கருணாநிதியின் தத்துப்பிள்ளை, மு.க.மணியை கண்டுபிடிக்க நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என, அ.தி.மு.க., செயற்குழு உறுப்பினர் பரிதி இளம்வழுதி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க., அரசின், இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம், அமைச்சர் வளர்மதி தலைமையில் நேற்று சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பரிதி இளம்வழுதி கருத்து வெளியிடுகையில், தி.மு.க.,வில் இருப்பது கும்பல், அ.தி.மு.க.,வில் இருப்பது கூட்டம். கும்பல் கூடி கலைந்துவிடும்; கூட்டம் நிலையாக நிற்கும். நானும் நிலையாக உங்களுடன் நிற்பேன். தமிழக அரசியலில், குழப்பம் ஏற்படும் தேர்தலில் தான், தி.மு.க., எளிதாக வெற்றி பெறும். ஆரோக்கியமாக தேர்தல் நடந்தால் தி.மு.க., வெற்றி பெறாது. 30 ஆண்டுகளாக தி.மு.க.,விற்கு உழைத்தேன், நான் என்ன தவறு செய்தேன். 1991 – 1996ம் ஆண்டு தனி எம்.எல்.ஏ.,வாக சட்டசபையில் செயல்பட்டேன். நான் அப்போது, அ.தி.மு.க.,வில் சேர்ந்து இருந்தால், உதயசூரியன் சின்னம் முடங்கியிருக்கும்,…
Read MoreAuthor: NR Sharavanan
மருத்துவ கலந்தாய்வு இன்று தொடங்கியது
புதுச்சேரியில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான பொது கலந்தாய்வு இன்று தொடங்கியது. முதல் கட்ஆப் மதிப்பெண் வாங்கிய மாணவி தேஜல் அரசு மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தார். இரண்டாவது இடம் வாங்கிய மாணவி அமிர்தசாய் தனியார் மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தார் . இன்றைய கலந்தாய்வுக்கு 698 மாணவ , மாணவியர் அழைக்கப்பட்டுள்ளனர்.
Read Moreசிவகாசியில் 100 சவரன் நகை கொள்ளை
விருதுநகர் – சிவகாசியில் அச்சக உரிமையாளர் செந்தில் பாபு வீட்டில் திருட்டு . செந்தில் பாபு திருவனத்தபுரம் சென்று இருந்த பொது இச்சம்பவம் நேரிட்டது. அவர் அடுக்கு மாடி குடிஇருப்பில் மூன்றாவது மாடியில் வசித்து வந்தார் . அவரது வீட்டில் இருந்த 100 சவரன் நகை மற்றும் 40,000 ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்தனர். போலீசார் வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .
Read Moreசெகந்திராபாதில் இரண்டு அடுக்கு ஹோட்டல் இடிந்து விழுந்தது-6 பேர் பலி
ஆந்திராவின் -செகந்திராபாதில் இரண்டு அடுக்கு மாடிஹோட்டல் இடிந்து விழுந்தது. சிட்டி லைட் ஹோட்டல் செகந்திராபாதில் உள்ளது . இன்று அதிகாலை இந்த ஹோட்டல் திடீர்ரென இடிந்து விழுந்தது, இதில்ஆறு பேர் பலி . 40க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக தகவல். தீயணைப்பு படையினர் சிக்கி இருப்போரை மீட்கும் முயற்சியில் ஈடு பட்டுள்ளனர்.
Read Moreலோக்பால் விவகாரத்தில் துரோகம். மீண்டும் போராட்டம்:அன்னாஹசாரே
Anna Hazare accuses UPA of betrayal on Lokpal, threatens fresh stir புதுடெல்லி, ஜூலை 6– லஞ்சம், ஊழலை ஒழிக்க வகை செய்யும் வலுவான லோக்பால் சட்டம் கொண்டு வரக்கோரி பிரபல காந்திய வாதி அன்னாஹசாரே கடந்த 2011–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12 நாள் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். அவரது உண்ணாவிரத போராட்டம் காரணமாக ஊழலுக்கு எதிராக நாடெங்கும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டது. இதனால் அன்னாஹசாரேக்கு ஆதரவு பெருகியது. ஊழலுக்கு எதிராக மக்கள் அலை, அலையாக திரள்வதை கண்டு அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் அரசு வேறு வழியில்லாமல் பணிந்தது. ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் மசோதா ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. பாராளுமன்றத்தில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் லோக்பால் உறுப்பினர்கள் மற்றும் செயல்படுத்தும் விஷயத்தில் அன்னா ஹசாரேக்கும் மத்திய அரசுக்கும் இடையே கருத்து…
Read Moreவிஞ்ஞானி டக்ளர்ஸ் எங்கிள்பாட் காலமானார்
உலகத்தின் மிகச்சிறந்த விஞ்ஞானியும் கணினிக்கான மவுஸ்சை கண்டு பிடித்தவருமான டக்ளர்ஸ் எங்கிள்பாட் தனது 88 வது வயதில் சிறுநீரக கோளாறால் கடந்த செவ்வாய் இரவு காலமானார் . விஞ்ஞானி டக்ளர்ஸ் எங்கிள்பாட் அமெரிக்காவைச் சேர்ந்தவர் . 1925-ம் ஆண்டு போர்ட்லாண்டில் பிறந்த இவர் ஆகுமென்டேசன் ஆராய்ச்சி மையத்தில் 1960-களில் பணியாற்றினார். அப்போது, கம்ப்யூட்டரை மனிதர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் மவுசைக் கண்டுபிடித்தார். சான் பிரான்ஸிஸ்கோவில் 1000 விஞ்ஞானிகள் முன்னிலையில் மவுசை அறிமுகப்படுத்தி இவர் மணிக்கணக்கில் பேசினார். டக்ளர்ஸ் எங்கிள்பாட்தனது இரண்டாவது மனைவி காறின் ஓ லார்ரியுடன் வாழ்ந்து வந்தார், இவருடைய முதலாவது மனைவி பலாட் 1997 ல் மரணமடைந்தார்.இவருக்கு கார்டா, டயானா, கிறிஸ்டீனா, நோர்மன் ஆகிய நான்கு பிள்ளைகள் உள்ளனர் . Father of the computer mouse DOUGLAS ENGELBART died
Read Moreகிராம்பும் உடல் ஆரோக்யமும்: மிகச் சிறந்த நிவாரணி.
