13 year old student dead in heart attack
கொடுங்கையூரில் 13 வயதேயான மாணவி நசீஃபா அஃசின் மாரடைப்பு காரணமாக பள்ளியிலேயே இறப்பைத் தழுவியுள்ளார். கொடுங்கையூரில் தையற்கலைஞராகப் பணிபுரியும் சையத் நியாஸ் என்பவரின் மகளான நசீஃபா,வழக்கம் போல நேற்று முன்தினம், பள்ளிக்குச் சென்று, முதல் வரிசையில் அமர்ந்து வகுப்பில் பாடம் கவனித்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வகுப்பு ஆசிரியை மற்றும் சக மாணவர்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திற்குத் தகவல் அளித்து, அவர்கள் மூலம் மருத்துமனைக்கு நசீஃபாவை எடுத்துச் சென்றனர். ஆனால் நசீஃபா திடீர் மாரடைப்பு காரணமாக, மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெற்றோருக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். நசீஃபாவுக்கு இதய நோய் இருந்ததற்கான ஆவணங்களை தந்தை சையத் நியாஸ் காவல்துறையினரிடம் சமர்ப்பித்ததையடுத்து, இம்மரணத்தை வழக்காகப் பதிவு செய்யாமல் காவல்துறை கைவிட்டது.