சிரியாவில் நிறைவேற்றப்பட்ட கொடூர தண்டணை! அதிர்ச்சி வீடியோ

Horrifying fate of Assad’s soldiers executed on camera by Syrian rebels சிரியாவில் சிறை பிடிக்கப்பட்ட இராணுவத்தினரை, புரட்சிப்படையினர் தலையில் சுட்டுக் கொள்வது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் புரட்சிபடையினரால் சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தினர் சுட்டுக் கொல்லப்படும் காட்சி அடங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அனைத்து வீரர்களும் உடைகளை அகற்றிய நிலையில் கைகளைக் கட்டி, தரையில் கீழே தள்ளி விடப்படுகின்றனர். பின்னர் அவர்களுக்குப் பின்னால் நின்று கொள்ளும் புரட்சிப் படையினர், துப்பாக்கிகளால் அவர்களை சுட்டுத் தள்ளுகின்றனர். இந்தத் தண்டனைக்கு முன்பாக புரட்சிப் படையினரின் அப்துல் சமத் இஸ்ஸா, முதலில் ஒன்றை வாசித்து துப்பாக்கி சூட்டை ஆரம்பித்து வைக்கிறார். இவர் பேசுகையில், கடந்த ஐம்பது ஆண்டுகளாக…

Read More சிரியாவில் நிறைவேற்றப்பட்ட கொடூர தண்டணை! அதிர்ச்சி வீடியோ

இந்திய எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி ஆப்கானிஸ்தானில் சுட்டுக்கொலை

 Indian who wrote about escaping from Taliban, shot dead in Afghanistan ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான சுஷ்மிதா பானர்ஜி சுட்டு கொல்லப் பட்டுள்ளார். இந்தியாவை சேர்ந்த சுஷ்மிதா பானர்ஜி 1989-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தொழிலதிபர் ஜானாபாஸ் கானை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார். 1995ம் ஆண்டு இந்தியாவின் அதிகம் விற்பனையான தலிபான்களை பற்றிய புத்தகத்தை எழுதினார். இவர் எழுதிய புத்தகத்தை தழுவியே 2003 இல் ‘Escape From Taliban’ எனும் திரைப்படம் மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளிவந்தது. இதில் சுஷ்மிதா, தலிபான்களிடமிருந்து தப்பிய உண்மைச்சம்பவம் அப்படியே படமாக்கப்பட்டிருந்தது. இதனால், சுஷ்மிதா மீது கோபம் கொண்ட தலிபான்கள் அவரை கொல்ல முயற்சித்தனர். இதனால் அவர் இந்தியாவிலேயே வாழ்ந்தார். ஆப்கானிஸ்தானில் தனது அனுபவங்கள் குறித்து அவுட்லுக் சஞ்சிகைக்கு எழுதி வந்தார். 1994ம் ஆண்டு தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில்…

Read More இந்திய எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி ஆப்கானிஸ்தானில் சுட்டுக்கொலை

தற்கொலை செய்யும் முன்பு உடலை தானம் செய்த சீன நபர்

Chinese man donates body before suicide  சீனாவைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் முன்பு தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக அளிப்பதாக போலீசாருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். சீனாவின் கிழக்கு மாகாணமான ஜெஜியாங்கில் உள்ள ஹாங்சூவைச் சேர்ந்தவர் வாங்(30). அவர் தசை தொடர்பான பிரச்சனையால் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் தற்கொலை செய்துகொள்வது என்று முடிவு எடுத்துள்ளார். இதையடுத்து அவர் போலீசாருக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் எனது உடலை தானம் செய்ய முடிவு செய்துள்ளேன். இந்த எஸ்.எம்.எஸ்.ஐ நீங்கள் படிக்கும்போது நான் இறந்திருப்பேன். உங்களுக்கு தொல்லை கொடுப்பதற்கு மன்னிக்கவும் என்று அதில் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் வாங்கின் வீட்டிற்கு சென்றபோது அவர் தூக்கில் பிணமாகத் தொங்கி கொண்டிருந்தார். வாங் தனது உடலை தானம் செய்ய…

