Naveneetham pillai, the United Nation High commissioner for Human Rights delivered about sri lanka ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கான தனது பயணத்தின் போது தன்னை சந்தித்த மனித உரிமை விரும்பிகள் மற்றும் சமுக ஆர்வலர்களுக்கு அச்சுறுத்தப்பட்டது தொடர்பான விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப்பேரவையின் பருவகால கூடதொடர் இன்று ஆரம்பமானது. இலங்கை தொடர்பான தொடர்பில் கருத்து வெளியிடும் போது நவநீதம்பிள்ளை மேற்கண்ட கருத்தை வெளியிட்டார். Naveneetham pillai, the United Nation High commissioner for Human Rights delivered about sri lanka Advertisements: Buy quality African food products from Ponkam traders in Belgium Visit: www.ponkamtraders.com இதையும் படியுங்கள்…
Read More இலங்கை மனித உரிமை விரும்பிகள் மீது அச்சுறுத்தல்கள்: நவிபிள்ளைCategory: உலகம் சிறகுகள்
இளவரசர் ஆண்ட்ரூவை கொள்ளையன் என நினைத்து கைது
Bad week at Buckingham Palace: Prince Andrew mistaken for intruder இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் 2–வது மகன் இளவரசர் ஆண்ட்ரூ (32). இவர் எலிசபெத்தின் 3–வது குழந்தை ஆவார். சம்பவத்தன்று காலை பக்கிங்காம் அரண்மனையின் தோட்டத்தில் ‘வாக்கிங்’ சென்றார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த லண்டன் மெட்ரோ பாலிட்டன் போலீசார் அவரை துப்பாக்கி முனையில் திடீரென கைது செய்தனர். இதனால் சுமார் அரை நிமிடம் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இளவரசர் ஆண்ட்ரூவுக்கு ஒன்றும் புரியவில்லை. எனவே, அவரும் சிறிது நேரம் தடுமாற்றம் அடைந்தார். இதற்கிடையே, துப்பாக்கி ஏந்திய போலீசார் அவரை சுட முயன்றபோது அரண்மனை காவலர்கள் ஓடிவந்து அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் இவர் இளவரசர் ஆண்ட்ரூ என்று விளக்கினர். இதனால் துப்பாக்கி சூட்டில் இருந்து அவர் தப்பினார். அதை தொடர்ந்து…
Read More இளவரசர் ஆண்ட்ரூவை கொள்ளையன் என நினைத்து கைதுஆப்கானிஸ்தானில் நேட்டோ படையின் விமான தாக்குதல் 15 பேர் பலி
NATO strike, militant attack kills 15 in Afghanistan தாலிபாகளை குறிவைத்து நேட்டோ படையினர் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலியாகியுள்ளதாக ஆப்கன் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் இருந்து 2014-ம் ஆண்டு இறுதிக்குள் நேட்டோ படையினர் வெளியேறவுள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருக்கும் அதிகாரத்தை ஆப்கானிஸ்தான் இராணுவத்தினரிடம் விட்டுக்கொடுத்து வருகின்றனர். 90 சதவிகித ராணுவ நடவடிக்கைகளை ஆப்கான் ராணுவத்திடம் ஒப்படைத்து விட்டதாக கூறப்படுகிறது. இருந்தும் பெரும்பாலான விமானத்தாக்குலை நேட்டோ படையினரே நடத்துவதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் கிழக்கில் பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள குனாரில் தலிபான்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவர்களை குறிவைத்து நேட்டோ படையினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 9 பேர் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர். இருந்தும் 10 தலிபான்கள் கொல்லப்பட்டதாக நேட்டோ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். பொதுமக்கள் இறப்பு…
Read More ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையின் விமான தாக்குதல் 15 பேர் பலிவிஷம் வைத்து 41 யானைகள் கொலை ஜிம்பாப்வே நாட்டில்
