அன்னை தெரசாவின் 103ஆவது பிறந்த நாள்

Today Mother Teresa 103rd birthday அன்னை தெரசா யூகோஸ்லோவியாவில் உள்ள ஸ்கோப்ஜி நகரத்தில் 26-08- 1910 ஆம் தேதி பிறந்தார் இவரத இயற்பெயர் ஆக்னஸ் கோஞ்செ பொயாஜியூ.அன்னை தெரசாவின் செல்லப்பெயர் கோன்ஸா. தந்தையின் பெயர் நிகோலா பொயாஜியூ . தாயின் பெயர் திரானி பெர்னாய். உடன் பிறந்தவர்கள் அக்கா அகா  மற்றும் அண்ணன் லாஸர். அன்னை தெரசா  தனது ஐந்து வயதிலேயே அனைத்து பாடங்களையும் நுனி நாக்கிலேயே வைத்திருப்பார். அவரது பாடல்கள் மற்றும் பாடங்களைப் பற்றிய பேச்சு மடை திறந்த வெள்ளம் போல் காணப்படும். படிப்பு தவிர நகைச்சுவை உணர்வும் மிக அதிகமாக இருந்தது. இதனாலேயே எல்லோருடைய கவனத்தையும் எளிதில் வசீகரித்து விட்டார். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார்.நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தறுவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர். முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார். 1970 ஆம்…

Read More

சென்னை மணலி புதுநகர் சிட்கோ வளாகத்தில் தீ விபத்து

SIDCO Industrial Complex fire in the plastic company சென்னை மணலி  புதுநகர்  விச்சூர் சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில்  பிளாஸ்டிக் தொழிற்சாலை உள்ளது. இங்கு 20க்கும்  மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த கம்பெனியின் உரிமையாளர் முரளி பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து மறு சுழற்சி செய்யும் தொழிற்சாலை. நேற்று இரவு வேலை முடிந்து கம்பெனியை பூட்டி சென்றனர். காவலாளி மட்டும் பணியில் இருந்தார். இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென குடோனில் தீப்பற்றியது.இதை பார்த்த காவலாளி மணலி  தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் உருகி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றமும், புகை மூட்டமும் ஏற்பட்டது. அருகில் இருந்த மற்ற அறைகளுக்கும் தீ பரவியது. இதுதொடர்பாக மணலி, அம்பத்தூர் மற்றும் எண்ணூரில் ஆகிய இடங்களில் இருந்து 4 தீ யணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3…

Read More

ஆஸ்திரேலியா ஆற்றில் குளித்தவரை முதலை கடித்து கொன்றது

Crocodile suspected of snatching man in Australia  ஆஸ்திரேலியாவில் தென் கிழக்கில் உள்ள யூனியன் பிரதேசம் டார்வின். சுற்றுலா தலமான இங்கு ‘மேரி ரிவர்’ என்ற ஆறு ஓடுகிறது. சம்பவத்தன்று டார்வின் நகரை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவர் தனது நண்பரின் பிறந்த நாளை குதுகலமாக கொண்டாடினார்.பின்னர், நண்பர்கள் இருவரும் அந்த ஆற்றில் நீந்தி குளித்தனர். அப்போது, ஒரு கொடூர 16 அடி நீள முதலை 27 வயது வாலிபரை தண்ணீருக்குள் இழுத்து சென்று கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும், இந்த ஆற்றில் அதிக முதலைகள் இருப்பதால் யாரும் குளிக்கவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். Crocodile suspected of snatching man in Australia Police say they have found…

