kuruvi arrested with rs 30 lakh hawala money சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஹவாலா பணம் கொண்டு வந்த குருவியை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 30 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நள்ளிரவு பயணிகளின் உடமைகளை பரிசோதிக்கும் ‘‘ஸ்கேனர்” கருவியில் பயணி ஒருவரின் பையை சோதனை செய்த போது கட்டு கட்டாக பணம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சென்ட்ரல் ரயில்வே போலீசாரும், பாதுகாப்பு படை போலீசாரும் பிடிபட்ட ஆசாமியிடம் விசாரணை நடத்தினர். டி.எஸ்.பி. பொன்ராம், இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் நடத்திய விசாரணையில் அவரது பெயர் சையது அகமது சபீர் (47), ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெருவை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அந்த மர்ம நபர் சென்னை பாரிமுனை மண்ணடியில் உள்ள…
Read MoreAuthor: NR Sharavanan
சிறுவனை கடத்தி, கண்களை தோண்டி எடுத்த கொடூரம்
Chinese organ trafficker steals boy’s two eyes சீனாவில் சிறுவனை கடத்தி கண்ணை தோண்டி எடுத்து விழி வெண்படலத்தை மட்டும் வெட்டி எடுத்துச் சென்ற மனித உடல் உறுப்புகளைக் கடத்தும் கும்பலின் கோரச்செயல் அதிரவைத்திருக்கிறது. சீனாவின் சான்ஜி மாகாணத்தில் லின்பென் என்ற பகுதியில் வசித்து வந்த பின்பின் என்ற சிறுவன் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென அவனைக் காணவில்லை. அவன் காணாமல் போய் சில மணி நேரங்கள் கழித்து அவன் முகம் முழுவதும் ரத்தம் தோய்ந்த நிலையில் குற்றுயிராய் அலறித் துடித்துக் கொண்டிருந்ததை பெற்றோர் பார்த்திருக்கின்றனர். இதைக் கண்டு அலறிய பெற்றோர் அவனைத் தூக்கிப் பார்த்த போது திடுக்கிட்டுப் போயினர். அவனது இரண்டு கண்களும் தோண்டி எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிறுவனை மருத்துவமனைக்கு அனுப்பிய கையோடு அந்த இடத்தை சுற்றிப் பார்த்திருக்கின்றனர். அந்த பெற்றொருக்கு…
Read Moreமும்பையில் பிரபல T.V நடிகைக்கு நடுரோட்டில் அடி, உதை..
Actor assaulted by three men as Mumbai crowd watches மும்பையில் டிவி நடிகை லவ்லீன் கெளர் என்பவரை ஒரு கும்பல் தடுத்து நிறுத்தி சரமாரியாக தாக்கியது. ஆனால் இதைத் தடுக்காமல் மக்கள் வேடிக்கை பார்த்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை லவ்லீன் கெளர் நேற்று ஒரு ஆட்டோவில் பயணித்துள்ளார். அப்போது ஒரு பிக்பாக்கெட் திருடன், அவர் வைத்திருந்த பர்ஸைப் பறித்துக் கொண்டு ஓட முயன்றான். இதையடுத்து ஆட்டோவிலிருந்து குதித்த லவ்லீன் அந்த திருடனை துரத்திக் கொண்டு ஓடினார். அந்த சமயத்தில் திடீரென அந்தத் திருடனுக்கு ஆதரவாக 2 பேர் திரண்டனர். மூன்று பேரும் லவ்லீனை சூழ்ந்து கொண்டு தாக்கத் தொடங்கினர். இதை நடிகை எதிர்பார்க்கவில்லை. அங்கு கூட்டமும் கூடியது. ஆனால் தனி ஆளாக திருடர்களுடன் போராடிக் கொண்டிருந்த லவ்லீனைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. அத்தனை பேரும்…
Read More‘சர்வதேச குழந்தைகளின் அமைதி பரிசு’ பெறும் மலாலா
Malala Yousafzai awarded 2013 Children’s Peace Prize பெண் கல்விக்காக போராடி பாகிஸ்தான் தலிபான்களின் துப்பாக்கி குண்டுகளால் சிதைக்கப்பட்ட மலாலாவுக்கு சர்வதேச குழந்தைகளின் அமைதிக்கான உயரிய பரிசு வழங்கப்படுகிறது. நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இயங்கி வரும் ‘கிட்ஸ் ரைட்ஸ்’ என்ற குழந்தைகளின் உரிமைகளுக்கான அமைப்பு இந்த விருதினை வழங்கி கவுரவிக்கிறது. பெண் கல்வியை ஊக்குவித்த பாகிஸ்தான் மாணவி மலாலா(15) என்பவரை தலிபான்கள் கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். தலை உள்பட பல இடங்களில் குண்டுபாய்ந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவருக்கு இலவச உயர்சிகிச்சை அளிக்க இங்கிலாந்து அரசு முன்வந்தது. இதனையடுத்து, தனி விமானம் மூலம் கொண்டுசெல்லபட்டு லண்டனில் உள்ள ராணி எலிசபத் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்று வந்த மலாலாவுக்கு இதுவரை 3 ஆபரேஷன்கள்…
