ஈராக்கில் தற்கொலை தாக்குதல் 22 பேர் பலி

பாக்தாத்: 19ஏப்ரல்2013: பாக்தாத் ஓட்டலில் ஒன்றில் தற்கொலை குண்டு தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர், 35 பேர் காயமுற்றனர் என்று ஈராக்கிய அதிகாரிகள் கூறினர். வியாழன் இரவு உடம்பில் வெடிகுண்டு பெல்ட் கட்டிக்கொண்டு நிரம்பி வழிந்த ஒரு உணவு விடுதிக்குள் நுழைந்த பயங்கரவாதி ஒருவன் குண்டை வெடிக்க செய்தான்.  iraq bomb blast 22 dead   இதையும் படியுங்கள் உலகின் 27 மிக சக்திவாய்ந்த நாடுகள். 8வது இடத்தில் இந்தியா! சீனப்பிரதமர், லீ கேக்கியங், இந்தியா வருகை ஸ்டெல்லண்டிஸ்: பிரான்ஸில் 4 ஆலைகள் சில நாள் நிறுத்தம் – விநியோகப் பற்றாக்குறை காரணம்

Read More ஈராக்கில் தற்கொலை தாக்குதல் 22 பேர் பலி

சென்னையில் பெல்ஜிய விசா மையம் திறப்பு.

மும்பை: 17ஏப்ரல்2013: பொருளாதார சிக்கலான இந்த நேரத்தில் உலகம் முழுவதிலும் சுமார் 10 தூதரகங்களை மூடும் நிலையில் சென்னையில் விசா மையம் திறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என பெல்ஜியம் நாட்டு தூதரக அதிகாரி திரு.Karl Van den Bossche மும்பையில் கூறினார். சுமார் 30 சதவிகித விசா விண்ணப்பங்கள் தென் இந்தியாவில் இருந்து வருவதாகவும், சென்னை  துறைமுக நகரமாகவும், வாகனம், மருந்து தொழில், மற்றும் இதர உற்பத்தி துறைகளின் மையமாக விளங்குவதாலும், சென்ற ஆண்டு மட்டும், பெல்ஜிய நாட்டு தூதரகத்திற்கு இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கு பகுதி பயணிகளிடம் இருந்து சுமார் 34,000 விசா விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது ஆதலால் இந்த முக்கிய முடிவு எடுத்ததாக பெல்ஜியம் தூதரகம் தெரிவித்துள்ளது. பெல்ஜியம் இளவரசர் பிலிப்  தலைமையில் ஒரு வணிக குழு நவம்பரில் சென்னை, மும்பை மற்றும் புது தில்லி வருவதாக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. Belgian visa centre opened in Chennai Real estate company in chennai

Read More சென்னையில் பெல்ஜிய விசா மையம் திறப்பு.

ஈராக்கில் 21 பேருக்கு ஓரே நாளில் தூக்கு

ஈராக்-புதன், 17 ஏப்ரல் 2013: ஈராக்கில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட 21 தீவிரவாதிகளுக்கு ஓரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றபட்டுள்ளது. ஈராக்கில் பயங்கரவாத செயல்களை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்தில், ஈராக்கில் அதிகரித்து தீவிரவாத குற்றங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் ஈராக்கில் குண்டுவெடிப்பு, கொலை குற்றம், கடத்தல் ஆகிய குற்றங்களில் ஈடுப்பட்ட 21 பேருக்கு நேற்று ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. உலக நாடுகளில் மிக அதிக அளவில் மரண தண்டனை விதிக்கப்படும் நாடு எனக் கருதப்படும் ஈராக்கில் கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து 447 பேருக்கும், 2012 ஆம் ஆண்டு மட்டும் 129 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. Iraq Executes 21 Men Convicted of Terrorism Property chennai இதையும் படியுங்கள் சென்னையில் பெல்ஜிய விசா மையம் திறப்பு. டெல்லி டேர்டெவில்ஸக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட்: சூப்பர் கிங்ஸ்…

Read More ஈராக்கில் 21 பேருக்கு ஓரே நாளில் தூக்கு

ஈரானில் மிக பெரிய பூகம்பம் 100க்கு மேற்பட்ட மக்கள் பலி?.

