பெங்களூரு: காவலில் உள்ள ஒரு தலித் நபரை சிறுநீர் குடிக்குமாறு
கட்டாயப்படுத்தியதாக கூறப்படும் காவல் உதவி ஆய்வாளருக்கு முன் ஜாமீன் வழங்க
மறுத்தது, நடந்த சம்பவம் மிகவும் “கொடூரமானது மற்றும் அதிர்ச்சியூட்டும்”
என்பதாலும், முன் ஜாமீன் வழங்கினால் மோசமான பின்விளைவை ஏற்படுத்தும்
என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
காவலில் இருந்தபோது, பட்டியலின சமூகத்தை சேர்ந்த 22 வயது இளைஞரை சிறுநீர் குடிக்குமாறு கட்டாயப்படுத்தியதாக இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளருக்கு கர்நாடக நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் மறுத்தது. கொனிபீது காவல் நிலையத்தை சேர்ந்த கே அர்ஜுன் ஹோரகேரி முன் ஜாமீன் மறுக்கப்பட்ட போது, சிக்மகளூரின் முதல் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் இந்த சம்பவம் “மிகவும் கொடூரமானது” என்றும் இது போன்ற கொடூரமான செயல் ஒரு
நபரின் கண்ணியத்தை பாதிக்கிறது என்றும் அவதானித்தது.
“சம்பவத்தின் கூறப்படும் தன்மை இயற்கையில் மிகவும் கொடூரமானது.
பாதிக்கப்பட்டவருக்கு சிறுநீர் கழிக்கப்படுவது மட்டுமல்லாமல், அவர்
தரையில் இருந்து சிறுநீரை நக்கும்படி செய்யப்பட்டுள்ளார். இத்தகைய
கொடுமையான செயல் எந்தவொரு நபரின் தனிப்பட்ட கண்ணியம் மற்றும் கவுரவத்தை
அழிக்கிறது. தனிப்பட்ட ஒருவரின் கண்ணியம் அவருடைய உள் உணர்வுகள்,
சுய அன்பு, சுய பாதுகாப்பு, சுய மரியாதை மற்றும் சுய பாராட்டு
ஆகியவற்றிகான அணுகுமுறைகள் ஆகும்” என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
புகாரை தாக்கல் செய்வதில் தாமதம் குறித்து அர்ஜுன் ஹொராகேரி அளித்த
சமர்ப்பிப்புகளையும் கர்நாட உயர்நீதிமன்றம் நிராகரித்தது. ” இந்த வகையான கொடுமைக்கு ஆளான ஒரு நபர் முழு அதிர்ச்சியில் இருப்பார், நிச்சயமாக இந்த சம்பவத்தை எந்தவொருவரிடமும் வெளிப்படுத்தவோ அல்லது அதற்கான தீர்வை பெறவோ முடியாது” என்று விளக்கினார். காவல் அதிகாரி என்பவர் பொது மக்களின் நம்பிக்கை, பாதுகாவலராகவும் அப்பாவிகளைப் பாதுகாப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இத்தகைய கொடுமையான செயல் யாரும் எதிர்பாா்க்கப்படாதது என்று உத்தரவில் குறிப்பிட்டார்.