Buddhists in Myanmar Torch Muslim Homes and Shops
புத்த மதத்தினருக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர் கலவரங்களால் மியான்மர் நாடு அமைதி இழந்து நிற்கிறது. இனக்கலவரங்கள் சிறிது தணிந்திருந்த வேளையில், தற்போது நேற்று புத்த மதப் பெண் ஒருவர், முஸ்லிம் ஒருவனால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் என்ற வதந்தி பரவியதை அடுத்து மீண்டும் கலவரம் வெடித்துள்ளது.கண்ட்பாலு என்ற இடத்திற்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. செய்தியை கேள்விப்பட்ட கிராம மக்கள் அங்கிருந்த காவல் நிலையத்தை அணுகி குற்றவாளியைத் தங்களிடம் விடுமாறு கேட்டுள்ளனர். அங்கிருந்த காவலர்கள் மறுக்கவே, ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் பனிரெண்டுக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களின் வீடுகளையும், கடைகளையும் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர். இந்தத் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று குறிப்பிட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்பதனையும் குறிப்பிட்டார். ஆயினும், அதற்குள் 35 வீடுகளும், 12 கடைகளும் தீவிபத்தில் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் கூறினார். நேற்று இரவு இந்த சம்பவம் நடந்ததாக புத்த மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட விராத்து என்ற துறவி ஒருவர், தன்னுடைய இணையதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Buddhists in Myanmar Torch Muslim Homes and Shops
இதையும் படியுங்கள்
- ஆபிசிற்கு லீவு போட தன்னை தானே கட்டிப்போட்டு கொண்ட பெண்
- ஷூவில் மறைத்து வைத்து யுரேனியம் கடத்தியவர் கைது
- ஈராக்கில் தற்கொலைப் படை தாக்குதல் 28 பேர் பலி
இதையும் படியுங்கள்
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
- அண்ணன் சீர் திட்டம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கக் காசு, பட்டுப் புடவை பெற ஆதார் கட்டாயம்; ரூ.812 கோடி ஒதுக்கீடு
- குழந்தைகள் இணைய உரிமை: இணையத்தைப் பயன்படுத்துவது குழந்தைகள் உட்பட அனைவரின் அடிப்படை உரிமை; முழுத் தடை சரியல்ல என உச்ச நீதிமன்றம்
- கொடைக்கானல் ஆன்லைன் டிக்கெட்: பில்லர் ராக்ஸ், குணா குகை உள்ளிட்ட வனத்துறை சுற்றுலாத் தலங்களுக்கு முன்பதிவு கட்டாயம் அறிமுகம்
← முந்தைய செய்தி: ஈராக்கில் தற்கொலைப் படை தாக்குதல் 28 பேர் பலி
அடுத்த செய்தி →: ஆபிசிற்கு லீவு போட தன்னை தானே கட்டிப்போட்டு கொண்ட பெண்
