Actor assaulted by three men as Mumbai crowd watches
மும்பையில் டிவி நடிகை லவ்லீன் கெளர் என்பவரை ஒரு கும்பல் தடுத்து நிறுத்தி சரமாரியாக தாக்கியது. ஆனால் இதைத் தடுக்காமல் மக்கள் வேடிக்கை பார்த்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை லவ்லீன் கெளர் நேற்று ஒரு ஆட்டோவில் பயணித்துள்ளார். அப்போது ஒரு பிக்பாக்கெட் திருடன், அவர் வைத்திருந்த பர்ஸைப் பறித்துக் கொண்டு ஓட முயன்றான். இதையடுத்து ஆட்டோவிலிருந்து குதித்த லவ்லீன் அந்த திருடனை துரத்திக் கொண்டு ஓடினார். அந்த சமயத்தில் திடீரென அந்தத் திருடனுக்கு ஆதரவாக 2 பேர் திரண்டனர். மூன்று பேரும் லவ்லீனை சூழ்ந்து கொண்டு தாக்கத் தொடங்கினர். இதை நடிகை எதிர்பார்க்கவில்லை. அங்கு கூட்டமும் கூடியது. ஆனால் தனி ஆளாக திருடர்களுடன் போராடிக் கொண்டிருந்த லவ்லீனைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. அத்தனை பேரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். மூன்று பேரும் சேர்ந்து தாக்கியதில் லவ்லீனுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அருகில் இருந்த போலீஸ் பூத்தில் இருந்து சில போலீஸார் விரைந்து வந்து நடிகையைக் காப்பாற்றி அந்த மூன்று பேரையும் பிடிக்க முயன்றனர். ஆனால் ஒருவன் தப்பி விட்டான். 2 பேர் மட்டும் சிக்கினர்.
Actor assaulted by three men as Mumbai crowd watches
A woman actor was assaulted by three youths in Mumbai on Tuesday as people preferred to stay away and watch the whole drama. Loveleen Kaur, a popular TV actor was travelling in an auto-rickshaw when a man snatched her purse and tried to flee. Kaur jumped from the rickshaw and chased him. At some distance, the snatcher was joined by two others, who rounded up the actor and beat her in presence of a small crowd, which has gathered on the spot. The actor, who is in her twenties, suffered some minor injuries while braving the attackers whereas, people didn’t care to interfere and stop the youths. After hearing the actor’s cries for help, the cops from the nearby police outpost rushed to the spot and managed to nab two of the assaulters whereas one of them managed to flee. The recent incident has once against highlighted the vulnerability of the women in financial capital of the country, considered one of the safest cities for women.