கவிஞர் வாலி மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்

tamil poet vaali dead

வெள்ளிக்கிழமை, ஜூலை 19,2013:  கவிஞர் வாலி உடல் நலம் சரியில்லாமல் உயிரிழந்ததை தொடர்ந்து அவருக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் செய்தி தெரிவித்துள்ளனர்.  கவிஞர் வாலி உடல் நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் மரணமடைந்தார். இவருக்கு தே.மு.தி.க, தலைவர் விஜயகாந்த், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் தங்களது இரங்கலை தெரிவித்தள்ளனர். இது குறித்து இவர்கள் தெரிவித்துள்ள இரங்கலில், தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உட்பட அனைத்து பிரபலங்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். தமிழுலகம் போற்றும் சிறந்த கவிஞர்களில் வாலியும் ஒருவர். தத்துவ பாடல்களை எழுதுவதில் முத்திரைப் பதித்தவரான இவர் துள்ளல் பாடல்களையும் எழுதியிருக்கிறார். இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய சாதனைக்கு சொந்தக்காரர். கவிஞர் வாலியின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு. இந்த இழப்பு தமிழ் உலகுக்கு மட்டுமல்ல, திரை உலகிற்கும் பொருந்தும் என கூறியுள்ளனர்.

கவிஞர் வாலி மறைவு குறித்து கவர்னர் கே.ரோசய்யா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் : தமிழில் 10 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிய கவிஞர் வாலியின் திடீர் மரணம் குறித்து கேள்விபட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது பாடல்கள் அனைத்தும் ஒவ்வொரு மனிதனின் இதயத்தை தொட்டதோடு மட்டுமல்லாமல் ஒரு செய்தியையும் வழங்கியது. கவிஞர் வாலியின் மறைவு, தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் கவிஞருக்கு வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன், அவரது ஆன்மா அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

tamil poet vaali dead

One of the legends of tamil cinema and literature , Kavignar Vaali has left for heavenly abode. Aged 81, the eminent poet-lyricist breathed his last on 18th July 2013 following prolonged illness. He will be greatly missed by the entire music world.

Related posts