Zimbabwe elephants poisoned by poachers in Hwange ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே நாட்டில் புகழ்பெற்ற வாங் தேசியப்பூங்கா உள்ளது. கலஹாரி பாலைவனம் அருகே அமைந்துள்ள இப்பூங்காவில் யானைகள், சிங்கங்கள், புலிகள் என பல விலங்குகள் வசிக்கின்றன. இந்நிலையில் இந்த பூங்காவில் யானைகள் மற்றும் காண்டாமிருகங்கள் கொல்லப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மருத்துவ பயன்பாட்டிற்காக வேட்டையாளர்களால் விலங்குகளின் தந்தங்கள் மற்றும் கொம்புகள் வேட்டையாடப்படுகின்றன என்று கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களில் மட்டும் இப்பூங்காவில் 41 யானைகள் சயனைடு விஷம் வைத்து கொல்லப்பட்டு அதன் தந்தங்களை கொள்ளையர்கள் வேட்டையாடி சென்று இருக்கின்றனர் என்று பூங்காவின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். இதுகுறித்து நடந்த விசாரணையில், 5 வன விலங்கு வேட்டையாளர்கள் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர். சயனைடு விஷத்தால் இறந்துபோன விலங்குகளின் உடலை தொடும் விலங்குகள் மற்றும் மனிதர்களும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த…
Read More விஷம் வைத்து 41 யானைகள் கொலை ஜிம்பாப்வே நாட்டில்17 மாத குழந்தை 7வது மாடியிலிருந்து விழுந்த கவலைக்கிடம்
Toddler Survives Fall From Seventh-Floor Balcony, Narrowly Misses Concrete Walkway கனடாவின் ரொறொன்ரோ மாகாணத்தில் 7வது மாடியிலிருந்து தவறி விழுந்த 17 மாத குழந்தை ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது. Overlea Boulevard பகுதியின் Don Mills வீதியருகில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தின் 7வது மாடி பால்கனியிலிருந்து 17 மாத ஆண் குழந்தை ஒன்று கீழே விழுந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் குழந்தை இக்கட்டான இருந்தாலும், உயிர் பிழைக்க சாத்தியம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு சந்தேகப்படும்படியான காரணமெதுவும் தெரியவில்லை என்றும் ரொறொன்ரோ போலீசார் தெரிவித்துள்ளனர். குழந்தை நாற்காலியில் ஏறி பால்கனி கிராதியின் மேலாக விழுந்திருக்கலாமா என்ற கோணத்தில் புலன் விசாரனையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. கடுமையான காயங்களுடன் சிறுவன் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளான். Toddler Survives Fall From Seventh-Floor Balcony, Narrowly Misses Concrete Walkway A…
Read More 17 மாத குழந்தை 7வது மாடியிலிருந்து விழுந்த கவலைக்கிடம்ஒரு வருடமாக விக்கிக் கொண்டே இருக்கும் மனிதர்!
Hangover leaves Irishman with hiccups for 14 months 14 மாதங்களாக விடாத விக்கலால் அவஸ்தைப்பட்டு வருகிறார் டேனியல் என்ற நபர். அயர்லாந்தை சேர்ந்தவர் டேனியல் கிளவ்(வயது 37). இவர் கடந்த 2012ம் ஆண்டு மது பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு, நண்பர்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தார். அத்துடன் பீர் மற்றும் ஸ்பிரிட்டை ஆசை தீர குடித்து மகிழ்ந்துள்ளார். அப்போது திடீரென விக்கல் ஏற்பட்டது, அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் நேரம் ஆக ஆக 7 நொடிக்கு ஒருமுறை விக்கல் தொடர்ந்து வந்தது. இதனால் பீதி அடைந்தவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தார். இருப்பினும் குணமாகவில்லை, தொடர்ந்து விக்கல் வந்து கொண்டே இருப்பதால் மூச்சுவிட முடியாமல், சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல் கஷ்டப்படுகிறாராம். எத்தனையோ சிகிச்சைகள் மேற்கொண்டும், மனநல சிகிச்சை எடுத்துக் கொண்டும் குணமாகாமல் அவஸ்தைப்படுகிறாராம். இவருக்கு…
Read More ஒரு வருடமாக விக்கிக் கொண்டே இருக்கும் மனிதர்!விண்வெளியில் இருந்து பேசிய முதல் ரோபோட்
Robo-astronaut Kirobo utters first words in space விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள முதல் மனித உருவம் கொண்ட ரோபோட், தனது முதல் வார்த்தையை பதிவு செய்தது. ஜப்பானால் உருவாக்கப்பட்ட கிரோபோ என்ற ரோபோட், தனது முதல் வார்த்தையை விண்வெளியில் பதிவு செய்து புதிய வரலாற்று சாதனை படைத்தது. அகன்ற கண்களுடன் பெரிய காதுகளையும் கொண்ட இந்த ரோபோட், விண்வெளியில் இருந்த படியே பூமியில் வசிக்கும் மனிதர்களுக்கு காலை வணக்கம் தெரிவித்தது. இந்த ரோபோட்டின் பேச்சு வீடியோ மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. முதலில் ஜப்பான் மொழியில் பேசத் தொடங்கிய போது, பூமியில் உள்ள அனைவருக்கும் குட்மார்னிங், நான் தான் கிரோபோ, நான் தான் உலகின் முதல் விண்வெளி ரோபோட் வீரர் என்று தெரிவித்தது. இதற்கு முன்னதாக நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்டிராங்குக்கும்…
