நோக்கியா நிறுவனத்தை வாங்குகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

Microsoft buys Nokia உலகின் முன்னணி கைபேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கவுள்ளது. மிக வேகமாக மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு நிறுவனங்கள் போட்டிப்போட தொடங்கவிட்டதால், சாம்சங், சோனி, ஆப்பிள் போன்றன நோக்கியாவின் இடத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் நெருக்கடியான சூழலில் நோக்கியாவை வாங்க மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது. அதாவது 7.17 பில்லியன் டொலர்களுக்கு நோக்கியாவை வாங்குகிறது. மேலும் நோக்கியா நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குனரான ஸ்டீபன் எலோப் மீண்டும் மைக்ரோசாப்டிலேயே இணைவார் என்றும் தெரிகிறது. இவர் மைக்ரோசாப்டில் இருந்து தான் நோக்கியாவுக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாப்ட்டின் இப்போதைய தலைவரான பால்மர் விரைவில் பதவி விலக உள்ள நிலையில், ஸ்டீபன் எலோப் மைக்ரோசாப்ட்டின் தலைவாரகவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Microsoft and Nokia today announced that the “Boards of Directors for both companies have decided to enter…

Read More நோக்கியா நிறுவனத்தை வாங்குகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

கருப்பைபுற்றுநோய் பாதித்த பெண் இரட்டை குழந்தைகளை சுமந்து கர்ப்பம்

Australian team creates IVF history with ovarian tissue transplant ஆஸ்திரேலியாவில் கருப்பை புற்றுநோய் பாதித்தால் தாயாக இயலாத நிலையில் இருந்த ஒரு பெண்ணிற்கு புதிய மருத்துவ முறைப்படி சிகிச்சை அளித்ததால் அவர் தற்போது இரட்டை குழந்தைகளை சுமந்து கர்ப்பமாக உள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலி என்ற பெண் கருப்பையில் புற்றுநோய் பாதித்தது. இதற்கு சிகிச்சை மேற்கொண்டதால் வலியால் எப்போதும் தாயாக முடியாத நிலை ஏற்பட்டது.. 26 வயதான அப்பெணிற்கு மருத்துவர்கள் உதவ முயன்றனர். அதன்படி, வலிக்கு புற்றுநோய்க்கு சிகிச்சை செய்தபோது வெட்டியெடுக்கப்பட்ட கருப்பையின் நோய் தாக்காத பகுதியின் திசுக்கள் பாதுகாக்கப்பட்டிருந்தன.  அவற்றைப் பயன்படுத்துவதன்மூலம் அவருக்கு கருமுட்டை வளருவதற்கு மருத்துவர்கள் முயற்சித்தனர். கருப்பை திசு மாற்று சிகிச்சைக்கு பிறகு சில வருடங்களின் தொடர் முயற்சிக்குப் பின், தற்போது வலி 26 வாரம் கர்ப்பமாக உள்ளார். அவர் இரட்டைக்…

Read More கருப்பைபுற்றுநோய் பாதித்த பெண் இரட்டை குழந்தைகளை சுமந்து கர்ப்பம்

பாலியல் குற்றவாளி ஏரியல் காஸ்ட்ரோ சிறையில் தற்கொலை

Cleveland kidnapper Ariel Castro found hanging in prison cell மூன்று பெண்களைக் கடத்தி வந்து கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 1000 ஆண்டுகள் சிறைத்தண்டனைப் பெற்ற ஏரியல் காஸ்ட்ரோ என்ற கைதி சிறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான். அமெரிக்கா, ஓஹையோ மாநிலத்தில் வாழ்ந்து வந்த ஏரியல் காஸ்ட்ரோ (53) என்ற ஆசாமி, கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டிற்குள் மிச்சேல் நைட் (20), அமெண்டா பெர்ரி (17), கினா டிஜெசஸ் (14) என்ற மூன்று பெண்களை கடத்திச் சென்று வீட்டுச்சிறையில் வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளான். பத்தாண்டுகளுக்கும் மேலாக ஏரியலின் கட்டுப்பாட்டில் சிறை பட்டுக்கிடந்த அவர்களில் ஒரு பெண், கடந்த மே மாதம் அங்கிருந்து தப்பினார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏரியல் கைது செய்யப்பட்டான். பின்னர், வீட்டில்…

