கூடங்குளம் அணு உலை அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து 7 பேர் பலி

7 killed in bomb blast in village near Kudankulam nuclear plant

 koo

“இடிந்தகரை சுனாமி காலனியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக வெடிகுண்டு, நாட்டு வெடிகுண்டுகளை ஒரு கும்பல் ரகசியமாக தயார் உள்ளது. குண்டு தயாரித்த போது திடீர் என்று அந்த குண்டுகள் மொத்தமாக வெடித்துள்ளன. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்”.என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட கூத்தங்குழி கிராமங்களில் தாது மணல் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே தொடர்ந்து பல ஆண்டுகளாக கோஷ்டி மோதல் இருந்து வருகிறது. இந்த இரு கோஷ்டிகளும் தங்கள் பலத்தை காட்ட, கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வப்போது நாட்டு வெடிகுண்டுகளை வீசி வருகின்றனர். இதில் பயத்தில் உறைந்து போன மக்களில் சிலர் குடும்பங்களுடன் கூத்தங்குழியை விட்டு வெளியேறி உவரி, கூடுதாழை, சொக்கன்குடியிருப்பு மணல் மாதா ஆலயம், பெரியதாழை ஆகிய இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.

கூத்தங்குழியை விட்டு வெளியேறிய சிலர் இடிந்தகரை சுனாமி காலனியில் வசித்து வந்தனர். இவர்கள் அடிக்கடி கூடி தங்களுக்கு ஆலோசனை கூட்டம் நடத்தி வந்தனர். கடந்த வாரம் இடிந்தகரையில் தங்கி இருப்பவர்கள் வெளியேறுமாறு தண்டோரா போடப்பட்டது. எனினும் சொந்த ஊருக்கு சென்றால் ஆபத்து ஏற்படும் என கருதிய சிலர் சுனாமி காலனியில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் இடிந்தகரை சுனாமி காலனியில் நேற்று இரவு 7 மணிக்கு வெடிகுண்டு தயார் செய்து கொண்டிருந்த போது அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு திடீரென வெடித்தது. இதில் கூத்தங்குழியைச் சேர்ந்த வியாகப்பன் (35) சம்பவ இடத்திலேயே பலியானார். அந்த வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்த கூத்தங்குழியை சேர்ந்த சகாயம் மகள்கள் சுசிதா (14), சோனா (12), 2 வயது மகன் ஆகிய மூன்று குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினர். இந்த சம்பவத்தில் மேலும் ஒரு பெண்ணும் பலியானார். ஆனால் அவர் யார் என உடனடியாக அடையாளம் தெரியவில்லை.

இந்த சம்பவத்தில் இடிந்தகரை சுனாமி காலனியை சேர்ந்த சகாயம் மனைவி ரோஸி (38), சந்திய மிக்கேல் மகன் பாலிடெக்னிக் மாணவர் விஜய் (16), சேசு மரிய சூசை (45) உட்பட 15க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் அருகில் உள்ள 4 வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமானது. வெடி விபத்திலும், கட்டிட இடிபாடுகளிலும் பலர் காயமடைந்தனர்.

பின்னர் இது குறித்து நிருபர்களிடம்,”இடிந்தகரை சுனாமி காலனியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக வெடிகுண்டு, நாட்டு வெடிகுண்டுகளை ஒரு கும்பல் ரகசியமாக தயார் உள்ளது. குண்டு தயாரித்த போது திடீர் என்று அந்த குண்டுகள் மொத்தமாக வெடித்துள்ளன. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தனி போலீஸ் படை அமைத்து இருக்கிறோம்.என்றுபோலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி தெரிவித்தார்

7 killed in bomb blast in village near Kudankulam nuclear plant

Related posts