reporters without borders Chart 2012 மே 3-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பத்திரிக்கை சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 2012 ஆண்டிற்கான பத்திரிகை சுதந்திர அட்டவணை ஒன்றை ‘ரிபோர்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா 140 ஆவது இடத்திலும், இலங்கை 162 ஆவது இடத்தில் இருக்கின்றது. பத்திரிக்கை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த பத்திரிக்கை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்த அட்டவணையில், பின்லாந்து முதல் இடத்தை பெற்றுள்ளது. இங்கிலாந்து 29ம் இடத்திலும், அமெரிக்கா 32வது இடத்திலும்,ரஷ்யா 148 ஆவது இடத்திலும். சீனா 173 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 159 ஆவது இடத்திலும் இருக்கின்றன. reporters without borders Chart 2012 இதையும் படியுங்கள் மின்வெட்டு: மே 12-ல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருப்பூரில் கண்டன பேரணி கர்நாடக சட்டசபை தேர்தல் 2013. 70% வாக்கு பதிவு ஐ.ஏ.எஸ் தேர்வு…
Read More 2012 ஆண்டிற்கான பத்திரிகை சுதந்திர அட்டவணை: இலங்கை162 ஆவது இடம்.Category: உலகம் சிறகுகள்
42 தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பியது ஆஸ்திரேலியா
Australia deports 42 Sri Lankan refugees கொழும்பு: 3 மே 2013: இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற 42 தமிழ் அகதிகளை ஆஸ்திரேலியா மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்பியது. இலங்கையில் தங்களது வாழ்வுரிமை பாதிக்கப்பட்ட பல தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்று குடிபெயர்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்தியா, கனடா, நார்வே, ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகமாக செல்கின்றனர். முக்கியமாக படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்லுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து தங்கள் நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேற முயற்சி செய்யும் இலங்கைத் தமிழர்களை ஆஸ்திரேலியா திருப்பி அனுப்பி வருகிறது. இந்நிலையில் 42 தமிழ் அகதிகளை ஆஸ்திரேலிய அரசு வியாழக்கிழமை மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்பியது. ஆஸ்திரேலியா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் இதுவரை சுமார் 1000 அகதிகளை இலங்கைக்கு திருப்பியனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. Australia deports 42 Sri Lankan refugees Colombo: Australia deported 42 Sri Lankan asylum…
Read More 42 தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பியது ஆஸ்திரேலியாஉலகின் 27 மிக சக்திவாய்ந்த நாடுகள். 8வது இடத்தில் இந்தியா!
India ranks 8th among 27 most powerful nations in world புதுடெல்லி : இந்தியா உலகின் மிகவும் சக்திவாய்ந்த 10 நாடுகளில் ஒன்றாக உள்ளது. டெல்லியைச் சேர்ந்த தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி பவுன்டேசன் (எப்.எஸ்.என்.ஆர்) என்ற அமைப்பு உலகில் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை தயார் செய்தது. 5 கோடிக்கு அதிகமான மக்கள் தொகை, 500 பில்லியன் அமெரிக்க டாலருக்கு அதிகமான மொத்த உள்ளநாட்டு உற்பத்தி, 5 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான ராணுவ செலவு இருக்கும் நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றில், எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்ப பலம், வெளியுறவு கொள்கை பலம், பாதுகாப்பில் தன்னம்பிக்கை, சர்வதேச அமைப்புகளில் உறுப்பினர், சர்வதே விதிமுறைகளை உருவாக்குவதில் உள்ள பங்கு போன்ற பல அம்சங்களை ஆராய்ந்து இந்தப் பட்டியலை நிபுணர்கள் உருவாக்கினர். உலகில் சக்தி வாய்ந்த நாடுகளாக 27 நாடுகள் பட்டியலிடப்பட்டன. இவற்றில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது.…
