உலக அழகிப் போட்டியை ரத்து செய்ய வலியுறுத்தல்!

INDONESIAN CLERICS CALL MISS WORLD BAN பெண்களை கவர்ச்சிப் பொருளாக வெளிப்படுத்தும் உலக அழகிப் போட்டியை இந்தோனேசியாவில் நடத்தக் கூடாது என்று இஸ்லாமிய மதக்குருக்கள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம். வரும் செப்டம்பர் மாதம், இங்குள்ள பாலித்தீவில், உலக அழகி போட்டி நடக்க உள்ளது. 137 பேர் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர். இந்த மாதம் தொடக்கத்தில் இந்தோனேசியாவின் மிகவும் செல்வாக்கு உள்ள உலமா சபையின் இஸ்லாமிய மதக்குருக்களின் உயர் மட்டம் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில், பெண்கள் தங்களின் தோலை காட்டி நடந்து வரும் இப்போட்டியானது இஸ்லாமிய மதக்கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால், இப்போட்டியை இந்தோனேசியாவில் நடத்தக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது. English Summary:  INDONESIAN CLERICS CALL MISS WORLD BAN One of Indonesia’s most influential Islamic groups is urging the…

Read More

குஜராத்தில் 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி

5 dead after two 7-storey buildings collapse in Gujarat குஜராத்தில் 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகினர். வடோதராவில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. 7 மாடி கட்டிடத்திற்கு அருகில் இருந்த மற்றொரு கட்டிடத்தை அகற்றிய போது அடுக்கு மாடி இடிந்து விழுந்தது. அடுக்குமாடியில் 12 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 35 பேர் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனையடுத்து மீட்பு பணி அங்கு தீவிரம் அடைந்து வருகிறது. இந்த 7 மாடி கட்டிடம் வடோதரா மேம்பாட்டு ஆணையத்தால் 12 ஆண்டுகளுக்கு முன்பு தான் கட்டப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. 5 dead after two 7-storey buildings collapse in…

Read More

ஐ.பி.எஸ். அதிகாரி காதலித்து ஏமாற்றியதாக இளம்பெண் புகார்

Varun Kumar IPS abandoned His Lover after get in to service in chennai காதலித்து மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமாரை இடைக்காலப் பணி நீக்கம் செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் இளம் பெண் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை ஐகோர்ட்டில் வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஜி.பிரியதர்ஷினி (வயது 28). தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக படிக்கும்போது நானும், வருண்குமாரும் காதலித்தோம். இது எங்கள் பெற்றோருக்குத் தெரிந்து, எங்களுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்தனர். பின்னர் டெல்லியில் தங்கியிருந்து சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினோம். நான் சென்னைக்கு திரும்ப முடிவு செய்தேன். ஆனால் வருண்குமார் தனது அடுத்த தேர்வுக்கு உதவி செய்யும்படி கேட்டுக்கொண்டார். அவருக்கு உதவி செய்வதற்காக எனது நகைகளை அடமானம் வைத்து ரூ.1 லட்சம் வரை செலவழித்திருக்கிறேன். எனக்கும், அவருக்கும்…

