14 சிறுமிகளை மிரட்டிக் கற்பழித்த விடுதிக்காப்பாளர் கைது

Hostel warden arrested for raping 14 girls in Arunachal pradesh அருணாச்சலப் பிரதேசத்தில், தனியார் பள்ளி விடுதி ஒன்றில் தங்கி கல்வி பயின்று வந்த மாணவிகள் 14 பேரை மிரட்டி பலாத்காரம் செய்து வந்த வேற்று மாநிலத்தைச் சேர்ந்த விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அருணாச்சலப் பிரதேசம், மேற்கு சியாங் மாவட்டத்தில் உள்ள லிகாபாய் என்ற ஊரில் உள்ள தனியார் பள்ளிக்குச் சொந்தமான விடுதி ஒன்றில் 3 முதல் 16வயது வரை உள்ள மாணவிகள் பலர் தங்கியுள்ளனர். அந்த விடுதிக்கு வேற்று மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் விடுதிக் காப்பாளராக இருந்து வந்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக விடுதியில் தங்கியுள்ள 3 முதல் 13 வயது வரை உள்ள சிறுமிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இவரது மிரட்டலுக்கு பயந்த மாணவிகள் சம்பத்தை…

Read More

டிரைவர் இல்லாமல் ஓடும் அதிவேக ரோபோ டாக்ஸி: கூகுள் நிறுவனம்

robo taxi service by Google considering turning self-driving cars (27-8-13)டிரைவர் இல்லாமல் ஓடும் அதிவேக ரோபோ டாக்ஸி கூகுள் நிறுவனம் விரைவில் தயாரிக்க உள்ளது. தொழில்நுட்ப துறையில் முன்னணியில் இருக்கும் கூகுள் நிறுவனம், கடந்த 2010ம் ஆண்டு கார்களில் தானியங்கி தொழில்நுட்பத்தை உருவாக்கியது. இருப்பினும் எந்தவொரு நிறுவனமும் ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை. இதனையடுத்து தானாகவே கார்களை உற்பத்தி செய்ய நினைத்த கூகுள், டிரைவர் இல்லாமல் இயங்கும் ரோபோ டாக்ஸிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக காரில் கேமராக்கள், ரேடார்கள் மற்றும் கணினி தொழில்நுட்பங்களை கூகுளே வழங்கவுள்ளது. இந்த கார்கள் பயணிகளை ஏற்றிச் சென்று குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிடும். இதற்கான பணிகள் முடிவடைந்து,இந்த ஆண்டு இறுதிக்குள் லண்டன் வீதிகளில் சோதனை ஓட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கார்களால் சாலை விபத்துகள் மிகவும் குறைவாக இருக்கும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது. போக்குவரத்து…

Read More

எங்களை தாக்க நினைத்தால் சமாதியாக்கப்படுவார்கள்: சிரியா

29-8-13/12.30 28-8-13 சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஆனால் பதவி விலக மறுக்கும் அவர் போராட்டக்காரர்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தி வருகிறார். அதில், சுமார் 1 லட்சத்துக்கும் மேலானோர் கொல்லப்பட்டுள்ளனர். 7 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த நிலையில் தலைநகர் டமாஸ்கஸ் புறநகரமான கவுட்டா மற்றும் மொடமியே பகுதிகளில் சிரியா ராணுவம் கடந்த 21-ம் தேதி ரசாயன குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. அதில் இருந்து வெளியான நச்சு புகையில் சிக்கி குழந்தைகள், பெண்கள், முதியர்கள் உட்பட 1300-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இக்கொடூர சம்பவத்துக்கு ஐ.நா. கடும் கண்டனமும், வருத்தமும் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து காலதாமதமின்றி உடனடியாக…

Read More

ஓம் பூரியைக் கைது செய்ய இடைக்காலத் தடை!

Om Puri granted anticipatory bail till Aug 30  மனைவியை உருட்டுக்கட்டையால் தாக்கிய குற்றச்சாட்டில் பிரபல நடிகர் ஓம் பூரியைக் கைது செய்ய இடைக் காலத் தடை விதித்துள்ளது நீதிமன்றம். அர்த், ஆக்ரோஷ், ஆரோகன் படங்களில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர் நடிகர் ஓம் பூரி. காந்தி படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்தார். இந்தியில் முன்னணி ஹீரோக்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஓம் பூரி தனது இரண்டாவது மனைவி நந்திதாவுடன் மும்பையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். திடீரென அவரது முதல் மனைவி சீமா கபூர், மீண்டும் வந்து சேர்ந்து கொண்டார். இதனால் நந்திதாவுக்கும் ஓம் பூரிக்கும் பெரும் சண்டை ஏற்பட்டுவிட்டது. இதனால் வீட்டுக்குப் போவதைத் தவிர்த்த ஓம் பூரி, செலவுக்குப் பணம் தருவதையும் நிறுத்திவிட்டாராம். இதைக் கேட்ட நந்திதாவை கைகளாலும் உருட்டுக்கட்டையாலும் தாக்கினாராம்…

Read More

தமிழகத்தின் கல்யாண சமையல் சாதம் உடலுக்கு அதுவே பிரமாதம்

Tamilnadu breakfast is best in the world தமிழகத்தின் பாரம்பரிய உணவான இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்த காலை உணவு என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற பெரு நகரங்களில் சாப்பிடப்படும் காலை உணவுடன் ஒப்பிடுகையில் சென்னையின் இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய காலைநேர உணவு பழக்கம் குறித்து மும்பை, டில்லி, கோல்கட்டா, சென்னை ஆகிய 4 பெருநகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. 8 முதல் 40 வயது வரையிலான சுமார் 3600 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு, அவர்களின் உடலில் நிறைந்துள்ள சத்துக்களின் அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கார்போஹைட்ரோட், ஆற்றல், புரோட்டீன், கொழுப்புக்கள், கால்சியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. சமீப காலமாக இந்தியாவில் மக்களிடையே ஆரோக்கியம் குறித்த கவனம் அதிகரித்து வருகிறது;…