Medicinal tips of cloves கிராம்பின் மகிமை கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. கிராம்பு என்பது ஒரு பூவின் மொட்டு . இந்த மரத்தின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.கிராம்பு பல் வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமலுக்கு மிகச் சிறந்த நிவாரணி. ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது. கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது. சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி…
Read Moreவைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடி குண்டு மிரட்டல்
மதுரையில் இருந்து தினமும் காலை 6.55 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்றும் வழக்கம் போல் புறப்பட்டு திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் காலை 8.55 மணிக்கு திருச்சி வந்து 9 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்லும். இந்த நிலையில் காலை 8.45 மணிக்கு சென்னையில் உள்ள ரயில்வே உயர் அதிகாரி ஒருவருக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘திருச்சியில் இருந்து பேசுகிறேன். வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. 9 மணிக்கு வெடிக்கும்’ என்று கூறி விட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார். இச்செய்தி உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வைகை எக்ஸ்பிரஸ் 8.55 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் வந்தடைந்ததுஉடனடியாக அனைத்து பயணிகளையும் கீழே இறங்கும்படி போலீசார் கூறினர். இதற்கிடையே பயணிகளுக்கு வெடிகுண்டு பற்றிய தகவல் தெரியவந்தது.…
Read Moreஇந்தியா உள்பட 38 நாடுகளின் தூதரகத்தை அமெரிக்கா உளவு
India, including the embassies of 38 countries watched the shocking secret U.S. intelligence have been reported. அமெரிக்கா: வாஷிங்டன்: இந்தியா உள்ளிட்ட 38 நாடுகளின் தூதரகங்களை அமெரிக்க புலனாய்வுத் துறையினர் உளவு பார்த்துள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்துள்ளது. அமெரிக்க உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றிய எட்வர்டு ஸ்நோடென், தன் நாட்டு தேசிய பாதுகாப்பு அமைப்பின் அத்துமீறல் உளவு நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களை பதிவு செய்த லேப்டாப்புடன் கடந்த மாதம் ஹாங்காங்குக்கு தப்பி வந்தார். அங்கு அந்த ஆவணங்களை உலகுக்கு வெளியிட்டார். இதனால் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரமாக இறங்கி உள்ளது. ஆனால், ஹாங்காங்கில் இருந்து ரஷ்யாவுக்கு சென்ற அவர், ஈகுவடார் நாட்டிடம் அடைக்கலம் கேட்டுள்ளார். தற்போது அவர் எங்கு உள்ளார் என்பது ரகசியமாக உள்ளது. சீனாவை, அமெரிக்கா உளவு…
Read Moreதொழில் துவங்க முன் வருவோர்களுக்கு ரூ.25 லட்சம் மானியம்
புதுக்கோட்டை: “”புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள் துவங்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு அரசு சார்பில், 25 லட்சம் ரூபாய் வரை மானியமும், வங்கிகள் மூலம் கடனுதவியும் பெற்றுத்தரப்படும்,” என மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது. புதுக்கோட்டையில் மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம் தொடர்பான கருத்தரங்கு நடந்தது. இதற்கு தலைமை வகித்து கலெக்டர் மனோகரன் பேசியதாவது:படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் நோக்கத்துடன் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம் கடந்த ஆண்டு(2012-13) முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் மூலம் தொழில் நிறுவனங்கள் துவங்க முன்வரும் படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிப்பதோடு, தொழில் நிறுவனங்கள் துவங்குவதற்கான திட்ட மதிப்பீடு, அரசு மானியம் மற்றும் வங்கிகள் மூலம் கடனுதவி பெற்றுக்கொடுக்கப்படும்.குறைந்தபட்சம் 5…
Read More