துபாய்: பாகிஸ்தான் எல்லை அருகே ஈரானில் நில நடுக்கம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அஞ்சபடுகிறது. 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளில் உணரப்பட்டது. “இது 40 ஆண்டுகளில் ஈரானில் ஏற்பட்ட மிக பெரிய பூகம்பம் என ஈரானிய அதிகாரி தொலைபேசில் கூறினார். அமெரிக்க புவியியல் அலுவலகத்தின் படி நிலநடுக்கம் 15.2 கிமீ (9.4 மைல்) ஆழத்தில் 10:44 GMT மணிக்கு தாக்கியது என தகவல் வெளியிடப்பட்டது. இதையும் படியுங்கள் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் நிலநடுக்கம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றி கண்டது பெங்களூ Flemish biologist lives for four months on mars

Read More ஈரானில் மிக பெரிய பூகம்பம் 100க்கு மேற்பட்ட மக்கள் பலி?.

அமெரிக்காவில் தொடர் குண்டுவெடிப்பு : பாஸ்டனில் 3 பேர் பலி : 141 காயம்

பாஸ்டன்: அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மாரத்தான் போட்டி நடந்தது. போட்டி முடியும் தறுவாயில் வெடிகுண்டு வெடித்தது. இந்நிலையில் மக்கள் அதிர்ச்சியையடுத்து சிதறி ஒடினர். அடுத்த சில வினாடிகளில் மற்றொரு குண்டு வெடித்தது. அதை தொடர்ந்து 3வது குண்டுவெடிப்பு ஜே.எப்.கென்னடி நூலகம் அருகே வெடித்ததாக பாஸ்டன் போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது. இந்த குண்டு வெடிப்பில் 3 பேர் பலியானார்கள் மேலும் 141பேர்வரை காயமாடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனை‌யடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா, நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பை அதிகப்படுத்த உத்தரவிட்டுள்ளார். America bomb blast bostan marathan real estate chennai இதையும் படியுங்கள் ஆந்திராவில் பதுங்கி இருந்த தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,: புழல் சிறையில் அடைப்பு ., Flemish biologist lives for four months on mars Coming Soon – Under construction

Read More அமெரிக்காவில் தொடர் குண்டுவெடிப்பு : பாஸ்டனில் 3 பேர் பலி : 141 காயம்

இலங்கையில் உதயன் பத்திரிகை அச்சகங்கள் மீது தாக்குதல்

கொழும்பு: இலங்கையில் உள்ளூர் ஆட்சி தேர்தலில் எதிர்கட்சிக்கு சாதகமான பத்திரிக்கை செய்திகளை குறைக்கவே இந்த தாக்குதல் நடத்த பட்டதாக முக்கிய தமிழ் கட்சி குற்றம் சாட்டியது. உதயன் பத்திரிகை அச்சகங்கள் மீது தாக்குதல் நடத்தியதின் மூலம் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வை எற்படுத்தி உள்ளதாக  தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) கூறியுள்ளது. சனிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு தனி அறிக்கையை இந்த தாக்குதலில் பின்னணியில் இலங்கை ராணுவத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லை என கூறப்பட்டது. குறிப்பாக உதயன் உரிமையாளர் திரு ஈஸ்வரபாதம் சரவணபவன் எதிர்க்கட்சி  MP என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களில் தமது 5 பத்திரிக்கை தொழிலாளிகள் கொல்லபட்டுள்ளனர், அவர்களில் கொலையில் சந்தேகத்தில் உள்ள எவரையும் விசாரிக்க வில்லை என அவர் குற்றம் சாட்டினார். “இது போருக்கு பிந்தைய ஜனநாயகம் மற்றும் ஊடக சுதந்தரத்தின்  மீதான நேரடி தாக்குதல்.” என ஒரு உள்ளூர் ஊடக உரிமைகள் குழு,…

Read More இலங்கையில் உதயன் பத்திரிகை அச்சகங்கள் மீது தாக்குதல்

சீனாவில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பெய்ஜிங் தமிழ் சங்கமம், தமிழ் கலாச்சார சங்கம் உருவாக்கம்

1Apr 2013: சீனாவில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பெய்ஜிங் தமிழ் சங்கமம், தமிழ் கலாச்சார சங்கம் உருவாக்கப்பட்டது என திரு மைக்கேல் ஞாயிறன்று கூறினார். ஞாயிறன்று பெய்ஜிங் மற்றும் அண்டை பகுதிகளில் வேலை செய்யும் 70 தமிழ் நிபுணர்களால்  சீனாவில் முதல் தமிழ் சங்கம் உருவாக்கப்பட்டது. இவை சீனாவில் இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வளர்ந்து வருவதை குறிப்பதாகும். புதிய தமிழ் சங்கம் முக்கியமாக கலாச்சார நிகழ்வுகள் மற்றும் தமிழர்கள் ஒன்று கூடுதல் நிகழ்வுகளில் கவனம் செலுத்தப்படும் என்று, திரு மைக்கேல் கூறினார். பெருவாரியான தமிழ் அறிஞர்கள் தமிழ்நாடு, இலங்கை, மலேஷியா இருந்து ஞாயிறு பெய்ஜிங் கூட்டத்தில் பங்கேற்றனர். இதையும் படியுங்கள் இலங்கை கடற்படை ஒன்பது தமிழ்நாடு மீனவர்களை இழுத்து சென்றது தில்லியில் இன்று (திங்கள்கிழமை) முதல்வர்கள் மாநாடு வட கொரியா அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் எதிராக தினமும் மிரட்டல் விடுத்தது வருகிறது.