Read More

குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ-கட்சியை விட்டு நீக்கியுள்ளார் அகிலேஷ்

உல்லாச நகரமான கோவாவில் உள்ள பனாஜியில் குத்தாட்டம் போட்ட உத்தரபிரதேச மாநில சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. மகேந்திர சிங்கை கோவா காவல் துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். பனாஜி நகரில் உள்ள உல்லாச நடன விடுதி ஒன்றில் குத்தாட்டம், கும்மாளம் மற்றும் விபசாரம் நடப்பதாக கோவா காவல் துறைக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, அந்த விடுதிக்கு விரைந்த காவல் துறையினர் , தன்னிலை மறந்து போதையில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்த சிலரை கைது செய்தனர். பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 6 பெண்களையும் அந்த விடுதியிலிருந்து காவல் துறையினர் மீட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. மகேந்திர சிங் என்பதை அறிந்த காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். உத்தரபிரதேச சமாஜ்வாதி கட்சி மூத்த…

Read More

உலகின் நம்பிக்கையை இழந்துவிட்டது இந்தியா! – ரத்தன் டாடா

With economy in distress, India has lost confidence of the world: Ratan Tata பொருளாதார ரீதியாக உலகின் நம்பிக்கையை இந்தியா இழந்துவிட்டது என்று தொழிலதிபர் ரத்தன் டாடா கூறியுள்ளார். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சியில், இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியான சூழ்நிலையில் எதிர்கொண்டுள்ள நிலையில் ரத்தன் டாடா இவ்வாறு கருத்துக் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ரத்தன் டாடா மேலும் கூறியிருப்பதாவது: பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவின் மதிப்பை சர்வதேச அளவில் மிக உயர்ந்த இடத்துக்கு எடுத்துச் சென்றார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அது ஆரம்ப காலத்தில். சமீபகாலமாக அந்த மதிப்பு சரிந்துள்ளது. பொருளாதார நிலையின்மை குறித்து பிரதமர் தொடர்ந்து மௌனம் காத்து வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல, உலகின் நம்பிக்கையை இந்தியா இழந்து…

Read More

இந்திய ரூபாயின் இன்றைய வர்த்தகத்தில் நல்ல நிலையில் உள்ளது.

rupee vs dollar 29-8-2013 10:15 இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்ததை அடுத்து இன்று சரிவில் இருந்து மீண்டு உள்ளது காலை வர்த்தகம் ஆரம்பத்தில் இருந்தே முன்னேற்றம் கண்டுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் நேற்றை விட 130 புள்ளிகள் அதிகரித்து 18,000 புள்ளிகளை தாண்டியது சென்செக்ஸ். தேசிய பங்குச்சந்தை நிப்டியும் 50 புள்ளிகள் ஏற்றம் கண்டு நல்ல நிலையில் உள்ளது. rupee vs dollar

Read More

இந்திய ரூபாய் மீண்டும் வரலாறு காணாத சரிவு

இந்திய ரூபாயின் மதிப்பானது அமெரிக்க டாலருக்கு நிகராக மீண்டும் வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. வரலாறு என்பது எப்பொழுதாவது நிகழ்வது ஆனால் இந்திய ரூபாயின் மதிப்பு அதை தாண்டி சராசரி நிகழ்வை மாறியுள்ளது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் 1.21% வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த ஆண்டு மட்டும் 19.2% வீழ்ச்சி அடைந்துள்ளது. ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்ததால் டீசல், பெட்ரோல் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 150 புள்ளிகள் சரிந்து 5,136 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்ட எண் சென்செக்ஸ் 17,500க்கும் கீழே சென்றுள்ளது. சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்பதால் ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலால் ஆசிய பங்குச்சந்தையிலும் சரிவு காணப்பட்டது. மேலும் ஆசிய பங்குச்சந்தை வீழ்ச்சி காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு சரிவை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரிட்டிஷ் பவுண்டுக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் சரிவடைந்து 105ஐ தாண்டியுள்ளது.  

Read More

நியூஜெர்சியில் சீக்கியர் சுட்டுப் படுகொலை

Sikh fatally shot in New Jersey   இந்தியாவை சேர்ந்தவர் சுரேந்தர்சிங் (வயது 40). சீக்கியரான இவர் அமெரிக்காவில் நியூஜெர்சியில் ஒரு கியாஸ் நிறுவனத்தில் 14 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.வேலைக்கு சென்று வந்த அவரை, 2 கொள்ளையர்கள் வழிமறித்து அவரிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றனர். அப்போது அவர் பணத்தை தர மறுத்ததால் அவர்கள் துப்பாக்கியால் சுரேந்தர்சிங்கை சரமாரியாக சுட்டு வீழ்த்தினர்.இதில் மார்பு மற்றும் கையில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கொலையாளிகளை பிடித்து கொடுப்பவர்களுக்கு 8 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (ரூ.5.44 லட்சம்) பரிசாக வழங்கப்படும் என்று உள்ளூர் போலீசார் அறிவித்துள்ளனர். மேலும், கொலையாளியின் உருவப்படத்தை வெளியிட்டு போலீசார், அவர்களை தேடி வருகிறார்கள்.இதற்கிடையே சீக்கியர்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க அமெரிக்க சட்ட அமலாக்க அமைப்புகள் தவறி விட்டதாக…

Read More