இந்திய ரூபாயின் மதிப்பானது அமெரிக்க டாலருக்கு நிகராக மீண்டும் வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.
வரலாறு என்பது எப்பொழுதாவது நிகழ்வது ஆனால் இந்திய ரூபாயின் மதிப்பு அதை தாண்டி சராசரி நிகழ்வை மாறியுள்ளது
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் 1.21% வீழ்ச்சி அடைந்துள்ளது.
மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த ஆண்டு மட்டும் 19.2% வீழ்ச்சி அடைந்துள்ளது.
ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்ததால் டீசல், பெட்ரோல் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 150 புள்ளிகள் சரிந்து 5,136 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்ட எண் சென்செக்ஸ் 17,500க்கும் கீழே சென்றுள்ளது.
சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்பதால் ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலால் ஆசிய பங்குச்சந்தையிலும் சரிவு காணப்பட்டது.
மேலும் ஆசிய பங்குச்சந்தை வீழ்ச்சி காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு சரிவை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரிட்டிஷ் பவுண்டுக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் சரிவடைந்து 105ஐ தாண்டியுள்ளது.
இதையும் படியுங்கள்
- இந்தியாவில் கழிவறை கட்டும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்
- தலைநகர் எ.டி.எம் மையங்களில் காமலீலை
- விவேகனந்தரின் வாழ்க்கை வரலாறு ஒரு பார்வை
- லஞ்சம் கேட்பது அரசுப் பணியின் ஒரு பகுதியா? ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17A பாதுகாப்பு கிடையாது என உச்ச நீதிமன்றம் விளக்கம்
- குழந்தைகளுக்கும் இணையப் பயன்பாடு அடிப்படை உரிமை: உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன? வயது அடிப்படையிலான முழுத் தடை ஏன் ஏற்கப்படவில்லை?
- விஜய் தேர்தல் வழக்கு: குழந்தைகளிடம் கேட்டது ஊழல் நடைமுறை ஆகாது; சேலம் வடக்கு தேர்தல் மனுவை நிராகரிக்கும் நிலையில் உயர் நீதிமன்றம்
- கவின் ஆணவக் கொலை வழக்கு: குற்றப்பத்திரிகை ரத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
← முந்தைய செய்தி: நியூஜெர்சியில் சீக்கியர் சுட்டுப் படுகொலை
அடுத்த செய்தி →: இந்திய ரூபாயின் இன்றைய வர்த்தகத்தில் நல்ல நிலையில் உள்ளது.


