சீன வாத்தியாரின் அத்துமீறல் முத்தம் கொடுத்தால் பரீட்சையில் பாஸ்

Chinese teacher forces school girls to kiss him to get diploma சீனாவில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர், தனது மாணவிகளிடம் இருந்து முத்தம் பெறுவது போன்ற புகைப்படங்கள் வெளியானதால் பிரச்சினையில் சிக்கியுள்ளார். வடக்கு சீனாவில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவிகள் தங்கள் பரீட்சையில் தேர்வாவதற்கு படித்தால் மட்டும்போதாதாம். நன்கு முத்தமிடவும் தெரிந்திருக்கவேண்டுமாம். இது அரசாங்க உத்தரவல்ல, கல்விக்கண் திறக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரின் ‘காமக் கட்டளை’. பள்ளி ஆசிரியர் வகுப்பறையில் வைத்தே மாணவிகளை ஒருவர் பின் ஒருவராக நின்று தன்னை முத்தமிட வைத்திருக்கிறார். அதற்கு ஒத்துக் கொள்ளாத மாணவிகள், ஆசிரியர் தங்களை முத்தமிட சம்மதிக்க வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் சரிப்பட்டு வராதவர்களை தேர்வில் தோல்வியடையச் செய்து விடுவாராம் இந்த ஆசிரியர். சிரித்துக் கொண்டே முத்தங்களை பெறும்…

Read More சீன வாத்தியாரின் அத்துமீறல் முத்தம் கொடுத்தால் பரீட்சையில் பாஸ்

அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளி ஸ்வாதி

Indian American Swati Dandekar in race for US Congress அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்வாதி தன்டேகர் போட்டியிடவுள்ளார். அமெரிக்காவின் ஐயோவா மாகாண சபையின் மேரியான் பகுதி பிரதிநிதியாக இவர் நாக்பூரைச் சேர்ந்த இவர் 1973ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார். இவர் தனது கணவர் அரவிந்த் மற்றும் இரு மகன்களுடன் மேரியான் பகுதியில் வசித்து வருகிறார். விவசாயம், தொழில்நுட்பம், சர்வதேச விவகாரங்களில் ஆர்வம் கொண்டவர் இவர். English News: Indian American Swati Dandekar in race for US Congress Indian American Swati Dandekar of Democratic Party has announced her candidacy for the 1st Congressional District of Iowa. Dandekar is a former Iowa legislator representing the…

Read More அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளி ஸ்வாதி

ஜப்பானில் மழையால் மூழ்கிய கிராமங்கள் 5000 பேர் வெளியேற்றம்

Japan Flood: 5,000 Japanese told to evacuate due to rains கடந்த வாரம் முதல் ஜப்பானில்  தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  இதனிடையே ஒரு புயல் தாக்க உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.  5000 பேர் பாதுகாப்பிற்காக ஜப்பானிலிருந்து வெளியேறியுள்ளனர்.  இதனால்வெள்ளத்தில் குமாமோட்டோ மாகாணத்தின் பல பகுதிகள் சூழ்ந்துள்ளது. மழையின் வேகம் கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்துள்ளது. ஆறுகளின் கரைகளில்  இதனால் உடைப்பு ஏற்பட்டு, விளைநிலங்கள் மற்றும் வீடுகள்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.  நான்கு லட்சம் பேர் கியூஷூ தீவில் மட்டும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய வீடுகளில் உள்ள முதியவர்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்படுகின்றனர்.  கடற்படை வீரர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குமாமோட்டோ மாகாணத்தில் உள்ள எரிமலையின் அடிவாரத்தில் உள்ள அசோ என்ற இடத்தில், 80 முதல் 100 செ.மீ., அளவுக்கு மழை அளவு பதிவாகியுள்ளது. Japan flood: 5,000 Japanese told to evacuate…