Read More

ஓட்டுநரே இல்லா கார் தயாரிப்பில் இறங்கும் கூகுள்

Google to build a fleet of ‘robo-taxis’ ஓட்டுநரே இல்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்று குறிப்பிட்ட இடத்தில் விடும் ரோபோ-டாக்ஸியை தொழில்நுட்பத் துறை ஜாம்பவானான கூகுள் நிறுவனம் உருவாக்க திட்டமிட்டுள்ளது.  போக்குவரத்துத் துறையையே இந்த வாகனங்கள் அடியோடு மாற்றிவிடும் என்று கூகுள் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, கூகுளின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னணி கார்த் தயாரிப்பாளர்கள் இதுபோன்ற வாகனங்களைத் தயாரிப்பார்கள் என்று கூகுள் நிறுவனம் எதிர்பார்த்தது. 2010ஆம் ஆண்டு தானியங்கித் தொழில்நுட்பத்தை உருவாக்கிய அந்நிறுவனம், டொயோட்டா பிரையஸ் மற்றும் லெக்ஸஸ் கார்களில் பொருத்தி சோதனை மேற்கொண்டது.  இருந்தாலும், கார் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்பங்களை கூகுளுக்கு தர விரும்பாத வாகன நிறுவனங்கள், கூகுளுடன் தொழில் ஒப்பந்தம் செய்ய முன்வராரததால், தாமே கார் உற்பத்தியிலும் இறங்க கூகுள் முடிவு செய்துள்ளது.இதற்காக, சமீபத்தில் உலகின் முன்னணி கார் உதிரிபாக உற்பத்தி நிறுவனமான கான்டினென்டலுடன்…

Read More

சிதம்பரம் நீதிமன்ற சாவியைக் காணவில்லை

chidambaram court key missing நீதிமன்றச் சாவியைக் காணவில்லை என சிதம்பரம் நீதிமன்ற உதவியாளர் போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். சிதம்பரம் நீதிமன்றத்தில் உதவியாளராக பணி புரிந்து வருபவர் ஸ்ரீதரன். இவர் நேற்று சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘தான் சிதம்பரம் நீதிமன்ற உதவியாளராக பணியாற்றுவதாகவும், நேற்று காலை பஸ்நிலையத்திற்கு வந்த போது தன்னிடம் இருந்த 2வது கூடுதல் அமர்வு நீதிமன்ற சாவியும், வெளிக்கதவு சாவியையும் காணாமல் போனதாக தெரிவித்துள்ளார். ஸ்ரீதரனின் வழக்கைப் பதிவு செய்து கொண்ட போலீசார் அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். chidambaram court key missing The Chidambaram court administration has filed a complaint in police station that the court key was missing from yesterday. Advertisement:  Real estate…

Read More

விளையாட்டுச் சண்டையில் 6 வயது தோழியை சுட்டுக் கொன்ற 7வயது சிறுமி

7 year old South African girl shoots playmate dead தென் ஆப்பிரிக்காவில், தாத்தா வீட்டிற்கு விடுமுறைக்குச் சென்ற 7 வயது சிறுமி ஒருத்தி கோபத்தில் தனது சகதோழியைச் சுட்டுக் கொன்றுள்ளாள். இதனால் அச்சிறுமி மீதும், அவளது தாத்தா மீதும் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர் போலீசார். சுமார் 5 கோடி மக்கள் தொகையைக் கொண்ட தென் ஆப்பிக்காவில் கிட்டத்தட்ட 50 லட்சத்து 95 ஆயிரம் பேர் துப்பாக்கி வைத்துள்ளனர். ஆனால், முறைப்படி உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அவர்களில் 30 லட்சத்து 73 ஆயிரம் பேர் மட்டுமே. தென் ஆப்பிரிக்கா, பிரயோரியா பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி, லிம்போபோ மாகாணத்தின் பேலா பேலா என்ற கிராமத்தில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு சென்றிருந்தாள். ஒருநாள் அச்சிறுமி அங்குள்ள பண்ணையில் தனது 6 வயது…

Read More

20 வயது பெண்ணை விலைக்கு வாங்கி மணந்த பாகிஸ்தான் தாத்தா கைது

Pakistani Man buys girl to give birth பாகிஸ்தானில் ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகளுக்குத் தந்தையான 55 வயது ஆண், ஆண் குழந்தை வேண்டி 20 வயது இளம் பெண்ணை விலைக்கு வாங்கி, மணந்த குற்றத்திற்காக கைது செய்யப் பட்டுள்ளார். பாகிஸ்தான், ஷாகிலால் மாவட்டத்தில் உள்ள சீசா வாடன் என்ற பகுதியைச் சேர்ந்த முதியவர் முகமது அலி. ஐம்பத்தைந்து வயதான இவருக்கு ஏற்கனவே மணமாகி மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். மூன்றும் பெண் குழந்தைகளாக அமைந்ததில் இவருக்கு ஏகப்பட்ட மனவருத்தமாம். அதனால், வேறு ஒரு இளம் பெண்ணை மணந்து அவர் மூலம் ஆண் குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவிற்கு வந்துள்ளார் முகமது. அதனைத் தொடர்ந்து, லாகூர் அருகேயுள்ள மமூ கஞ்சன் என்ற கிராமத்தை சேர்ந்த பேகம் பீபி என்ற 20 வயது பெண்ணை ரூ.1 லட்சத்து…

