இலங்கை தமிழர் பிரச்சினை: பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்

LETTER TO PRIME MINISTER MANMOHAN SINGH REGARDING SRILANKAN ISSUE CHIEF MINISTER JAYALALITHA சென்னை, 15 – இலங்கை தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கும் 13 வது சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு ரத்து செய்து விடாமல் தடுக்க மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கு இன்னமும் கொடுமை நிகழ்ந்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாகவே அவர்கள் சிங்கள அரசின் கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின் போதும் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். பல தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும் கொல்லப்பட்டார். அவரது மகனான பச்சிளம் பாலகனும் சிங்கள வெறித்தனமான அரசால் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டான். இத்தனையும்…

Read More

தமிழக அரசு நிறுவனங்களுக்கு என்.எல்.சி பங்குகள்: முதல்வர் கடிதம்

Tamil Nadu Government team to meet SEBI பிரதமர் மன்மோகன்  சிங், என் எல் சி பங்குகள் விற்பனை குறித்து அனுப்பிய  கடிதத்திருக்கு  பதில் அளிக்கும்  வகையில் கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, என் எல் சி போராட்டத்துக்கு விரைந்து தீர்வு காண தமிழக அரசு நிறுவனங்களுக்கு என்.எல்.சி பங்குகளை விற்பனை செய்வது குறித்து யோசிப்பது முன்னேற்றகரமான சூழ்நிலை அமையும் என்று பதில் கடிதம் எழுதியுள்ளார். தமிழக அரசின் உயரதிகாரிகள் அடங்கிய குழு நாளை மறுநாள் மும்பை செல்லும். அங்கு மத்திய அரசு மற்றும் செபி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என அதில் குறிப்பிட்டுள்ளார். என் எல் சி பங்குகள் விற்பனையை வடிவமைப்பது, செயல்படுத்துவது குறித்து இந்த பேச்சுவார்த்தையில் இறுதி செய்யப்படும். என் எல் சி தொழிலாளர்களின் போராட்டத்துக்கு விரைந்து தீர்வு காண இந்த நடவடிக்கை முன்னேற்றமான சூழ்நிலையாக அமையும், என் எல் சியின் 5…

Read More

அமெரிக்காவுடன் இணைந்து தொழில்வாய்ப்பு – ப.சிதம்பரம்

India US to work together : Chidambaram வாஷிங்டன்: அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில் கூட்டத்தின் 38-வது தலைமை உச்சி மாநாடு வாஷிங்டனில் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசிய போது, இந்தியா பொருளாதார சீர்திருத்ததை மேற்கொள்ள உள்ளது.  இந்நிலையில் அமெரிக்காவுடன் இணைந்து புதிய தொழில் வாய்ப்புகளை இந்தியாவில் ஏற்படுத்துவது பெரும் வாய்ப்பாக கருதுகிறேன். இதனால் பல இந்திய நிறுவனங்களின் அந்தஸ்து உயர்வதோடு அமெரிக்க இந்திய நிறுவனங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி நிலவும். அது பொருளாதார மேம்பாட்டிற்கான அடித்தளமாகவும் அமையும், என்று கூறினார். English Summary: India US to work together : Chidambaram Washington: Making a passionate plea to the US and Indian businesses to work together for a prosperous society, Finance Minister…

Read More

போலி என்கவுன்ட்டர்: 13 போலீஸார் உள்பட 21 பேருக்கு ஆயுள் தண்டனை

13 Mumbai policemen get life imprisonment in fake encounter case மும்பை: ஜூலை 13, 2013: நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கூட்டாளி என்ற சந்தேகத்தின் பேரில், 7 வருடங்களுக்கு முன்னர் மும்பையில் நடந்த போலி என்கவுண்டர் தொடர்பிலான வழக்கு ஒன்றில், 13 போலீஸார்  உள்ளிட்ட 21 பேருக்கு ஆயுள் தண்டனை அளித்து மும்பை செஷன் நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. மும்பையை சேர்ந்த ராம் நாராயண் குப்தா என்பவர், மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு நெருக்கமானவர் எனக்கூறி 2006 இல் போலீசாரால்  என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு எதிராக அவரது சகோதரரும் வழக்கறிஞருமான ராம் பிரசாத் குப்தா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதால் இந்த வழக்கை விசாரிப்பதற்கு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. போலி என்கவுண்டரில் தொடர்புடைய பிரதீப்…