Read More தற்கொலை செய்யும் முன்பு உடலை தானம் செய்த சீன நபர்

ரஷ்ய மாடல் அழகியை எரித்துக் கொன்ற கணவன்

Police question husband in Russian model’s death  ரஷ்யாவில் பிரபல மாடல் அழகி கடத்தப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு எய்ட்ஸ் வர மனைவிதான் காரணம் என்று சந்தேகமடைந்து கணவனே கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ரஷ்யாவில் பிரபல மாடல் அழகி யூலியா லோஷாகினா (28). இவரது கணவர் திமித்ரி லோஷாகினா (37) இவர் பிரபல போட்டோ கிராபர். யூலியாவை பல்வேறு கோணங்களில் போட்டோ எடுத்த திமித்ரி, அவரது அழகில் மயங்கி காதலிக்க தொடங்கினார். ஒரு முறை இந்தியாவில் மணமகள் அணியும் உடைகளை படம் பிடிக்க திமித்ரி சென்றார். அவருடன் யூலியாவும் சென்றிருந்தார். அப்போது விதவிதமான மணமகள் உடையில் யூலியாவை படம் பிடித்தார் திமித்ரி. அப்போது அவரது அழகில் மயங்கி இந்தியாவிலேயே தனது காதலை சொன்னார். அதை யூலியாவும் ஏற்று…

Read More ரஷ்ய மாடல் அழகியை எரித்துக் கொன்ற கணவன்

பாகிஸ்தானில் ஒரே நாளில் 83,00,00,000 ரூபாய் சம்பாதிக்கும் கிரிமினல்கள்

Pakistan financial capital Karachi black economy generates Rs 830 million daily பாகிஸ்தானில் சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் கிரிமினல் வேலைகளால் தினமும் 83,00,00,000 ரூபாய் வருமானம் ஈட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் வர்த்தக நகராக திகழ்வது கராச்சி. இங்கு கிரிமினல் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகம். நூற்றுக்கணக்கான ரவுடி கும்பல்கள் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆள் கடத்தல், வழிப்பறி, மிரட்டி பணம் பறித்தல் என பல்வேறு கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். உலகிலேயே கிரிமினல் குற்றவாளிகள் அதிகம் நிறைந்த நகரங்களில் ஒன்றாகவும் கராச்சி திகழ்கிறது. கராச்சி நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் தினமும் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்படுகிறார்கள். இதன் மூலம் தினமும் அவர்கள் 300 கோடி ரூபாய் வரை சம்பாதிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது . அதுமட்டுமல்லாமல் ரவுடிகள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் தினமும்…

Read More பாகிஸ்தானில் ஒரே நாளில் 83,00,00,000 ரூபாய் சம்பாதிக்கும் கிரிமினல்கள்

பாகிஸ்தான் கடற்படை தளபதி நசீம் சுட்டுக்கொலை

Gunmen kill Pakistan Navy officer in Karachi பாகிஸ்தான் கடற்படை தளபதி நசீம் அடையாளம்  தெரியாத நபர்களால் புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார். கராச்சி ஸ்டேடியம் ரகமத்துல்லா ரோட்டில் உள்ள அவர்களது வீட்டருகே காரில் சென்ற போது அவர்களை, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில், இருவரும் படுகாயமடைந்தனர். அருகில் உள்ளவர்கள், அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நசீம் இறந்தார். குண்டுகள் துளைக்கப்பட்ட காரை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. கராச்சியில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த அதிபர் நவாஸ்ஷெரிப் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், இந்த வன்முறை சம்பவம் நடந்துள்ளது. Gunmen kill Pakistan Navy officer in Karachi A Pakistan Navy officer, Captain Muhammad Nadeem Ahmed, was shot dead…

Read More பாகிஸ்தான் கடற்படை தளபதி நசீம் சுட்டுக்கொலை

சிரியா மீது போர் தொடுக்க அமெரிக்காவிற்கு செனட் சபை ஒப்புதல்

US senators offer support for Syria strike சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா குழுவினர் சிரியா மீது போர் தொடுக்கு செனட்டை அணுகினர் செனட் சபை போருக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த போரினை 60நாட்கலுக்குல் முடித்து திரும்ப வேண்டும் என்றும் செனட் சபை அமெரிக்காவிற்கு கூறியுள்ளது, இதனால் எந்த நேரத்திலும் அமெரிக்க சிரியா மீது போர் தொடுக்கலாம் என்ற பதட்டம் நிலவி வருகிறது இதற்கிடையே அமெரிக்காவின் போக்கிற்கு ரசியா எதிர்ப்பு தெரிவித்து இருப்பது குறிப்பிடதக்கது. video link: US senators offer support for Syria strike Leading Democratic and Republican senators have reached a deal on a motion authorizing an attack on Syria. this is a momentum to US President…

