Navaneetham pillai condemns Srilankan Government and sri lanka rejects navaneetham pillai demands.
இலங்கையில் “பாதுகாப்பு அமைப்புகளால், மனிதஉரிமை ஆர்வலர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துள்ளது. எதேச்சாதிகாரப் போக்கு அதிகரித்துள்ளது மிகவும் ஆழமான கவலையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை மோசமான நிலையில் – பயண முடிவில் நவநீதம்பிள்ளை இந்த உண்மை கண்டறியும் பயணத்தின் போது, என்னுடன் கலந்துரையாடிய மனிதஉரிமை ஆர்வலர்கள், இலங்கையில் காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் துன்புறுத்தலை எதிர்கொண்டது கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இவ்வாறு ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எச்சரித்துள்ளார். நவநீதம்பிள்ளை தனது பயணத்தின் முடிவில் இன்று காலை செய்தியாளர்கிளடம் பேசிய போதே இதனை தெரிவித்தார். மேலும், இதுபோன்ற கண்காணிப்பும், துன்புறுத்தலையும் வைத்துப் பார்க்கும் போது, இலங்கை மோசமான நிலையில் உள்ளது என்று தோன்றுகிறது. இது உயர்மட்டத்தில் உள்ளது. இதுபோன்று நடந்து கொள்வதற்கு, என்னைப் போன்றவர்களை அழைக்கக் கூடாது. போர் நடந்த வடக்கு, கிழக்குப் பகுதிகளில், நிலைகொண்டுள்ள உள்ள படைகளை இலங்கை அதிபர் குறைக்க வேண்டும். 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற, மீறல்கள் குறித்து நம்பகமான குற்றச்சாட்டுகள் குறித்து, போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்தல், வடக்கில் ராணுவத்தை வெளியேற்றுதல், 800 புலி உறுப்பினர்களை விடுதலை செய்தல் மற்றும் போலீஸ் படையை நீதி அமைச்சகத்திடம் ஒப்படைத்தல் போன்ற கோரிக்கைகளை நவநீதம் பிள்ளை இலங்கை அரசுக்கு விடுத்துள்ளார். அவரது இந்த அனைத்து கோரிக்கைகளும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடியது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. எனவே இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. சில தனியார் அமைப்புகளின் பேச்சைக் கேட்டுத்தான் நவநீதம் பிள்ளை இப்படி கோரிக்கை விடுத்திருப்பதாகவும் இலங்கை கருதுவதாக அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.