Read More

பேரறிவாளன் கருணை மனு நிராகரிப்பு: மத்திய தகவல் ஆணையம்

CIC rejects Rajiv Gandhi assassination case convict A G Perarivalan’s RTI plea புதன், 10 ஜூலை 2013: புதுதில்லி முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதியாக  வேலூர் சிறையில் இருக்கும், பேரறிவாளன்  குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை நீண்ட நாட்களுக்கு பிறகு நிராகரிக்கப்பட்டது.  நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை அவருக்கு தெரிவிக்க மத்திய தகவல் ஆணையம் மறுத்துவிட்டது. இதை தொடர்ந்து எந்த நேரத்திலும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு உயிர் பிரியும் நிலை இருப்பதால் தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள விரும்புவதாக வேலூர் சிறையிலிருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மத்திய தகவல் ஆணையத்திற்கு பேரறிவாளன் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை கடந்த மாதம் 26 ஆம் தேதி மத்திய தகவல் ஆணையம் நிராகரித்துவிட்டது. இதுதொடர்பாக ஆணையத்தின் தலைவர் சுஷ்மா சிங் பிறப்பித்துள்ள உத்தரவில்…

Read More

கென்யாவில் 1000க்கும் அதிகமான பள்ளிச் சிறுவர்கள் கைது: மதுப்பழக்கம்

school students arrested in kenya for alcohol consumption  10 ஜூலை 2013: கென்யாவில் மதுப்பழக்கத்தில் ஈடுபட்டதாக 1000க்கும் அதிகமான பள்ளிச் சிறுவர்களை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்தனர்.  கென்யாவில் சம்பள உயர்வு கோரி ஆசிரியர்கள் கடந்த மூன்று வாரமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பள்ளிகள் அனைத்தும் இயங்காததால், பெரும்பாலான பள்ளிச் சிறுவர்கள் கிளப்புகள் மற்றும் மதுபானக்கடைகளில் சுற்றித் திரிகின்றனர். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல்துறையினர் தலைநகர் நைரோபியில் மட்டும் மதுப்பழக்கத்தில் ஈடுபட்ட 1000-க்கும் அதிகமான பள்ளிச் சிறுவர்களை கைது செய்தனர். school students arrested in kenya for alcohol consumption English Summary: More than 1,000 children suspected of under-age drinking were arrested in Kenya’s capital Nairobi over…

Read More

மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால்…: திலகவதி IPS

காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் தான் நிம்மதியான இல்லற வாழ்க்கை வாழ முடியும் என முன்னாள் காவல் துறை அதிகாரி திலகவதி தெரிவித்துள்ளார்.  தமிழக அரசானது காவல் துறையில் பணியாற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு குழு ஒன்றை அமைத்திருக்கின்றது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஐ.ஜி.சீமா அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் மூன்று காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஒரு பெண் சட்ட வல்லுநர் உள்ளிட்ட 5 பேர் உறுப்பினர்களாக அமைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு குறித்து பி.பி.சியில் கருத்தை பதிவு செய்த முன்னாள் காவல் துறை உயர் அதிகாரியான திலகவதி காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் தங்களது மேலதிகாரிகளை அனுசரித்துச் சென்றால் தான் அவர்கள் தங்களது இல்லற வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க முடியும். மேலும் காவல் துறை…