Read Moreகருமுட்டைகளைச் சேமிக்கும் தைவான் பெண்கள்
Career first, children later: Women put their eggs on ice எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தங்கள் திருமணத்தைத் தள்ளிப்போடும் தைவான் பெண்கள், எதிர்காலத்தில் குழந்தைப்பேறைக் கணக்கில் கொண்டு தங்கள் கருமுட்டைகளைச் சேமிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார்களாம். நமது பாட்டிக்காலத்தில் எல்லாம் 12, 13 வயதிலேயே திருமணம் செய்து விடுவார்கள் எனக் கதைச் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால், இன்றோ பெண்களின் திருமண வயது கூடிக் கொண்டே வருகிறது. அதற்குக் காரணம், கல்வியறிவு கொண்ட பெண்கள் சிலகாலமாவது உழைத்து, தன் சொந்தக் காலில் நிற்க நினைப்பது தான். திருமணத்திற்குப் பிறகு இதன் சாத்தியம் குறைவு என எண்ணுகிறார்கள். உலகளவில் பரவிக் காணப்படும் இந்தக் கருத்துக்களால், குழந்தைப்பேறு பாதிக்கப்பட்டு விடக்கூடாது எனக் கருதும் தைவான் பெண்கள் முன்னெச்சரிக்கையாக தங்கள் கருமுட்டைகளை சேமிக்கத் தொடங்கி விட்டார்களாம். ஆசியாவில் உள்ள 14 நாடுகளில் பெண்கள்…
Read Moreகப்பலுக்குள் விஷ வாயு கசிவு 2 பணியாளர்கள் மரணம்
Leakage of poisonous gas killed 2 ship workers in Tuticorin port தூத்துக்குடி துறைமுகத்தில் மரத்தடிகள் இறக்கிய கப்பலின் உள்ளே சிக்கிய தனியார் நிறுவன பணியாளர்கள் இருவர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் நான்காவது சரக்கு தளத்தில் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சரக்கு கப்பலில் இருந்து மரத்தடிகள் இறக்கும் பணிகள் நடந்தது. இந்த மரத்தடிகள் தூத்துக்குடியிலுள்ள செயின்ட் ஜான் தனியார் நிறுவனத்தின் மூலமாக இறக்குமதியானது. சரக்கு கப்பலின் ஒரு கேப்சர் பகுதியில் மரத்தடிகள் இறக்கப்பட்ட பின்னர் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவன பணியாளர்கள் மரத்தடிகளை சரிபார்த்தனர். மரத்தடிகள் ஏதும் கப்பலின் உள்ளே உள்ளதா-? என்பதை பார்ப்பதற்காக தனியார் நிறுவன பணியாளர்களான தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்த விக்டர்மோகன்(40), லயன்ஸ் டவுன் பகுதியை சேர்ந்த ஜோபாய் (50) இருவரும் சரக்குகப்பலின் முதல் பகுதி…
Read Moreவீடியோ கேம் விளையாடிவிட்டு பாட்டியை சுட்டுக் கொன்ற சிறுவன்
Boy Kills Granny After Playing video Game 8 Year Old Boy Kills Granny After Playing video Game அமெரிக்காவில் 8 வயது சிறுவன் ஒருவன் டிவி பார்த்துக் கொண்டிருந்த தனது பாட்டியை சுட்டுக் கொலை செய்துள்ளான். அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் மேரி ஸ்மாதர்ஸ்(87). அவர் தனது 8 வயது பேரனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் அந்த சிறுவன் கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ IV என்ற வீடியோ கேமை விளையாடி உள்ளான். அதன் பிறகு அவன் டிவி பார்த்துக் கொண்டிருந்த தன்னுடைய பாட்டிக்கு பின்னால் வந்து நின்றுள்ளான். வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து அவன் தனது பாட்டியின் தலையில் சுட்டான். இதில் மேரி தலையில் குண்டடிபட்டு பரிதாபமாக உயிர் இழந்தார். விசாரணையில் சிறுவன் துப்பாக்கியில் இருந்து குண்டு ஏதேச்சையாக வெளிவந்ததாக முதலில்…
Read Moreமைக்ரோசாப்ட்டின் அடுத்த சி.இ.ஓ இந்தியரா?.