Read More சீனாவில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பெய்ஜிங் தமிழ் சங்கமம், தமிழ் கலாச்சார சங்கம் உருவாக்கம்

வட கொரியா அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் எதிராக தினமும் மிரட்டல் விடுத்தது வருகிறது.

வட கொரியா அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் எதிராக தினமும் மிரட்டல் விடுத்தது வருகிறது. பேச்சுவார்த்தைக்கு வருமாறு தென் கொரியா விடுத்த அழைப்பை வடகொரியா நிராகரித்து விட்டது. சர்வதேசக் கண்டனங்களை மீறி வடகொரியா கடந்த பிப்ரவரி மாதம் அணு ஆயுதச் சோதனையை நடத்தியது. இதைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. எனினும், மீண்டும் ஏவுகணைச் சோதனைகளை நடத்த வடகொரியா தயாராகி வருவதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் கொரியாவையும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்காவையும் தாக்குவோம் என்று வடகொரியா அறிவித்துள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதப் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பதற்றத்தைத் தணிப்பதற்காக பேச்சுவார்த்தைக்கு வருமாறு வடகொரியாவுக்கு தென் கொரியா கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தது. எனினும், இது தென் கொரியாவின் தந்திரம் என்று கூறி இந்த அழைப்பை வடகொரியா நிராகரித்து விட்டது.…

Read More வட கொரியா அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் எதிராக தினமும் மிரட்டல் விடுத்தது வருகிறது.

பப்புவா நியூகினியாவில் இன்று காலை நிலநடுக்கம்

பப்புவா நியூகினியாவில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 6.7 மேக்னிட்யூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது. இது பப்புவா நியூகினியாவின் போகெயின்விலெவின் மேற்குப் பகுதியில் 46 மைல் தொலைவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டது. ஞாயிறு இன்று காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அது கூறியது. Popular Posts இதையும் படியுங்கள் சித்திரைத் தலைநாளில் சுதந்திர தமிழ் ஈழம் மலர வைகோ வாழ்த்து தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 2011ல் 28 வகைப்பாடுகளில் சிறந்த நூல்கள் தேர்வு இந்தோனேசியாவி ஓடுதளத்தைவிட்டு விலகி கடலில் இறங்கிய விமானம்!

Read More பப்புவா நியூகினியாவில் இன்று காலை நிலநடுக்கம்

இந்தோனேசியாவி ஓடுதளத்தைவிட்டு விலகி கடலில் இறங்கிய விமானம்!

இந்தோனேசியாவி ஓடுதளத்தைவிட்டு விலகி கடலில் இறங்கிய விமானம்!

இந்தோனேசியாவில் டென்பாசார் விமான நிலையத்தில் தரை இறங்க வேண்டிய விமானம் ஓடுதளத்திலிருந்து விலகி கடலுக்குள் பாய்ந்தது. சனிக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை. Indonesian island of Bali இந்தோனேசியாவில் பாலி மாகாணத்தில் உள்ள சுற்றுலா நகரான டென்பாசாரில் இந்த சம்பவம் நடந்தது. லயன்ஏர் பயணிகள் விமான நிறுவனத்தின் போயிங் விமானத்தில், ஐந்து சிறுவர்கள் ஒரு பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 101 பயணிகள், 7 விமானப் பணிக் குழுவினர் இருந்தனர். இந்த விமானம் இறங்கும்போது ஓடுதளத்தில் இறங்காமல் விமான நிலையத்துக்கு அடுத்திருந்த கடலில் இறங்கிவிட்டது. இறங்கிய வேகத்தினால் நடுப்பகுதியில் உடைந்து, விமானம் இரு துண்டாகியது. அப்போது வானிலை சாதாரண நிலையில் இருந்தபோதிலும் விமானம் ஏன் கடலில் இறங்கியது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சில பயணிகள் லேசான காயம் அடைந்துள்ளனர். குறைந்த கட்டணம்…

Read More இந்தோனேசியாவி ஓடுதளத்தைவிட்டு விலகி கடலில் இறங்கிய விமானம்!