Wiki Loves Monuments: India edition of world’s largest photo contest announces winners
உலகத்தின் மிகப் பெரிய புகைப்பட போட்டியாக கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் செய்துள்ளவிக்கிபீடியா நடத்திய “இந்திய நினைவுச் சின்னங்கள்-2013′ என்ற புகைப்படப் போட்டியில் இவ்வருடம் இந்தப் போட்டிக்கு 11,786 புகைப்படங்கள் சென்றன. இதில் “சாஸ்த்ரா’ பல்கலைக்கழகத்தின் எம்.டெக். மெடிக்கல் நானோ டெக்னாலஜி இறுதியாண்டு மாணவர் கார்முகில்வண்ணன் முதல் பரிசு வென்றார்.
கார்முகில்வண்ணன் எடுத்த இந்தப் பரிசுக்குரிய புகைப்படம், புகழ்பெற்ற தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலின் முழுத் தோற்றத்தையும் அழகாக பிரதிபலிக்கும்படியாக எடுக்கப்பட்டுள்ளது. விக்கிபீடியாவின் இந்தப் போட்டி பல நாடுகளிலும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. போட்டியில் கலந்து கொள்ளும் புகைப்படங்கள், பன்னாட்டு நடுவர்களால் தேர்வு செய்யப்படுகிறது.
பல நாடுகளிலிருந்து வெற்றி பெறுபவர்கள் லண்டனில் ஆகஸ்ட் 2014-ல் நடைபெறும் விக்கிமீடியன் மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது. இந்தப் போட்டி உலகத்தின் மிகப் பெரிய புகைப்பட போட்டியாக கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.