கவிஞர் வாலி மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்

tamil poet vaali dead வெள்ளிக்கிழமை, ஜூலை 19,2013:  கவிஞர் வாலி உடல் நலம் சரியில்லாமல் உயிரிழந்ததை தொடர்ந்து அவருக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் செய்தி தெரிவித்துள்ளனர்.  கவிஞர் வாலி உடல் நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் மரணமடைந்தார். இவருக்கு தே.மு.தி.க, தலைவர் விஜயகாந்த், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் தங்களது இரங்கலை தெரிவித்தள்ளனர். இது குறித்து இவர்கள் தெரிவித்துள்ள இரங்கலில், தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உட்பட அனைத்து பிரபலங்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். தமிழுலகம் போற்றும் சிறந்த கவிஞர்களில் வாலியும் ஒருவர். தத்துவ பாடல்களை எழுதுவதில் முத்திரைப் பதித்தவரான இவர் துள்ளல் பாடல்களையும் எழுதியிருக்கிறார். இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய சாதனைக்கு சொந்தக்காரர். கவிஞர் வாலியின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு.…

Read More