Read More ஜப்பானில் மழையால் மூழ்கிய கிராமங்கள் 5000 பேர் வெளியேற்றம்

உளவுத்துறை ஊழியர்களையே ரகசியமாக வேவு பார்க்கிறது அமெரிக்கா

Al-Qaeda tried to infiltrate US intelligence agencies: Report அமெரிக்க உளவுத்துறைக்குள் ஊடுருவ அல்-கொய்தா, பாலஸ்தீனத்தின் ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள் தொடர்ந்து முயன்று வருவதாக சிஐஏ தெரிவித்துள்ளது. இதனால் தனது ஆயிரக்கணக்கான ஊழியர்களின் பின்னணி குறித்து சிஐஏ ஆண்டுதோறும் ரகசிய விசாரணை நடத்தி வருகிறது. சிஐஏ உள்ளிட்ட அமெரிக்க உளவு அமைப்பு, ராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு, காவல்துறையில் வேலைகோரி விண்ணப்பிப்போர், வேலையில் சேர்க்கப்பட்டோர் ஆகியோரில் பலர் குறித்தும் சந்தேகம் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் இதில் பணியில் உள்ளவர்களின் பின்னணி குறித்து அடிக்கடி ரகசிய விசாரணை நடத்த வேண்டிய நிலைக்கு சிஐஏ தள்ளப்படுகிறதாம். குறிப்பாக அமெரிக்க உளவு அமைப்பில் பணியில் உள்ள 5ல் ஒருவர் மீது பெரிய அளவில் சந்தேகம் வந்துவிடுகிறதாம். இவர்களுக்கு தீவிரவாத அமைப்புகள், பிற நாட்டு உளவு அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதற்கான அறிகுறிகள் இருக்கின்றன…

Read More உளவுத்துறை ஊழியர்களையே ரகசியமாக வேவு பார்க்கிறது அமெரிக்கா

இன்டர்நெட்டும் ஒரு போதை! லேட்டஸ்ட் ஆய்வு முடிவு!

internet addiction linked depression says study சமீப காலமாக சிகரெட், மது போல இன்டர்நெட்டும் ஒரு போதை என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு நாள் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல், அதனைப் பார்க்க முடியவில்லை என்றால், பலருக்கும் பதைபதைப்பு ஏற்படுகிறது என்றும் அதனால் வாழ்க்கையே விரக்தியாகி விடுகிறது என்றும் அந்த ஆய்வில் தெரிய வருகிறது.  இண்டர்நெட் இல்லாவிட்டால் மெயில் பார்க்க முடியவில்லை, என் பேஸ்புக் நண்பர்களுடன் செய்தி பரிமாற முடியவில்லை என்று அத்தனை பேரும் பதற்றம் அடைகின்றனர். பித்துப் பிடித்தவர் போல மாறுகின்றனர். இங்கிலாந்தில் 18 முதல் 65 வயது வரை உள்ள ஆயிரம் பேரை இது குறித்து கருத்து கேட்ட போது, சிகரெட்டுக்கு எப்படி, அதனைப் பயன்படுத்துபவர்கள் அடிமையாகிறார்களோ, அதே போலத்தான் இன்டர்நெட்டுக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர்.  இன்டர்நெட் இணைப்பு இல்லை என்றால், ஒருவர்,…

Read More இன்டர்நெட்டும் ஒரு போதை! லேட்டஸ்ட் ஆய்வு முடிவு!

கணவரைக் கொன்று குக்கரில் சமைத்த சீனப் பெண்

Wife Boils Husband’s Corpse in Pressure Cooker in china சீனா, ஆன்ஹீய் மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண், தனது முதல் திருமணம் தோல்விக்குப் பிறகு வேறு ஒருவரை மறுமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த திருமணமும் அவரது வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கவில்லையாம். முதலில் நல்லவராக இருந்த அப்பெண்ணின் கணவர், நாளடைவில் அப்பெண்ணையும், அவரது மகளையும் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தத் தொடங்கியுள்ளார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அப்பெண், கோபத்தில் பொங்கியெழுந்து விட்டார். போதை மருந்து கொடுத்து கணவரை மயக்கத்திற்கு கொண்டு சென்ற மனைவி, தொடர்ந்து 3 நாட்களாக சாப்பாடு, தண்ணீர் கொடுக்காமல் அவரை பட்டினி போட்டுள்ளார். வஞ்சம் தீர்க்கும் விதமாக கணவரை அடித்தும் சித்ரவதை செய்துள்ளார். தொடர் கொடுமைகளை தாங்க முடியாத கணவர் மரணமடைந்து விட போலீசில் இருந்து தப்பிக்க தடயத்தை அழிக்க நினைத்துள்ளார் அப்பெண். அதனைத்…

Read More கணவரைக் கொன்று குக்கரில் சமைத்த சீனப் பெண்

சிரியாவில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு வேண்டுகோள்

Indian citizens in Syria to return India:  India has advised its citizens in Syria to leave the West Asian country வாஷிங்டன்: ஓராண்டுக்கும் மேலாக சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ராணுவம் அரசுக்கு எதிராக போராடுபவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் இதில் பலியாகினர். டமாஸ்கஸ் புறநகர் பகுதியில் கடந்த மாதம் சிரிய ராணுவம் நடத்திய ரசாயன குண்டு தாக்குதலில் 1300க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் பலியானதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதனையடுத்து அங்கு ஐநா பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். பிரதமர் டேவிட் கேமரூன் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, சிரியா மீது போர் தொடுக்கும் திட்டத்தில் இருந்து இங்கிலாந்து பின்வாங்கியது. எனினும், சிரியா மீது ராணுவ…

Read More சிரியாவில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு வேண்டுகோள்

நவநீதம்பிள்ளை இலங்கைக்கு கடும் எச்சரிக்கை..