Read More பாலியல் குற்றவாளி ஏரியல் காஸ்ட்ரோ சிறையில் தற்கொலை

ஐரோப்பாவிலேயே மிக பெரிய நூலகத்தை மலாலா யூசஃபாய் திறந்தார்

Malala Yousafzai opens Europe’s biggest library in UK தாலிபான்களால் தலையில் குண்டடிபட்டு உயிர் பிழைத்த பாகிஸ்தான் மாணவி மலாலா யூசப்சாய் ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொது நூலகத்தை திறந்து வைத்துள்ளார். தாலிபான்களால் சுடப்பட்டு தலையில் குண்டடிபட்ட பாகிஸ்தான் பள்ளி மாணவி மலாலா யூசப்சாய்(16) சிகிச்சைக்காக இங்கிலாந்தில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் உயிர் பிழைத்தார். இந்த சம்பவத்தை அடுத்து அவரது குடும்பம் இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம் நகரில் செட்டிலாகிவிட்டது. தற்போது மலாலா பிர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் பிர்மிங்காம் பகுதியில் 189 மில்லியன் பவுண்ட் செலவில் பொது நூலகம் கட்டப்பட்டது. ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய நூலகம் இது தான். இந்த நூலகத்தை மலாலா திறந்து வைத்தார். பிர்மிங்காம் தான் இங்கிலாந்தின் இதயத்துடிப்பு. இந்த…

Read More ஐரோப்பாவிலேயே மிக பெரிய நூலகத்தை மலாலா யூசஃபாய் திறந்தார்

ஃப்ரீஸருக்கு பதிலாக 11 வயது மகளை விற்ற தாய்

Argentine woman swaps 11 year old daughter for a freezer அர்ஜெண்டினாவில் ஒரு ஃப்ரீஸருக்காக பெற்ற மகளை தாயே விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜெண்டினாவை சேர்ந்தவர் பாப்லா செசரினா. இவருக்கு வயது 30. நான்கு குழந்தைகளின் தாயான இவரின் கணவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.  இந்நிலையில், பியுனோவ் எய்ர்ஸ் அருகேயுள்ள பெர்னல் தொழிற்பேட்டையில் குழந்தை தொழிலாளர்களை அடைத்து வைத்து வேலை வாங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  விரைந்து சென்ற போலீசார், அங்குள்ள அலுமினியம் தொழிற்சாலையில் வேலை செய்த சிறுவர், சிறுமிகளை மீட்டனர். விசாரணையின் போது அச்சிறுமி, ஃப்ரீஸருக்கு ஆசைப்பட்ட என் தாய் என்னை ஒருவரிடம் விற்றுவிட்டார். அவர்கள் என்னை தொழிற்சாலையில் வேலைக்கு அனுப்பினர். நான் இங்கு பாலியல் தொந்தரவு, மன உளைச்சல் ஆகியவற்றிற்கு ஆளாகியுள்ளேன் எனத்தெரிவித்து போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.  இதனையடுத்து,…

Read More ஃப்ரீஸருக்கு பதிலாக 11 வயது மகளை விற்ற தாய்

காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண்

Woman accused hides $5,000 in a body part அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் அவரது காதலனிடமிருந்து திருடிய பணத்தை ஏடாகூடமான இடத்தில் வைத்து அவதிப்பட்டுள்ளார்.  அமெரிக்காவின் டென்னிசே நகரை சேர்ந்தவர் கிறிஸ்டி பிளாக் . 43 வயதான இவர் அவரது காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்து வைத்துள்ளார். பிறகு அந்த பணத்தை வெளியேற்ற முடியாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காதலரிடமிருந்து கிறிஸ்டி 5000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம்) திருடினார். அதை ஆசனவாய் வழியாக திணித்து குடல் பகுதியில் மறைத்து வைத்தார். பின்னர் அப்பணத்தை வெளியே எடுக்க முயற்சி செய்தார்.ஆனால், அதை வெளியே எடுக்க முடியவில்லை. அவர் மேற்கொண்ட முயற்சி காரணமாக அவருக்கு ரத்தப்போக்கு ஏற்படவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின் குடல் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் வெளியே…

Read More காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண்

ஜப்பான் மற்றும் கனடாவில் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின

Earthquake in Japan and Canada ஜப்பான் மற்றும் கனடாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. ஜப்பானின் தெற்கு பகுதியில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் டோக்கியோவிலும் அதை சுற்றியுள்ள பகுதியிலும் கட்டிடங்கள் குலுங்கின. இதை தொடர்ந்து பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரம் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். அங்கு 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. டோக்கியோவின் தெற்கு பகுதியில் பூமிக்கு அடியில் 400 கி.மீட்டர் ஆழத்தில் இது உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயர் சேதம் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கவில்லை. கனடாவில் வான்குவர் தீவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடக்கத்தில் 6.2 ரிக்டர் அளவில் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது 6 ரிக்டர் ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நில டுக்கம் காரணமாக…

Read More ஜப்பான் மற்றும் கனடாவில் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின

