Increasing Divorce in China. About 41 percent of divorce in 6 months are done to avoid property tax
2013, கடந்த செப்டம்பர் மாதம் வரை சீனாவில் 40 ஆயிரம் தம்பதிகள் தங்கள் திருமண முறிவு செய்துள்ளனர். சீனாவின் ஷாங்காய் நகரிலும் இந்த நிலையே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக அங்கே விதிக்கப்பட்டிருக்கும் கூடுதலான சொத்து வரி தான் காரணம் என கூறப்படுகிறது.
சீனாவில், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர ஒரு குடும்பத்துக்கு ஓர் குழந்தை எனும் திட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, அங்குள்ள மக்கள் ஆண் குழந்தைகள் பெற்றுக்கொள்ளவே விரும்புகிறார்கள். ஆதலால், பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் முற்றிலும் குறைந்து வருகிறது. அதனால், திருமணத்த்திற்கு பெண் கிடைப்பது அரிதாகி வருகிறது. இந்த பிரச்சினை ஒரு பக்கம் இருக்கும் போது பல்வேறு சிரமங்களுக்கு இடையில் நடக்கும் கல்யாணங்களும் மணமுறிவில் முடிகிறது.
சமீப காலமாக விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருகிறது. 2013 செப்டம்பர் மாதம் வரையில் மட்டும் 40 ஆயிரம் தம்பதிகள் விவாகரத்து வழக்கு தொடுத்துள்ளர்கள்.
ஷாங்காய் நகரிலும் இதே நிலைமை தான் இருக்கிறது. அதற்கு அங்கே அங்கு விதிக்கப்பட் டிருக்கும் கூடுதலான அளவு சொத்து வரி தான் காரணம் என்று கருதபடுகிறது.
வீடு மற்றும் குடியிருப்புக்களை விற்பனை செய்பவர்கள் அரசாங்கத்துக்கு வரி செலுத்தியாக வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசாங்கத்துக்கு ஓர் ஆண்டிற்கு 20% அதிகமான வருவாய் கிடைக்கிறது. அதே நேரம் விவாகரத்து செய்துகொள்ளும் தம்பதியினருக்கு இவ்வரி விதிப்பிலிருந்து விலக்கு உண்டு.
அவர்களுடைய பெயரினில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்யும் போது அரசாங்கத்துக்கு வரி செலுத்த அவசியம் இல்லை. சட்டத்தில் உள்ள இந்த ஒரு ஓட்டையினை பயன்படுத்தி விவகாரத்து எனும் புதியயுக்தியை சீனா நாடு தம்பதியர் பயன்படுத்தி வருகிறார்கள். இப்படி விவகாரத்து செய்து கொள்ளுபவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம். இதனால் சீனாவில் கடந்த 4 ஆண்டுகளை காட்டிலும் தற்சமயம் விவகாரத்து கூடுதலாகியுள்ளது என் கூறபடுகிறது.
Increasing Divorce in China. About 41 percent of divorce in 6 months are done to avoid property tax
about 40,000 married couples have divorced in the capital of china, Beijing in the 1st 9 months of the year 2013.