Read More உலகின் 27 மிக சக்திவாய்ந்த நாடுகள். 8வது இடத்தில் இந்தியா!இலங்கையில் காமன்வெல்த் கூட்டத்தை நடத்த சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு எதிர்ப்பு
Commonwealth summit 26 ஏப்ரல் 2013: இலங்கையில் வரும் நவம்பர் மாதம் காமன்வெல்த் நாடுகளின் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்துக்கான நிகழ்ச்சிகள் பற்றி விவாதிப்பதற்காக காமன்வெல்த் நாடுகளின் அமைச்சக நிலையிலான பிரதிநிதிகளின் கூட்டம் லண்டனில் வெள்ளிக்கிழமை (இன்று ) நடைபெறுகிறது. இந்த சூழ்நிலையில் இலங்கையில் கூட்டத்தை நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் ஆசிய பிரிவு இயக்குநர் பிராட் ஆடம்ஸ் கூறியது: காமன்வெல்த் நாடுகளின் அமைச்சக நிலை பிரதிநிதிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில், காமன்வெல்த் நாடுகளின் மதிப்பை குலைக்கும் வகையில் இலங்கை செயல்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் எங்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை என்று முடிவெடுத்து அந்நாட்டு அரசுக்கு செய்தி அனுப்ப வேண்டும் என்றார். இலங்கையில் போர் நடைபெற்றபோது நிகழ்ந்த மனித உரிமை மீறல் பிரச்னைகளை மையமாக வைத்தும், இலங்கையில் மனித உரிமைகளைக் காக்க…
Read More இலங்கையில் காமன்வெல்த் கூட்டத்தை நடத்த சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு எதிர்ப்புஇலங்கையில் நடக்க இருக்கும் காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்: ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மால்கம் ஃப்ரேசர் மனு
FORMER prime minister Malcolm Fraser Calls for Boycott 25 ஏப்ரல் 2013:ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மால்கம் ஃப்ரேசர் இலங்கையில் நடக்க இருக்கும் காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என் வலியுறுத்தி ஆஸ்திரேலியா அரசுக்கு மனு அளித்துள்ளார். இதில் இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் பல முன்னணி ஆஸ்திரேலிய தலைவர்கள் பட்டியலில் தம் பெயரையும் சேர்த்துக்கொள்ளுமாறு குறிபிட்டுள்ளார். இதே போல் ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் அமைப்பு, இலங்கையில் மனித உரிமைகள் விஷயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் வரும் வரை இது போன்ற நிகழ்ச்சிகளை பபுறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. FORMER prime minister Malcolm Fraser Calls for Boycott English Summary: FORMER prime minister Malcolm Fraser is among dozens of prominent Australians calling on the federal government to consider boycotting a…
Read More இலங்கையில் நடக்க இருக்கும் காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்: ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மால்கம் ஃப்ரேசர் மனுசீனாவில் 2 புத்தசாமியார்கள் – திபெத்தியர்கள் தீக்குளித்து சாவு
Two young Tibetan monks immolated themselves பீஜிங் 25April2013 திபெத்தில் இருந்து சீன ராணுவம் வெளியேற கோரி திபெத்தியர்கள் கடந்த பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்காக இதுவரை 110 பேர் தீக்குளித்து உள்ளனர். இதில் பலர் இறந்து விட்டனர். போராட்டத்தின் தொடர்ச்சியாக சீனாவின் சிச்சுவான் மாகாணம் கிர்தி மொனாஸ்திரி என்ற இடத்தில் இன்று 2 புத்தசாமியார்களும் ஒரு திபெத்திய பெண்ணும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். பிரான்சு நாட்டு அதிபர் பிரான்காயிஸ் ஹோலண்ட் மற்றும் ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு கொள்கை குழு தலைவர் கேத்தரின் அஷ்டன் ஆகியோர் பீஜிங்கில் சுற்றுப்பயணம் செய்யும் சமயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. English Summary: Two young Tibetan monks immolated themselves Two young Tibetan monks of Taktsang Lhamo Kirti Monastery in Zoege,…
Read More சீனாவில் 2 புத்தசாமியார்கள் – திபெத்தியர்கள் தீக்குளித்து சாவுஅமெரிக்காவிற்கு சீனா பதிலடி : சீனா உலக மனித உரிமை மீறல் கணக்கெடுப்பு!