இளைஞர்களை அடிமையாக்கும் இ-சிகரெட்: உலக சுகாதார நிறுவனம்

e cigarettes new generation addicts இந்தியாவில் இ- சிகரெட்டுக்கு தடை விதிக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை. பார்க், பீச், ரயில், பஸ், திரையரங்கு… எனப் பொது இடங்களில் எங்குவேண்டுமானாலும் எங்கள் நிறுவனத்தின் சிகரெட்டைப் புகைக்கலாம். நெருப்பு இல்லை, சாம்பல் இல்லை, அதிக அளவில் புகை இல்லை. சிகரெட் பிடித்து முடித்ததும் சட்டைப் பையில் போட்டு எடுத்தும் செல்லலாம். எல்லாவற்றுக்கும் மேலாக இது உங்கள் உடல் ஆரோக்கியத்துக்குப் பாதகம் ஏற்படுத்தாத சிகரெட்!’ – இ-சிகரெட் நிறுவனங்களின் ஈர்ப்பு அழைப்பு இது. அது என்ன இ-சிகரெட்? ‘புகை பிடிக்கும் பழக்கத்துக்கு மாற்றாக, புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீண்டு வெளியே வர கண்டுபிடிக்கப்பட்டதுதான் எலெக்ட்ரானிக் சிகரெட் எனப்படும் இ-சிகரெட்’ என்கிறார்கள். இந்நிலையில் இ,சிகரெட்டில் போதை வரவழைக்கும் நறுமணத்தை கலந்து புகைத்து உச்சகட்ட போதையில் திளைக்கின்றனர். எவ்வித பரிசோதனையிலும்…

Read More இளைஞர்களை அடிமையாக்கும் இ-சிகரெட்: உலக சுகாதார நிறுவனம்

5 வயது சிறுவன் இளம் விமானம் ஓட்டி கின்னஸ் சாதனை

 5 Year old Chinese Boy becomes youngest pilot, breaking Guinness world record சீனாவைச் சேர்ந்த 5 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் உலகின் மிக இளம் வயதில் விமான ஓட்டுநராக விமானத்தைச் செலுத்தி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளான். ஆகஸ்ட் 31 ஆம் திகதி டுவோடுவோ என்று செல்லப் பெயரால் அழைக்கப் படும் ஹே யிடே எனும் இச்சிறுவன் பீஜிங் உயிரியல் பூங்காவிற்கு மேலாக 35 நிமிடம் அல்ட்ராலைட் விமானம் ஒன்றை  ஓட்டி கின்னஸ் சாதனை புரிந்ததாக செவ்வாய்க்கிழமை சீன மீடியா அறிவித்துள்ளது. டுவோடுவோ விமானம் ஓட்டுவதைக் கற்றுக் கொண்ட ஏவியேஷன் கிளப்பின் இயக்குனரான ஷாங்க் யொங்குயி இது பற்றிக் கூறுகையில் இச்சிறுவன் 30 Km தூரத்துக்கு விமானத்தை ஓட்டியிருந்ததாகக் கூறியுள்ளார். மேலும் குளோபல் டைம்ஸ் பத்திரிகைக்கு இச்சிறுவனின் தந்தையான ஹே லியெஷெங் பேட்டியளிக்கையில் தனது மகன்…

Read More 5 வயது சிறுவன் இளம் விமானம் ஓட்டி கின்னஸ் சாதனை

ஆப்கான் அமெரிக்க தளம் மீது தற்கொலைப்படை தாக்குதல்

Taliban Attacks U.S. Base in Afghanistan; 3 Suicide Bombers Killed ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் அரசுக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். ஆப்கான் நங்கர்ஹர் மாகாண டொர்கானில் உள்ள அமெரிக்க ராணுவத்தளத்தில் இருந்து நேட்டோ ராணுவத்தளவாடங்கள் லாரிகள் மூலம் அனுப்பிவைக்கப்படுகின்றன. இந்த முக்கிய ராணுவ தளத்தை குறிவைத்து நேற்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பின்னர் அங்கு நின்றிருந்த தளவாட லாரிகள் மீது தாக்குதல் நடத்தி எரித்தனர். இதனையடுத்து அமெரிக்க ராணுவத்தினருக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதில் மூன்று தலிபான்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஆப்கான் அல்லது அமெரிக்க ராணுவத்தினரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ராணுவத்தளத்தில் இருந்த நிறைய லாரிகள் எரிந்ததால் அதிகம் சேதமும் ஏற்பட்டிருக்க கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ படையினர் அடுத்த ஆண்டுக்குள் வெளியேறவுள்ள நிலையில் தலிபான்கள்…

Read More ஆப்கான் அமெரிக்க தளம் மீது தற்கொலைப்படை தாக்குதல்