Read More விண்வெளியில் இருந்து பேசிய முதல் ரோபோட்உலகில் மிகப்பெரிய எரிமலை கண்டுபிடிப்பு
Deep In The Pacific, Scientists Discover Biggest Volcano On Earth உலகிலேயே மிகப் பெரிய எரிமலை ஜப்பான் நாட்டிற்குக் கிழக்கே 1,609 கி.மீ தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தமு மசிஃப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எரிமலை சூரிய மண்டலத்தில் இரண்டாவது பெரிய எரிமலையாகும். செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் முதல் பெரிய எரிமலையாகக் கருதப்படும் ஒலிம்பஸ் மோன்ஸ் இதைவிட 25 சதவிகிதம் பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.130-145 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் உலகின் நீர்ப்பரப்புக்கடியில் அமைந்திருந்த ஷட்ஸ்கி ரைஸ் என்ற மலைத்தொடரில் இருந்த பல எரிமலைகள் வெடித்ததன் மூலம் இந்த எரிமலை உருவாகியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பரப்பளவில் இங்கிலாந்து தீவுகளை அல்லது நியூமெக்சிகோ மாகாணத்தை இது ஒத்துள்ளது. உருவாகிய சில மில்லியன் வருடங்களிலேயே செயலிழந்து போன இந்த எரிமலை 310,798 சதுர கி.மீ பரப்பளவு கொண்டதாக…
Read More உலகில் மிகப்பெரிய எரிமலை கண்டுபிடிப்புஅமெரிக்காவில் 2 இந்தியர்கள் சுட்டுக் கொலை
Two Indian Americans shot dead in US, 1 held அமெரிக்காவின் வடக்கு இண்டியானா நகரில் பல்பொருள் அங்காடிக்கு சென்ற 2 இந்தியர்கள் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தப்பி ஓடிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கொலையான இருவரின் பெயர் ஜந்தர் பாட்சா (55 வயது), பவன் சிங் (22) என்பதாகும். அமெரிக்காவின் வடக்கு இன்டியானா நகரில் உள்ள சூப்பர் மார்கெட்டிற்கு இவர்கள் இருவரும் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கச் சென்றனர். அப்போது, முகமூடி அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்களிர் ஒருவன் இவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டார். துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல்துறையினர் கொலையானவர்களின் உடல்களை மீட்டு, ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய மர்ம நபரை தீவிரமாக தேடிய போலீசார்…
Read More அமெரிக்காவில் 2 இந்தியர்கள் சுட்டுக் கொலைஇங்கிலாந்தில் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
Over 100 cars crash in Britain, two hundred injured இங்கிலாந்தின் கென்ட் மாகாணத்தில் தற்போது கடும் மூடுபனி ஏற்படுகிறது. பகல் வேளையிலும் இருள் சூழ்ந்ததுபோன்று பனி மூடியதால், முகப்பு விளக்கு வெளிச்சத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இந்நிலையில், ஷெப்பி 4 வழிச்சாலை மேம்பாலத்தில் இன்று காலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. திடீரென பனி மூடியதால் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. என்ன நடக்கிறது என்பதை யூகிப்பதற்குள், கார், லாரி, சரக்கு வாகனங்கள் என அடுத்தடுத்து மோதின. இவ்வாறு 10 நிமிடத்தில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்தன. சுமார் 200 பேர் காயம் அடைந்தனர். இதில் 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மூடு பனியால் சாலையில் போதிய வெளிச்சம் இல்லை. ஆனாலும், வாகன ஓட்டிகள் முகப்பு வெளிச்சம் இல்லாமல் பாலத்தைக்…
Read More இங்கிலாந்தில் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து