China Human Rights Survey against US பெய்ஜிங்: அமெரிக்காவின் மனித உரிமை கணக்கெடுபில் சீனாவுக்கு எதிரான அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா வின் மனித உரிமை மீறல் கணக்கெடுப்பில் அமெரிக்கா தங்கள் சொந்த மண்ணில் வாழும் தன் நாட்டு பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் களை வேவு பார்பதாக குற்றம் சாட்டியது. கடந்த வாரம் அமெரிக்காவின் உலகின் மனித உரிமை மீறல்கள் அறிக்கையில் சீனாவில் திபெத்திலும், முஸ்லீம் மக்கள் வாழும் ஜின்ஜியாங் (Xinjiang) பகுதியில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், குறிப்பாக உரிமை ஆர்வலர்கள் மீது அடக்குமுறை மற்றும் கட்டாயப்படுத்தல் போன்ற குற்றங்கள் சீனா அரசாங்கத்தால் இழைக்கபடுவதாக குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. China Human Rights Survey against US இதையும் படியுங்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் பரபரப்பான சூழ்நிலையில், இன்று கூடுகிறது ! இந்திய கணித மேதை சகுந்தலா தேவி மரணம்.…
Read More அமெரிக்காவிற்கு சீனா பதிலடி : சீனா உலக மனித உரிமை மீறல் கணக்கெடுப்பு!இலங்கை அரசாங்கத்தின் சட்டவிரோத கொலைகள் அமெரிக்க மனித உரிமைகள் அறிக்கை – குற்றம் சாட்டு
John Kerry sri lankan human rights condition : Secretary of State ஏப்ரல் 20, வாஷிங்டன், DC: அமெரிக்காவில் the Secretary of State Mr. John Kerry, உலகத்தில் மனித உரிமைகள் நிலவரம் குறித்து வெளியிட்ட அறிக்கையில் தங்கள் அரங்கத்தை காப்பற்ற பல பொதுமக்களின் மீது தாக்குதல்களும் கொலைகளும் இலங்கை அரசு அதிகாரிகள் நடத்தியுள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளது. இலங்கை வரலற்றில் சில மாதங்களாக பொதுமக்கள் மீதான தாக்குதல் மற்றும் கொலைகள் குறைந்திருந்தாலும் 2009ல் நடந்த மனித உரிமைகள் மீறல் குறித்து இலங்கை அரசாங்கம் மிக குறைவான நடவடிக்கை,அதன் குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க தவறிவிட்டதாகவும் அது ஒரு கண்துடைப்பு போன்று இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிபிடப்பட்டுள்ளது. தமிழின சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்சம் தொடர்வதாகவும் மற்றும் மனித உரிமை மீறல்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சமமற்ற சூழல் இருப்பதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டது குறிப்பிட்டது. John Kerry sri lankan human…
Read More இலங்கை அரசாங்கத்தின் சட்டவிரோத கொலைகள் அமெரிக்க மனித உரிமைகள் அறிக்கை – குற்றம் சாட்டுஅமெரிக்கா மீது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையாகக் குற்றஞ்சாட்டு
Sri lanka Rajapaksa Against US interference கொழும்பு 20ஏப்ரல் 2013: அமெரிக்கா தேவை இல்லாமல் தலையிடுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார் ஜனாதிபதி. இலங்கை சுயாதிபத்திய இறைமையுள்ள ஒரு நாடு. அதன் உள்நாட்டு விவகாரங்களில் தேவையற்ற தலையீடுகளைச் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. எமது நாட்டின் மீது மேற்குலக நாடுகள் தலையீடுகளைச் தாம் அனுமதியளிக்கப் போவதில்லை எனவும் கூறினார் Sri lanka Rajapaksa Against US interference Flats sale in Chennai Ayanambakkam இதையும் படியுங்கள் இலங்கை அரசாங்கத்தின் சட்டவிரோத கொலைகள் அமெரிக்க மனித உரிமைகள் அறிக்கை – குற்றம் சாட்டு இலங்கையில் நடக்க இருக்கும் காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்: ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மால்கம் ஃப்ரேசர் மனு இலங்கையில் உதயன் பத்திரிகை அச்சகங்கள் மீது தாக்குதல்
Read More அமெரிக்கா மீது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையாகக் குற்றஞ்சாட்டுசீனாவில் பூகம்பம் 12 பேர் பலி நூற்றுக்கணகான மக்கம் காயம்.
Earthquake in china சீனா 20ஏப்ரல் 2013: சனி அதிகாலை சீனாவில் பூகம்பம் 12 பேர் பலி நூற்றுக்கணகான மக்கம் காயம். 6.6-ரிக்டர் அளவில் நிலநடுக்கம் இருந்ததாகவும் அது தென் மேற்குக்கு சியாசின் மாகாணம் மட்டும் அல்லது 5 பிற மாகாணங்களிலும் உணரப்பட்டதாகவும் சாவு மற்றும் காயம் அடைதோர் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் சீனா அதிகாரிகள் தெரிவித்தார்கள். Earthquake in china இதையும் படியுங்கள் அமெரிக்காவிற்கு சீனா பதிலடி : சீனா உலக மனித உரிமை மீறல் கணக்கெடுப்பு! நாடாளுமன்ற கூட்டத்தொடர் பரபரப்பான சூழ்நிலையில், இன்று கூடுகிறது ! சிவந்தி ஆதித்தன் மறைவு: முதல்வர் மற்றும் தலைவர்கள் இரங்கல்
Read More சீனாவில் பூகம்பம் 12 பேர் பலி நூற்றுக்கணகான மக்கம் காயம்.