Read More சிரியா மீது போர் தொடுக்க அமெரிக்காவிற்கு செனட் சபை ஒப்புதல்

அமெரிக்காவை எச்சரித்து விளாதிமிர் புதின் அறிக்கை

putin warns US action against syria சிரியா மீது அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக தாக்குதல் நடத்தக் கூடாது என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.பி. செய்தி நிறுவனத்துக்கும் ரஷ்ய அரசின் சேனல்-1 தொலைக்காட்சிக்கும் அவர் அளித்த பேட்டியில் கூறியது: சிரியாவுக்கு எதிரி நாடுகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளிக்கக் கூடிய எஸ்-300 ரக ஏவுகணைகளின் பாகங்களை ரஷியா வழங்கியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அனுமதியின்றி சிரியா மீது தாக்குதல் நடத்த மேற்கத்திய நாடுகள் முடிவு செய்தால் சிரியாவுக்கு கூடுதலாக ஏவுகணை பாகங்கள் விற்பனை செய்யப்படும். சிரியாவில் கிளர்ச்சியாளர்களை எதிர்த்து ராணுவம் போரிட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் ராணுவம் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது என்று கூறுவது கேலிக்குரியது. அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தினால் அதையே சாக்காகக் கூறி தங்கள் நாட்டின் மீது தடைகள் விதிக்கப்படவும்,…

Read More அமெரிக்காவை எச்சரித்து விளாதிமிர் புதின் அறிக்கை

சீனாவில் உள்ள ஆற்றில் 100 டன் மீன்கள் செத்து மிதந்தன

China chemical spill kills thousands of fish சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் பியுஹே ஆற்றில் இரசாயன தொழிற்சாலையின் அம்மோனிய கழிவுகள் கலந்தன. இதனையடுத்து அந்த ஆற்றில் இருந்த மீன்கள் எல்லாம் செத்து மிதந்தன. உடனடியாக அப்பகுதிக்கு வந்த சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் செத்து மிதந்த 100 டன் மீன்களை வெளியே எடுத்து சேகரித்தனர். கொட்டப்பட்டிருந்த அந்த இறந்த மீன்கள் பனித்திட்டுகள் போன்று காட்சியளித்தன. இதனால் அப்பகுதி மீனவர்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த வருடம் தொடக்கத்தில் ஷாங்காய் மாகாண ஆற்றில் இதுபோன்று 16 ஆயிரம் பன்றிகள் செத்து மிதந்து வந்த சம்பவம் அதிர்ச்சியூட்டியது. இதற்கு அந்த ஆற்றின் கரையில் இருந்த பன்றி பண்ணை மீது குற்றம் சாட்டப்பட்டது. இப்போது 100 டன் மீன்கள் இறந்துபோனதற்கு ஹூபெய் மாகாண ஒரு ரசாயன தொழிற்சாலை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் முன்னேறி வரும்…

Read More சீனாவில் உள்ள ஆற்றில் 100 டன் மீன்கள் செத்து மிதந்தன

ஆப்கன் பார்லிமென்ட்டில் இந்துக்களுக்கு இடஒதுக்கீடு

Afghanistan: Karzai passes legislation to reserve seats for Hindus and Sikhs in National Assembly ஆப்கானிஸ்தானில் வாழும் இந்து மற்றும் சீக்கிய மக்களுக்கும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் பாராளுமன்ற மேல்சபையில் சிறப்பு இடங்களை ஒதுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். அப்படி தனியாக சிறப்பு இருக்கைகளை ஒதுக்க முடியாது என ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பு சட்ட வல்லுனர்கள் மறுத்து விட்டனர். இந்நிலையில், வரும் பாராளுமன்ற மக்களவை தேர்தலில் இந்து மற்றும் சீக்கிய மதத்தை சேர்ந்தவர்களுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கி ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய் இன்று உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தற்போது 250 ஆக இருக்கும் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இனி ஒரு இந்துவும், ஒரு சீக்கியரும் இடம் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்றம் செயல்படாத வேளைகளில் சில சிறப்பு அறிவிப்புகளை வெளியிடும்…

Read More ஆப்கன் பார்லிமென்ட்டில் இந்துக்களுக்கு இடஒதுக்கீடு