சென்னையில் பெல்ஜிய விசா மையம் திறப்பு.

மும்பை: 17ஏப்ரல்2013: பொருளாதார சிக்கலான இந்த நேரத்தில் உலகம் முழுவதிலும் சுமார் 10 தூதரகங்களை மூடும் நிலையில் சென்னையில் விசா மையம் திறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என பெல்ஜியம் நாட்டு தூதரக அதிகாரி திரு.Karl Van den Bossche மும்பையில் கூறினார்.

சென்னையில் பெல்ஜிய விசா மையம் திறப்பு.

சுமார் 30 சதவிகித விசா விண்ணப்பங்கள் தென் இந்தியாவில் இருந்து வருவதாகவும், சென்னை  துறைமுக நகரமாகவும், வாகனம், மருந்து தொழில், மற்றும் இதர உற்பத்தி துறைகளின் மையமாக விளங்குவதாலும், சென்ற ஆண்டு மட்டும், பெல்ஜிய நாட்டு தூதரகத்திற்கு இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கு பகுதி பயணிகளிடம் இருந்து சுமார் 34,000 விசா விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது ஆதலால் இந்த முக்கிய முடிவு எடுத்ததாக பெல்ஜியம் தூதரகம் தெரிவித்துள்ளது.

பெல்ஜியம் இளவரசர் பிலிப்  தலைமையில் ஒரு வணிக குழு நவம்பரில் சென்னை, மும்பை மற்றும் புது தில்லி வருவதாக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Belgian visa centre opened in Chennai

Real estate company in chennai


Related posts