாகாணத்தின் யான்ஜி எனும் இடத்தை சேர்ந்தவர் ஹோ லுங். கத்தியை வைத்துக் கொண்டு தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த இவர், எதிர்பாராத விதமாக இவருடைய நண்பர் இவரை விளையாட்டாக தள்ளிவிட அவருடைய கையில் இருந்த கத்தி ஹோலுங்கின் தலைகுள் பாய்ந்தது. இதை கண்ட நண்பர் தான் கொலை செய்துவிட்டதாக நினைத்து அலறியடித்துக்கொண்டு அவ்வீட்டைவிட்டு வெளியேறினார். கீழே விழிந்து மயக்க நலையில் இருந்த ஹோ லுங், நினைவு திரும்பியவுடன் தலையில் இருந்த கத்தியோடு தானே மருத்துவமனைக்கு நடந்து போனார்.
மருத்துவமனையில் ரத்தம் வழிந்த நிலையில் நின்றுகொண்டிருந்த இவரை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இதையடுத்து எக்ஸ் ரே எடுத்து பரிசோதனை செய்து பார்த்ததில், 10 அங்குல ஆழத்தில் கத்தி புதைந்திருப்பது தெரிய வந்தது.
சுமார் 3 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் ஹோ லுங் தலையில் பாய்ந்திருந்த கத்தியை மருத்துவர்கள் அகற்றினார்கள். தற்போது ஹோ லுங் நலமுடன் இருக்கிறார் என மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தனக்கு இத்தகைய ஆபத்தான நிலை உண்டானது என்பதை கூட உணராமல், ஹோ லுங் மிகவும் சாதரணமாக இருந்ததாகவும், அறுவை சிகிச்சைக்குப்பிறகு தன்னை உடனே டிஸ்சார்ஜ் செய்யும்படி வலியுறுத்தியதாகவும் மருத்துவர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.