இந்தோனேசியாவில் டென்பாசார் விமான நிலையத்தில் தரை இறங்க வேண்டிய விமானம் ஓடுதளத்திலிருந்து விலகி கடலுக்குள் பாய்ந்தது. சனிக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை.
Indonesian island of Bali
இந்தோனேசியாவில் பாலி மாகாணத்தில் உள்ள சுற்றுலா நகரான டென்பாசாரில் இந்த சம்பவம் நடந்தது. லயன்ஏர் பயணிகள் விமான நிறுவனத்தின் போயிங் விமானத்தில், ஐந்து சிறுவர்கள் ஒரு பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 101 பயணிகள், 7 விமானப் பணிக் குழுவினர் இருந்தனர்.
இந்த விமானம் இறங்கும்போது ஓடுதளத்தில் இறங்காமல் விமான நிலையத்துக்கு அடுத்திருந்த கடலில் இறங்கிவிட்டது. இறங்கிய வேகத்தினால் நடுப்பகுதியில் உடைந்து, விமானம் இரு துண்டாகியது. அப்போது வானிலை சாதாரண நிலையில் இருந்தபோதிலும் விமானம் ஏன் கடலில் இறங்கியது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சில பயணிகள் லேசான காயம் அடைந்துள்ளனர். குறைந்த கட்டணம் வசூலிக்கும் லயன்ஏர் விமான சேவை நிறுவனம் 2012-ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கியது.
Popular Posts:
- மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் முதன் முதலாக களம் இறங்கிய ஒரு திருநங்கை
- மாடு பிடிக்கப்போய் குட்டையில் மூழ்கிய 3 பள்ளி மாணவிகள் பலி
- மலேசிய அருகே வந்து கொண்டிருந்த இந்தோனேசியா அகதிகள் படகு கடலில் மூழ்கியது
- உக்ரைன் வான் பகுதியில் பறந்த மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது 298 பேர் பலி
- மாயமாகி போன மலேசிய விமான தேடுதல் வேட்டை: உலக நாடுகளின் கடுமையான போராட்டம்