Read More

மாடு பிடிக்கப்போய் குட்டையில் மூழ்கிய 3 பள்ளி மாணவிகள் பலி

3 girls drown in lake trying to stop cow from entering காஞ்சிபுரம் அருகே மாட்டின் உயிரைக் காப்பாற்றுவதற்காக குட்டையில் இறங்கிய 3 மாணவிகள், நீரில் மூழ்கி பரிதாபமாகப் பலியானார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆண்டி சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தனலட்சுமி (14), ஷாலினி ( 14) மற்றும் அஜிதா (12). இதில் முறையே தனலட்சுமியும், ஷாலினியும் 9ம் வகுப்பும், அஜிதா 7ம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று விடுமுறை தினமாததால் மூவரும் அருகில் உள்ள பகுதிக்கு மாடு மேய்க்கச் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் மேய்த்து வந்த மாடு ஒன்று அருகிலிருந்த குட்டைக்குள் இறங்குவதைக் கண்டுள்ளனர் அவர்கள். உடனடியாக மாடு நீரில் மூழ்கி விடாமல் வெளியே விரட்டுவதற்காக ஒருவர் பின் ஒருவராக குட்டையில் இறங்கியுள்ளனர். மூவருக்குமே நீச்சல் தெரியாத…

Read More

கொடுங்கையூரில் 13 வயது மாணவி மாரடைப்பால் மரணம்

13 year old student dead in heart attack கொடுங்கையூரில் 13 வயதேயான மாணவி நசீஃபா அஃசின் மாரடைப்பு காரணமாக பள்ளியிலேயே இறப்பைத் தழுவியுள்ளார். கொடுங்கையூரில் தையற்கலைஞராகப் பணிபுரியும் சையத் நியாஸ் என்பவரின் மகளான நசீஃபா,வழக்கம் போல நேற்று முன்தினம், பள்ளிக்குச் சென்று, முதல் வரிசையில் அமர்ந்து வகுப்பில் பாடம் கவனித்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வகுப்பு ஆசிரியை மற்றும் சக மாணவர்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திற்குத் தகவல் அளித்து, அவர்கள் மூலம் மருத்துமனைக்கு நசீஃபாவை எடுத்துச் சென்றனர். ஆனால் நசீஃபா திடீர் மாரடைப்பு காரணமாக, மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெற்றோருக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். நசீஃபாவுக்கு இதய நோய் இருந்ததற்கான ஆவணங்களை தந்தை  சையத் நியாஸ் காவல்துறையினரிடம் சமர்ப்பித்ததையடுத்து, இம்மரணத்தை வழக்காகப் பதிவு செய்யாமல்…

Read More

அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டுக் கொலை

Indian man shot dead in the US கலிபோர்னியாவில் கொலை செய்யப்பட்ட இந்தியர் மன்பிரீத் குமான் சிங் வழக்கு குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ. 253,429.99 பரிசு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மஜ்கி கிஷேவாலி கிராமத்தைச் சேர்ந்தவர் மன்ப்ரீத் குமான் சிங்(27). அவர் கலிபோர்னியா சவுத் லேக் தஹோவில் உள்ள கேஸ் ஸ்டேஷனில் கிளார்க்காக வேலை பார்த்து வந்தார். அவர் கடந்த 6ம் தேதி மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளி யை தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. கேஸ் ஸ்டேஷனில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த குற்றவாளியின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். ஆனால் குற்றவாளி தனது முகத்தை துணியால் மறைத்துள்ளார். இந்நிலையில் குற்றவாளி குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ.253,429.99…

Read More

தர்மபுரியில் கருக்கலைப்பு செய்த 45 வயது போலி பெண் டாக்டர் கைது

woman fake doctor arrested தர்மபுரியில், இளம்பெண் ஒருவருக்கு கருக்கலைப்பு செய்த 45 வயது போலி பெண் டாக்டர் கைது செய்யப் பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்த மணி என்பவரது மனைவி வனிதா (27). ஏற்கனவே, இத்தம்பதிகளுக்கு இருபெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வனிதா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அதனையடுத்து ஸ்கேன் செய்து பார்த்தபோது, இம்முறையும் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என தெரியவந்ததாம். 3வதும் பெண் குழந்தையா என நினைத்த தம்பதிகள், அக்குழந்தையை கருக்கலைப்பு செய்து விட முடிவு செய்துள்ளனர். இதற்காக தெரிந்த நர்சு மூலம் பாப்பாரப்பட்டியில் கிளினிக் நடத்தி வரும் ரேணுகா என்பவரிடம் அழைத்து செல்லப் பட்டுள்ளார் வனிதா. ரேணுகாவிடம் கருக்கலைப்பு செய்து கொண்ட வனிதாவிற்கு வீட்டிற்கு திரும்பிய சில நாட்களிலேயே உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில்…

