ஆபிசிற்கு லீவு போட தன்னை தானே கட்டிப்போட்டு கொண்ட பெண்

Japan woman ties herself up to skip work

 ஜப்பானில் அலுவலகத்திற்கு செல்ல விருப்பமில்லாத ஒரு பெண் தன்னை தானே கட்டிப்போட்டு கொண்டு நாடகமாடிய சம்பவம் நடந்துள்ளது. ஜப்பானின் டோக்கியோவில் இளம் பெண் ஒருவர் தன்னைத்தானே கட்டிப் போட்டுக் கொண்டு வீட்டில் அபாயகரமான நிலையில் மீட்கப் பட்டார். கால்களும், கைகளும் கயிற்றில் கட்டப்பட்டு அப்பெண் மயங்கிய நிலையில் இருந்ததை அவர் வசித்த அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் கண்டு அதிர்ச்சியடைந்தார். பெண்ணை கட்டிப்போட்டு விட்டு வீட்டை திருடர்கள் கொள்ளையடித்திருக்ககூடுமென எண்ணிய அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டை முழுவதுமாக சோதனையிட்டனர். ஆனால் அவ்வாறு எதுவும் தெரியவில்லை. அந்த பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் சுய நினைவு திரும்பிய அந்தப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அந்தப் பெண், அன்றைய தினம் தனக்கு வேலைக்குச் செல்ல விருப்பம் இல்லை என்றும், முன்னறிவிப்பு அளிக்காமல் விடுப்பு கிடைப்பதற்கு வேறு வழி தெரியாமல் இவ்வாறு செய்ததாகவும் தெரியவந்தது. இருப்பினும், அந்தப் பெண்ணின் நிலையைக் கருதி அவர் மீது எந்த நடவடிக்கையும் போலீசார் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Japan woman ties herself up to skip work

A young Tokyo businesswoman tied herself up at home because she did not want to go to work, Japanese media reported Friday. The woman in her 20s was found with her hands and legs bound with ropes and belts at her apartment in the capital’s west on Monday, the Sankei Shimbun said. The apartment owner discovered her unconscious but otherwise unhurt, the newspaper said, adding that the landlord called the police and the ambulance, fearing the woman had been the victim of a vicious home robbery. But detectives grew suspicious of the young tenant’s story when they failed to turn up any evidence of forced entry to the flat. During questioning, the woman broke down and admitted there was nobody else involved. “I did not want to go to work, so I did it as an excuse for absence without due notice,” she told officers, according to the paper. Police, who declined to confirm the report when contacted by AFP, issued a reprimand but decided the woman should not face charges.

Related posts