உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அலையவைத்த மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அலையவைத்த மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி லோக்சபா தேர்தலையொட்டி மேற்கு வங்கத்தில் அதிக தொகுதிகளில் கைப்பற்றிவிட வேண்டும் என பாஜக பொதுக்கூட்டங்களை நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன்பு துர்காபூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.பிறகு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பிரச்சாரம் செய்ய கொண்டு வந்துள்ளது பாஜக தலைமை. சிபிஐ மற்றும் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் இடையே மோதலால் கோபத்தில் போராட்டத்தில் குதித்த மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆதித்யநாத்தை அலைக்கழித்துவிட்டார். இருமுறை யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க திடீரென மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்தது. மேற்குவங்க மாநிலம் புருலியா பகுதி பாஜக கூட்டத்தில் பங்கேற்க வந்த யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி வழங்காததால் அண்டை மாநிலமான பாஜக ஆளும் ஜார்கண்ட்டில் இறங்கி அங்கேயிருந்து கார் மூலமாக புருலியா சென்று கூட்டத்தில் கலந்து கொண்டார் .அங்கு திரண்டிருந்த பாஜக தொண்டரிடம் உரையாடிய போது மமதா பானர்ஜி சக முதல்வருக்கே ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கும் அளவுக்கு சர்வாதிகார குணம் கொண்டவர் என குற்றம்சாட்டி அவருடைய கோபத்தை வெளிப்படுத்தினார் யோகி ஆதித்யநாத்.

லோக்சபா தேர்தலையொட்டி மேற்கு வங்கத்தில் அதிக தொகுதிகளில் கைப்பற்றிவிட வேண்டும் என பாஜக பொதுக்கூட்டங்களை நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன்பு துர்காபூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.பிறகு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பிரச்சாரம் செய்ய கொண்டு வந்துள்ளது பாஜக தலைமை. சிபிஐ மற்றும் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் இடையே மோதலால் கோபத்தில் போராட்டத்தில் குதித்த மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆதித்யநாத்தை அலைக்கழித்துவிட்டார்.

இருமுறை யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்தது. மேற்குவங்க மாநிலம் புருலியா பகுதி பாஜக கூட்டத்தில் பங்கேற்க வந்த யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி வழங்காததால் அண்டை மாநிலமான பாஜக ஆளும் ஜார்கண்ட்டில் இறங்கி அங்கேயிருந்து கார் மூலமாக புருலியா சென்று கூட்டத்தில் கலந்து கொண்டார் .அங்கு திரண்டிருந்த பாஜக தொண்டரிடம் உரையாடிய போது மமதா பானர்ஜி சக முதல்வருக்கே ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கும் அளவுக்கு சர்வாதிகார குணம் கொண்டவர் என குற்றம்சாட்டி அவருடைய கோபத்தை வெளிப்படுத்தினார் யோகி ஆதித்யநாத்.

Related posts