விரைவில் செவ்வாய் கிரகத்தில் இந்திய செயற்கை கோள்: இஸ்ரோ

Indian satellite to orbit around Mars செவ்வாய்க்கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா விரைவில் செயற்கைகோளை அனுப்பவுள்ளது. இந்நிலையில் இத்திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் நேற்று கருத்து வெளியிட்டுள்ளார். அதில் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்கு இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகள் வெறும் பெருமைக்காக மட்டுமல்ல. அதில் வியாபர நோக்கமே முன்னிற்கிறது. இந்த ஆண்டு ஆகஸ்டு தொடக்கம், நவம்பர் மாதம் வரை ஏதாவது ஒரு திகதியில் செவ்வாய்க்கிரகத்திற்கான ஆராய்ச்சி பயணம் தொடங்கும். பி.எஸ்.எல்.வி ராகெட் மூலம் செயற்கை கோள், செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்படும். நவம்பர் மாதம் இந்தப் பயணம் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். பூமியிலிருந்து செயற்கை கோள் ஏவப்பட்டதும் 10 மாதங்கள் தொடர்ந்து பயணித்து, 2014ம் ஆண்டு இந்த செயற்கை கோள் செவ்வாய் கிரகத்தை சென்றடையும். இந்த செயற்கை கோளின் எடை, 15 கிலோவாக இருக்கும். ஐந்து முக்கிய கருவிகள்…

Read More

பாகிஸ்தானில் இந்து கிறிஸ்தவ பெண்களிடம் பாலியல் பலாத்காரம்: அமெரிக்க அறிக்கை

Hindus in Pakistan are the worst victims of rape, says a report by an independent American group. வாஷிங்டன்: பாகிஸ்தானில் நடைபெறும் கற்பழிப்பு சம்பவங்களுக்கு இந்து பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக அமெரிக்காவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மத சுதந்திரம் என்ற தலைப்பில் அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் உலகளாவிய அளவில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த அறிக்கையின் முடிவு அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. ஷியா-சன்னி பிரிவினருக்கு இடையில் நடைபெற்ற 203 இன மோதல் சம்பவங்களில் 717 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 635 பேர் ஷியா பிரிவினர் என்பது தெரிய வந்துள்ளது. பலியாகும் இந்துப் பெண்கள் பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்களை குறிவைத்து கடந்த 18 மாதங்களில் 16 தாக்குதல் நடைபெற்றுள்ளன. இந்த தாக்குதல்களில் 3 இந்துக்கள் பலியாகியுள்ளனர். 4 பேர் படுகாயமடைந்தனர். கடந்த…

Read More

நாட்டின் பொருளாதார வளர்ச்சி: பிரதமர் நடவடிக்கை?

Manmohan Singh assures industry of economic recovery புதுடில்லி:”நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மிகவும் கவலைக்குரிய நிலையில் உள்ளது. இந்த நிலையை, சரி செய்து, மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்புவதற்கு, தேவையான உறுதியான நடவடிக்கைகளை, மத்திய அரசு தொடர்ந்து எடுக்கும்,” என்று பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். சீர்திருத்த நடவடிக்கை:டில்லியில்,”அசோசெம்’ அமைப்பின், கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு, பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:நாட்டில் பொருளாதார மந்த நிலை, அதிகமாக காணப்படுகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது, திருப்திகரமாக இல்லை. இது கவலையளிக்கிறது. ஆனாலும், இதை சரி செய்தே தீருவது என்ற உறுதியுடன்,மத்திய அரசு செயலாற்றிக் கொண்டு வருகிறது. யாரும் பீதியடையத் தேவையில்லை என்ற வகையில், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில், அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. எனவே, நாட்டின் பொருளாதாரம், மீண்டும் வளர்ச்சி பாதையில் பயணிக்கும் நாள், வெகுதூரத்தில்…