Read More

அமெரிக்காவில் 10 நாட்களாக பற்றி எரியும் காட்டூத்தீ

Fire crews report progress against massive Yosemite fire   அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான்பிரான்சிஸ்கோ அருகே உள்ள ஸ்தனிஸ்லாஸ் தேசிய பூங்காவில் கடந்த 17–ந்தேதி திடீரென தீ பிடித்தது. பின்னர் இது காட்டுத்தீயாக மாறி பூங்கா முழுவதும் பரவியது. அங்கு தொடர்ந்து வீசி வரும் அனல்காற்றினால் தீ மளமளவென பரவி வருகிறது. இந்த தீயை அணைக்க நாடெங்கிலும் இருந்து சுமார் 2 ஆயிரத்து 700 தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். எனினும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் குடியிருப்புகளை காலி செய்து வருகிறார்கள். இந்த தீயினால் சுமார் 1¼ லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த காடு முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகளும் நாசமாகி உள்ளன. தொடர்ந்து எரியும் காட்டுத்தீயால் சான்பிரான்சிஸ்கோ நகரில்…

Read More

ஜப்பானில் காபி கோப்பையால் 70வயது கணவனை அடித்து கொன்ற மனைவி

wife kills cheating husband with coffee cup in japan 70 வயதான தனது கணவர் இன்னொரு பெண்ணுடன், அதுவும் தான் வெறுத்து ஒதுக்கிய பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் கோபமடைந்த அவரது 61 வயது மனைவி தனது கணவரை காபிக் கோப்பையால் அடித்தேக் கொன்று விட்டார். ஜப்பானில் தான் இந்த பயங்கரம் நடந்துள்ளது. டோக்கியோவின் தென் மேற்கில் இந்தத் தம்பதியினர் வசித்து வந்தனர். அந்த தாத்தாவுக்கு வயது 70 ஆகிறது. பெயர் யசுவோ ஹிரோஷே. இவரது மனைவி பெயர் எமிகோ ஹிரோஷே. அவருக்கு 61 வயதாகிறது. இந்த நிலையில் தனக்குப் பிடிக்காத ஒரு பெண்ணுடன் கணவருக்குத் தொடர்பு இருப்பது எமிகோவுக்குத் தெரிய வந்தது. இதனால் அவர் கடும் கோபமடைந்தார். வீட்டில் இருந்த காபிக் கோப்பையை எடுத்து கணவரை சரமாரியாக அடித்தார். பத்துக்கும் மேற்பட்ட முறை தலையில்…

Read More

விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர்கல் உடல் உறுப்புகள் தானம்

police escort helps speedy shifting of harvested organs விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம், நுரையீரல் பாகங்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு 97 நிமிடத்தில் கொண்டு செல்லப்பட்டன. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கேதன்னஹல்லி கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரன் (22). பெற்றோரை இழந்த இவரை பாட்டி மேச்சேரியம்மா வளர்த்தார்.திருவண்ணாமலை தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த குபேந்திரன் கடந்த 24ம் தேதி பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். தீவிர சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், குபேந்திரன் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் குழுவினர் நேற்று முன்தினம் இரவு தெரிவித்தனர். இதையடுத்து குபேந்திரனின் இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், கண்களை தானம் செய்ய சித்தப்பா நடராஜ் சம்மதம் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து குபேந்திரனின் இதயம் சென்னை…

Read More