 Navaneetham pillai condemns Srilankan Government and sri lanka rejects navaneetham pillai demands. இலங்கையில்  “பாதுகாப்பு அமைப்புகளால், மனிதஉரிமை ஆர்வலர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துள்ளது. எதேச்சாதிகாரப் போக்கு அதிகரித்துள்ளது மிகவும் ஆழமான கவலையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை மோசமான நிலையில் – பயண முடிவில் நவநீதம்பிள்ளை  இந்த உண்மை கண்டறியும் பயணத்தின் போது, என்னுடன் கலந்துரையாடிய மனிதஉரிமை ஆர்வலர்கள், இலங்கையில் காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் துன்புறுத்தலை எதிர்கொண்டது கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இவ்வாறு ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எச்சரித்துள்ளார்.  நவநீதம்பிள்ளை தனது பயணத்தின் முடிவில் இன்று காலை செய்தியாளர்கிளடம் பேசிய போதே இதனை தெரிவித்தார். மேலும், இதுபோன்ற கண்காணிப்பும், துன்புறுத்தலையும் வைத்துப் பார்க்கும் போது, இலங்கை மோசமான நிலையில் உள்ளது என்று தோன்றுகிறது. இது உயர்மட்டத்தில் உள்ளது. இதுபோன்று நடந்து கொள்வதற்கு, என்னைப் போன்றவர்களை அழைக்கக் கூடாது. போர் நடந்த வடக்கு, கிழக்குப் பகுதிகளில்,…

Read More நவநீதம்பிள்ளை இலங்கைக்கு கடும் எச்சரிக்கை..

இணையதளப்பழக்கத்திற்கு அடிமையான சிறுவர் சிறப்பு முகாம்கள்

Screen Addicted Kids : Japan Internet ‘Fasting Camps’ Aim To Treat ஜப்பான்: தற்போதைய காலகட்டத்தில் கம்யூட்டர் மற்றும் இணையதளத்தின் பயன்பாடு மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு விஷயமாக மாறியுள்ளது. அதே சமயம், பல்வேறு சிறார்கள் கம்யூட்டருக்கு அடிமை ஆகிப் போவது அவர்களின் இயல்பான வெளி நடவடிக்கைகளைப் பாதிக்கத் துவங்குவதாக மாறுவது கவலைக்குரிய செயலாக தோன்றுகின்றது. இந்நிலையில் ஜப்பான் நாட்டின் சமீபத்திய ஆய்வின்படி, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவயதினர் இணையதளம் உபயோகிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. நடுத்தர மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் 5,18,000 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை கூறுகின்றது.இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாக அந்நாட்டு அரசின் தகவல் அதிகாரி பத்திரிகை செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், 98,000 இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 8.1 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்களிடம் இது ஒரு…

Read More இணையதளப்பழக்கத்திற்கு அடிமையான சிறுவர் சிறப்பு முகாம்கள்

பாகிஸ்தானில் செல்போன்கள் உபயோகத்தில் கட்டுப்பாடு

Pakistan bans SMS packs to safeguard ‘moral values’ செல்போன்களில் வாய்ஸ், தகவல் மற்றும் ‘எஸ்.எம்.எஸ்.’ எனப்படும் குறுஞ்செய்திகள் அனுப்புதல் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. அவை சிறுவர், சிறுமிகள் முதல் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை கெடுப்பதாக பாகிஸ்தானில் புகார்கள் எழுப்பப்பட்டுள்ளன. இது குறித்து பாராளுமன்றம் மற்றும் சட்ட சபைகளில் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பேசியுள்ளனர். எனவே, செல்போன்களில் உள்ள எஸ்.எம்.எஸ். வாய்ஸ் மெயில் போன்ற ‘பேக்கேஜ்’ சிஸ்டத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. அதற்கான உத்தரவை செல்போன் நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் டெலிபோன் ஒழுங்கு முறை ஆணையம் பிறப்பித்துள்ளது. இந்த திட்டம் வருகிற 2–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதற்கான கடிதம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் செல்போன் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டது என அதிகாரி தெரிவித்தார். Pakistan bans SMS packs to safeguard ‘moral values’ Pakistan…

Read More பாகிஸ்தானில் செல்போன்கள் உபயோகத்தில் கட்டுப்பாடு