Read More

கவிஞர் வாலி மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்

tamil poet vaali dead வெள்ளிக்கிழமை, ஜூலை 19,2013:  கவிஞர் வாலி உடல் நலம் சரியில்லாமல் உயிரிழந்ததை தொடர்ந்து அவருக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் செய்தி தெரிவித்துள்ளனர்.  கவிஞர் வாலி உடல் நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் மரணமடைந்தார். இவருக்கு தே.மு.தி.க, தலைவர் விஜயகாந்த், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் தங்களது இரங்கலை தெரிவித்தள்ளனர். இது குறித்து இவர்கள் தெரிவித்துள்ள இரங்கலில், தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உட்பட அனைத்து பிரபலங்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். தமிழுலகம் போற்றும் சிறந்த கவிஞர்களில் வாலியும் ஒருவர். தத்துவ பாடல்களை எழுதுவதில் முத்திரைப் பதித்தவரான இவர் துள்ளல் பாடல்களையும் எழுதியிருக்கிறார். இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய சாதனைக்கு சொந்தக்காரர். கவிஞர் வாலியின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு.…

Read More

ஜெ.ஜெ.நகர் காவல் ஆய்வாளர் மகள் லண்டனில் தூக்கிட்டு தற்கொலை

19 year old tamil girl committed suicide in london. She is Miss Georgina Daughter of Chennai JJ Nagar Police inspector Mr Thomson. லண்டன்: இங்கிலாந்தில் படித்துவந்த சென்னையைச் சேர்ந்த 19 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஜார்ஜினா என்ற அந்தமாணவி லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் விமான பராமரிப்பு பொறியியல் கல்வி பயின்று வந்தார். ஜார்ஜினாவின் தந்தை தாம்சன், சென்னை ஜெ.ஜெ.நகர் காவல்நிலைய ஆய்வாளராக உள்ளார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று ஜார்ஜினா மரணமடைந்துவிட்டதாக பெற்றோர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. மாணவி ஜார்ஜினா எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்ற விவரம் தெரியவில்லை.  தேர்வில் தோல்வியடைந்ததால் மன வருத்தத்தில் ஜார்ஜினா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஜார்ஜினாவின்…

Read More

பீகாரில் பள்ளியில் மதிய உணவு: 16 குழந்தைகள் பலி

16 children dead after mid-day meal in Bihar பாட்னா – பீகாரில் உள்ள ஒரு பள்ளியில் மதிய உணவுண்ட 16 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தச் சம்பவம்  நாடு முழுவதும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. பீகார் சரண் மாவட்டத்தினைச் சார்ந்த ஒரு அரசு ஆரம்பப் பள்ளியில் இந்த  பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது. மனிதவள மேம்பாட்டுத்துறையினைச் சார்ந்த ஒரு அதிகாரி இது பற்றி விசாரணைச் செய்வதற்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியான குழந்தைகள் எட்டு முதல் பனிரெண்டு வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். மரணம் அடைந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ரூ 2 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் பற்றி ஆராய்வதற்காக ஒரு குழுவினையும் அவர் நியமித்துள்ளார். இந்தியாவில் ஏறத்தாழ 13 கோடி மாணவர்கள் ஆரம்ப பள்ளியில் பயின்று வருகின்றனர். இதற்கு முன்பாக கோவாவில் 23 குழந்தைகளும், ஒரிஸாவில் 30 குழந்தைகளும், டெல்லியில் 40…

Read More

அமெரிக்க உளவுதுறையின்(NSA) போக்கு: அமெரிக்காவிற்கு அவமானம்

Information to Cause us Government Worst Damage in History. வரலாற்றில் அமெரிக்காவை இதைவிட வேறு யாராலும் அவமானப்படுத்த முடியாது என்ற நிலையில், அந்த அரசுக்கு எதிராக ஸ்னோடென் கைவசம் அவ்வளவு தகவல்கள் உள்ளதாக, ஸ்னோடெனின் ரகசியங்களை அம்பலப்படுத்திவரும் The Guardian பத்திரிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் அதிகாரி ஸ்னோடென், ”இணைய தளங்களில் ஊடுருவி அமெரிக்கா உளவு வேலை பார்க்கிறது” என்று அமெரிக்காவிற்கு எதிராக பகிரங்கமாக தகவலை வெளியிட்டார். இதனை அடுத்து அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டு அவர் மாஸ்கோ விமானநிலையத்தில் பதுங்கியுள்ளார். உலக நாடுகள் அவருக்கு தஞ்சம் அளிக்க கூடாது என்று அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்தபின்னும் அவருக்கு க்யூபா, நிகராகுவே, வெனிசுலா போன்ற அழைப்பு விடுத்தன. இந்த நிலையில் ஸ்னோடென் பிரிட்டனில் தற்போது தஞ்சம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் கார்டியன் பத்திரிக்கையின் கட்டுரையாளர் க்லீன்…