Read More

வானத்தில் இரண்டு நிலாக்கள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

பல ஆண்டுகளுக்கு முன்னாள் வானத்தில் இரண்டு நிலாக்கள் இருந்ததாகவும், பின்னர் ஒன்றுடன் ஒன்று ஈர்க்கப்பட்டு அவை ஒரே நிலாவாக மாறியதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரியக் குடும்பத்தில் சில கிரகங்களுக்கு இரண்டு அல்லது மூன்று துணைக்கோள்கள் இருக்கும். ஆனால் நாம் வாழும் கிரகமான பூமிக்கு ஒரே ஒரு துணைக்கோள் மட்டுமே உண்டு. இந்நிலையில் முன்னைய காலங்களில் இரண்டு நிலாக்கள் இருந்ததாகவும், அவை ஒன்றுடன் ஒன்று ஈர்க்கப்பட்டு ஒரே நிலாவாக மாறியதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நிகழ்வு சில மில்லியன் நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே நிகழ்ந்து இருக்கலாம் என்றும் கலிபோர்னியா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இரு கோள்களும் மிதமான வேகத்தில் மோதிக் கொண்டதை தொடர்ந்து, 2வது நிலாவை அதனுடன் சுற்றி வந்த முதல் நிலா ஈர்த்துக் கொண்டு விட்டது என அவர்கள் தெரிவிக்கின்றனர். இரண்டு நிலா மோதிக் கொண்டதின் விளைவாகவே, தற்போது உள்ள நிலவின் மேற்பரப்பில் மலை போன்ற…

Read More

சீனாவில் தாய்ப்பால் விற்பனை

சீனாவில் தற்போது தாய்ப்பால் விற்பனை சூடுபிடித்துள்ளது, இதற்கு கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. சீனாவில் ஊட்டச் சத்து நிறைந்தது, உடலுக்கு அதிக எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என்பதால் தாய்ப்பாலை புட்டியில் அடைத்து விற்க பல ஏஜென்சிகள் திடீரென முளைத்துள்ளன. இதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்க பணக்காரர்கள் தயாராக உள்ளனர். தங்களது குழந்தைகளுக்கு மட்டுமின்றி இளவயதினரும் தாய்ப்பாலை விலைக்கு வாங்கி குடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக சிறிய அளவிலான இயந்திரங்களும் மறைமுகமாக விற்பனைக்கு வந்துள்ளன. தாய்மார்களிடம் இருந்து சிறிய பம்ப் மூலம் தாய்ப்பாலை உறிஞ்சி கணிசமான விலைக்கு விற்கின்றனர். இதற்காக தாய்மார்களுக்கு கூலியும் கொடுக்கப்படுகிறது. ஒருவருக்கு அவரவர் உடல் தகுதிக்கு ஏற்ப ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை கூலியாக கொடுக்கப்படுகிறது. இதற்காக ஏராளமான புரோக்கர்கள், கிராமங்களில் உள்ள குழந்தை பெற்ற ஏழை தாய்மார்களை அடிமாட்டு…

Read More

இளவரசன் மரணம் தற்கொலை – வாய்ப்பு இல்லை: மனித உரிமை கழகம்

தர்மபுரி மாவட்டத்தில் காதல் பிரச்சனையால் உயிரிழந்த இளவரசன் மரணம் தொடர்பான தகவல்களை மனித உரிமைக் கழகமானது புலனாய்வு நடத்தி தகவல்களை வெளியிட்டுள்ளது. விவசாய விடுதலை முன்னணி அமைப்பினர் துணையுடன் நடத்தப்பட்ட இந்த புலனாய்வு தகவலில், இளவரசன் உடலானது ரயில் தண்டவாளம் அருகே கிடந்துள்ளதால் அவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகின. ஒரு ரயிலின் முன்பு ஆடு மாடு பாய்ந்து இறந்தால் கூட சம்பந்தப்பட்ட ரயிலின் டிரைவர் அதை அருகில் உள்ள ஸ்டேசன் மாஸ்டரிடம் தெரிவிப்பது வழக்கம். ஆனால் இளவரசன் உடல் கண்டெடுக்கப்பட்ட நேரத்தில் கடந்து சென்ற குர்லா எக்ஸ்பிரசின் ஓட்டுநர் அப்படி ஒரு தகவலை ஸ்டேசன் மாஸ்டருக்கு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தர்மபுரி ரயில் நிலையத்தின் கேங்க் மேன்னாக வேலை பார்த்து வந்த கவுடு என்னும் தொழிலாளிதான் இளவரசன் உடலைக் கண்டு ஸ்டேசன் மாஸ்டருக்கு தெரிவித்திருக்கின்றார். மேலும்…

Read More