India born techies in race to replace Microsoft CEO Steve Ballmer மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பால்மெர் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் அடுத்த சிஇஓ பொறுப்புக்கு இரு இந்தியர்களின் பெயர்கள் அடிபடுகிறது. உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் சிஇஓவாக இருந்த ஸ்டீவ் பால்மெர் ஓய்வு பெறுகிறார் என்று வெள்ளிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டது. பால்மெர், மைக்ரோசாப்ட்டை பில்கேட்ஸுடன் இணைந்து உருவாக்கிய இணை நிறுவனர்களில் ஒருவர் பால்மெர். தற்போது மைக்ரோசாப்ட்டின் அடுத்த சிஇஓ பதவிக்கு இரு இந்தியர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வருபவர் சத்யா நடெல்லா. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தவரும் தற்போதை கூகுள் நிறுவனத்தில் பணிபுரிபவருமான குண்டோட்ரா. இந்த இரு இந்தியர் பெயர்தான் மைக்ரோசாப்ட்டின் அடுத்த சிஇஓ பதவிக்கு அடிபடுகிறது. India born techies in race to…
Read More10 லட்சம் ஹிட் அடித்த ராஜா ராணி டிரெய்லர்
Within 5 days the trailer has received more that 10 lakh hits ஏ.ஆர். முருகதாஸ் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ தயாரிப்பில் ஆர்யா- நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ள படம் ராஜா ராணி. படபூஜை அழைப்பிதழ் தொடங்கி கேசட் ரிலீஸ் வரை இந்த படத்திற்காக செய்யப்பட்ட விளம்பரங்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. ராஜா ராணி திரைப்படத்தின் டிரெய்லர் திருமணத்தில் தொடங்குகிறது. ஜான், ரெஜினா வாக ஆர்யா – நயன்தாரா ஜோடி நடித்துள்ளனர். அறிமுகம் இல்லாத இரண்டு பேருக்கு திருமணம் செய்து வைக்கும்போது அவர்களுக்குள் இருக்கும் , திருமணத்திற்கு பிறகு அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை நகைச்சுவையுடன் கூறியுள்ளார் புதுமுக இயக்குநர் அட்லி. இவர் இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். Within 5 days the trailer has received more that 10 lakh hits The…
Read Moreசென்னை கோயம்பேட்டில் சாக்கு மூட்டையில் சிறுவன் கடத்தல்
6 year old boy kidnapped in Chennai சென்னை கோயம்பேட்டில் சாக்குமூட்டையில் கட்டி பள்ளி மாணவனை கடத்த முயற்சித்தாக இளைஞர் கைது செய்யப்பட்டார். கோயம்பேடு தெற்கு மாட வீதியை சேர்ந்தவர் சேகர். இவர் அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். சேகரின் மனைவி சித்ரா. இத் தம்பதியின் மகன் முகேஷ் (வயது 6). சின்மயாநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முகேஷ் 2ம் வகுப்பு படித்து வருகிறான்.முகேஷ் திங்கள்கிழமை இரவு சேமாத்தம்மன் நகர் 3வது தெருவில் வசிக்கும் சித்தப்பா பத்மநாபன் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான்.அப்போது அங்கு வந்த ஒரு இளைஞர் முகேசுடன் பேச்சு கொடுத்து சாக்லேட் கொடுத்தாராம். அதை பெற்றுக் கொண்ட முகேஷ் சிரித்து பேசியபடி அந்த இளைஞருடன் சிறிது தூரம் நடந்து சென்றானாம். தெருமுனைக்கு சென்றதும் திடீரென அந்த…
Read More