ஷூவில் மறைத்து வைத்து யுரேனியம் கடத்தியவர் கைது

Uranium shoe man arrested in US

Uranium shoe man arrested in US

அமெரிக்காவின் பிரபல இணையதளம் ஒன்றில் யுரேனியம் தொடர்பாக விளம்பரம் ஒன்று வெளியானது. அதில் உலகம் முழுவதும் ‘எல்லோ கேக்’ என்று அழைக்கப்படும் ‘யுரேனியத்தை யாரேனும் விற்க தயாராக இருக்கிறீர்களா. எவ்வளவு விலை கொடுத்தும் அதை வாங்க தயார் என்று விளம்பரத்தை வெளியிட்டவர் தெரிவித்திருந்தார். இந்த விளம்பரத்தை கண்ட பேட்ரிக் கேம்பல் என்பவர், தனக்கு தங்கம், வெள்ளி, யுரேனியம் போன்றவற்றை விற்பவர்களுடன் தொடர்பு இருப்பதாகவும், உலகின் எந்த மூலைக்கும் தன்னால் யுரேனியத்தை கொண்டு சென்று விற்க முடியும் என்றும் விளம்பர நபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

அதற்கு, Ôஈரானுக்கு கொண்டு செல்ல முடியுமா’ என விளம்பரம் வெளியிட்டவர் கேட்டுள்ளார். ‘ஈரானில் உள்ள பந்தர் அபாஸ் துறைமுகத்துக்கு யுரேனியத்தை 1000 கிலோ வரை கடத்தி சென்று சப்ளை செய்ய முடியும்’ என்று கூறியுள்ளார் பேட்ரிக் கேம்பல். விளம்பரம் வெளியிட்டவர் கூறியபடி, தனது ஷூவில் சிறிதளவு யுரேனியத்தை மறைத்து கொண்டு அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையம் வந்தார் பேட்ரிக் கேம்பல். அங்கு அவரை அமெரிக்க உளவு துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர்தான் விளம்பரத்தை வெளியிட்டதே அமெரிக்க உளவு துறைதான் என்ற தகவல் கசிந்தது.
பேட்ரிக் கேம்பலுக்கு யுரேனியம் எங்கு கிடைத்தது, யார் கொடுத்தார்கள் என்று அமெரிக்க உளவு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Uranium shoe man arrested in US

Related posts