Read More

ஷூவில் மறைத்து வைத்து யுரேனியம் கடத்தியவர் கைது

Uranium shoe man arrested in US அமெரிக்காவின் பிரபல இணையதளம் ஒன்றில் யுரேனியம் தொடர்பாக விளம்பரம் ஒன்று வெளியானது. அதில் உலகம் முழுவதும் ‘எல்லோ கேக்’ என்று அழைக்கப்படும் ‘யுரேனியத்தை யாரேனும் விற்க தயாராக இருக்கிறீர்களா. எவ்வளவு விலை கொடுத்தும் அதை வாங்க தயார் என்று விளம்பரத்தை வெளியிட்டவர் தெரிவித்திருந்தார். இந்த விளம்பரத்தை கண்ட பேட்ரிக் கேம்பல் என்பவர், தனக்கு தங்கம், வெள்ளி, யுரேனியம் போன்றவற்றை விற்பவர்களுடன் தொடர்பு இருப்பதாகவும், உலகின் எந்த மூலைக்கும் தன்னால் யுரேனியத்தை கொண்டு சென்று விற்க முடியும் என்றும் விளம்பர நபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். அதற்கு, Ôஈரானுக்கு கொண்டு செல்ல முடியுமா’ என விளம்பரம் வெளியிட்டவர் கேட்டுள்ளார். ‘ஈரானில் உள்ள பந்தர் அபாஸ் துறைமுகத்துக்கு யுரேனியத்தை 1000 கிலோ வரை கடத்தி சென்று சப்ளை செய்ய முடியும்’…

Read More

ஆபிசிற்கு லீவு போட தன்னை தானே கட்டிப்போட்டு கொண்ட பெண்

Japan woman ties herself up to skip work  ஜப்பானில் அலுவலகத்திற்கு செல்ல விருப்பமில்லாத ஒரு பெண் தன்னை தானே கட்டிப்போட்டு கொண்டு நாடகமாடிய சம்பவம் நடந்துள்ளது. ஜப்பானின் டோக்கியோவில் இளம் பெண் ஒருவர் தன்னைத்தானே கட்டிப் போட்டுக் கொண்டு வீட்டில் அபாயகரமான நிலையில் மீட்கப் பட்டார். கால்களும், கைகளும் கயிற்றில் கட்டப்பட்டு அப்பெண் மயங்கிய நிலையில் இருந்ததை அவர் வசித்த அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் கண்டு அதிர்ச்சியடைந்தார். பெண்ணை கட்டிப்போட்டு விட்டு வீட்டை திருடர்கள் கொள்ளையடித்திருக்ககூடுமென எண்ணிய அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டை முழுவதுமாக சோதனையிட்டனர். ஆனால் அவ்வாறு எதுவும் தெரியவில்லை. அந்த பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் சுய நினைவு திரும்பிய அந்தப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அந்தப் பெண், அன்றைய தினம் தனக்கு வேலைக்குச் செல்ல…

Read More

மியான்மரில் முஸ்லிம் வீடுகளுக்குத் தீ வைத்த புத்த மதத்தினர்

Buddhists in Myanmar Torch Muslim Homes and Shops   புத்த மதத்தினருக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர் கலவரங்களால் மியான்மர் நாடு அமைதி இழந்து நிற்கிறது. இனக்கலவரங்கள் சிறிது தணிந்திருந்த வேளையில், தற்போது நேற்று புத்த மதப் பெண் ஒருவர், முஸ்லிம் ஒருவனால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் என்ற வதந்தி பரவியதை அடுத்து மீண்டும் கலவரம் வெடித்துள்ளது.கண்ட்பாலு என்ற இடத்திற்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. செய்தியை கேள்விப்பட்ட கிராம மக்கள் அங்கிருந்த காவல் நிலையத்தை அணுகி குற்றவாளியைத் தங்களிடம் விடுமாறு கேட்டுள்ளனர். அங்கிருந்த காவலர்கள் மறுக்கவே, ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் பனிரெண்டுக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களின் வீடுகளையும், கடைகளையும் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர். இந்தத் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று குறிப்பிட்ட காவல்துறை அதிகாரி…

Read More