Read More

மும்பை பார்களில் அழகிகள் டிஸ்கோத்தே: நீதிமன்றம் அனுமதி

dance bars in maharashtra மும்பை பார்களில் டிஸ்கோத்தே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்திற்கு தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெண்கள் நடனமாடும் பார்கள் செயல்பட்டு வந்தன. குறிப்பாக மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களிலும் மற்ற முக்கிய நடன அரங்களிலும் இது போன்ற நடனங்கள் நடந்தன. இதற்கு எதிராக மும்பை போலிசார் கடந்த 2005ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உயர் நிதிமன்றம் நடன பார்கள் நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்தது, இதையடுத்து 7 ஆண்டுகள் மும்பையில் பெண்கள் பார்களில் நடனமாடவில்லை. இந்த தடையை எதிர்த்து மகாராஷ்டிரா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு அனுமதி வழங்கப்பட்டதால், இதனை எதிர்த்து மாநில அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மும்பையில் பார்களை மீண்டும் திறந்து ஆட்டம் போடலாம் என்றும், பார்களில் ஆட்டத்திற்கு…

Read More

சென்னையில் அதிகரித்து வரும் பெண் பிக் பாக்கெட்டுகள்

increasing women pick pockets in chennai சென்னை மாநகர பேருந்துகளில் பிக் பாக்கெட் அடிக்கும் பெண்கள் அதிகரித்துள்ளனர். ஆண்களாக இருந்தால் கவர்ச்சி காட்டியும், பெண்களாக இருந்தால் அன்பாக பேசியும் பிக் பாக்கெட் அடிக்கிறார்களாம். இந்த பெண்கள் அனைவரும் இணைந்து ஒரு கும்பலாக செயல்படுகின்றனர். ஆளுக்கு ஒரு ஏரியாவாக பிரித்து பஸ்களில் ஏறி காலை முதல் மாலை வரை பிக்பாக்கெட்டில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். குறிப்பாக இவர்கள் யாருக்குமே சென்னை சொந்த ஊர் கிடையாதாம். மாறாக வெளியூர்களில் இருந்து இங்கு வந்து திருடி செல்கின்றனர். பஸ்களில் ஏறிய பின், ஆண்களாக பார்த்து அருகே சென்று உரசுவது, இடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்களாம். அப்போது ஆண்களின் கவனம் திசைமாறிய பின், இன்னொரு பெண் குறித்த ஆணின் பர்ஸை திருடிவிட்டு சென்று விடுவாராம். இதுவே பெண்ணாக இருந்தால் அன்பாக பேசி நடித்து திருடுவார்களாம். இவர்கள் அனைவரும் வெளியூரை சேர்ந்தவர்கள் என்பதால், பிடிக்க முடியாமல்…

Read More

160 ஆண்டு கால தந்தி சேவை முடிவுக்கு வந்தது

The 163-year old telegram service in the country is end ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ளவர்களுக்கும் அவசர செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்க உதவிய 160 ஆண்டு கால பழைமையான தந்தி சேவை இந்தியாவில் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்தியாவில் பரீட்சார்த்த(சோதனை) முறையில் 1850ம் ஆண்டு கொல்கத்தாவில் முதன் முதலாக தந்தி சேவை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனியார் மட்டுமே பயன்படுத்தி வந்த தந்தி சேவை 1854ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அன்று முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் பிறப்பு, இறப்பு உள்ளிட்ட அவசர செய்திகளை பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ள தங்களின் உறவினர்களுக்கு தந்தி மூலமாகவே பரிமாறி வந்தனர். செல்போன், இ.மெயில் போன்ற நவீன வசதிகள் பெருகிவிட்டதால் தந்தி சேவையின் முக்கியத்துவம் மக்களிடையே சிறுகச்சிறுக குறையத் துவங்கியது. இதன் விளைவாக,…

Read More