Severed head, hands sent as warning to Kenyan police கென்யாவில் 2007ஆம் ஆண்டின் இறுதியில் பொதுத் தேர்தல் முடிந்தவுடன் நடந்த வன்முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அப்போதே நாட்டின் பாதுகாப்புப் பொறுப்பில் இருக்கும் காவல்துறை சீர்திருத்தப்பட வேண்டும் என்ற கருத்து எழுந்தது. அப்போதைய அரசுக்கு முன் இருந்த முக்கிய சவால்களில் இதுவும் ஒன்றாகத் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, கென்யாவின் அதிகாரிகள் லஞ்ச ஊழல் மிகுந்தவர்களாக விவரிக்கப்பட்டனர். எனவே, கடந்த வருடம் காவல்துறையில் மாற்றங்களைக் கொண்டுவரும் பொருட்டு ஜான்சன் கவுலுடி என்ற அதிகாரி காவல்துறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மதியம், மத்திய நைரோபியில் உள்ள தேசிய காவல் சேவை ஆணைய அலுவலகத்தின் முன்புறமுள்ள பூந்தோட்டத்தில் மஞ்சள் நிற பிளாஸ்டிக் தாளில் சுற்றப்பட்டிருந்த பெட்டி ஒன்று கிடந்தது. காவல்துறையினர் அதனைக் கைப்பற்றி பிரித்துப் பார்த்தபோது, அதனுள்…
Read More கென்யாவில் போலீஸ் கமிஷனருக்கு பார்சலில் வந்த தலைCategory: உலகம் சிறகுகள்
இந்தியாவின் சந்திரயான் -1 தகவல்களை உறுதி செய்தது நாசா!!
India’s Chandrayaan-1 helps NASA find water on moon இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான் -1 விண்கலம் அனுப்பிய நிலாப்பற்றிய தகவல்கள் மூலம் நிலாவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா உறுதி செய்துள்ளது. நிலவை ஆராய சந்திரயான்-1 என்ற செயற்கைக்கோளை இந்தியா கடந்த 2008ம் ஆண்டு அக்டோபரில் விண்ணில் ஏவியது. அது நிலவின் மேற்பரப்பு, மலை முகடுகள், மண் போன்றவற்றை படம்பிடித்து அது பூமிக்கு அனுப்பியது. சந்திரயான் அனுப்பிய புகைப்படங்கள், தகவல்களை “நாசா’ விஞ்ஞானிகளுடன் சேர்ந்து இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். அப்போது, நிலவில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களை சந்திரயான் சேகரித்து அனுப்பியிருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். சந்திரயான் -1 அனுப்பிய தடயங்களை ஆராய்ந்து வந்த நாசா, தற்போது நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதற்காக சாத்தியங்களை உறுதி செய்துள்ளது. இதற்கு முன்,…
Read More இந்தியாவின் சந்திரயான் -1 தகவல்களை உறுதி செய்தது நாசா!!கென்யாவில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து: 41 பேர் பலி
Kenya bus crash kills 41 near Narok கென்யத் தலைநகர் நைரோபி அருகே பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் உருண்ட கோர விபத்தில் 41 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. விபத்தை நேரில் கண்ட போக்குவரத்துக் காவலர் சாமுவேல் கிமாரு கூறுகையில், இந்த இடத்தைப் பார்ப்பதற்கே படு கோரமாக இருக்கிறது. திரும்பி இடமெல்லாம் பிணங்களாகக் கிடக்கின்றன.எதனால் விபத்து நடந்தது என்பதை இப்போதே சொல்வது கடினம் என்றாலும், அளவுக்கு அதிகமான வேகம், அத்துடன் அதிக ஆட்களை ஏற்றிச் சென்றது விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தார். Kenya bus crash kills 41 near Narok At least 41 people have been killed in a bus crash near the Kenyan town of Narok, west of the capital Nairobi,…
Read More கென்யாவில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து: 41 பேர் பலிபோதை பொருளால் எனது வாழ்க்கை பறிபோகிறது: மைக் டைசன்
உலகின் பிரபல முன்னாள் நட்சத்திர ஹெவிவெய்ட் குத்துச்சண்டை வீரரான மைக் டைசன், போதை பொருள் மற்றும் பொறுமை இன்மை காரணத்தால் என் வாழ்க்கை சீரழிந்து கொண்டு இருக்கின்றது என வேதனைப்பட்டார். பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி 90களில் விமர்சனத்துக்குள்ளான அவர், 1992ம் ஆண்டு கற்பழிப்பு வழக்கில் சிக்கிய டைசனுக்கு 6 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. மூன்று வருட சிறைத்தண்டனைக்கு பின்பு அவர் விடுதலையானார். அதனையடுத்து மீண்டும் குத்துச்சண்டை போட்டிகளில் மைக் டைசன் கலந்துகொண்டார். 1996ம் ஆண்டு நடைபெற்ற இரு போட்டிகளில் வெற்றிபெற்று உலக குத்துச்சண்டை கவுன்சில் மற்றும் உலக குத்துச்சண்டை அசோசியேசன் பட்டங்களையும் வென்றார். அடுத்து உலக குத்துச்சண்டை அசோசியேஷன் பட்டத்திற்காக 1997ம் ஆண்டு நடந்த போட்டியில் மைக் டைசன் இவாண்டர் ஹோலிபீல்டுடன் மோதினார். இதில், இவாண்டர் ஹோலிபீல்டின் காதை கடித்து மைக் டைசன் துப்பினார். இதனால் போட்டிகளிலிருந்து மைக்…
Read More போதை பொருளால் எனது வாழ்க்கை பறிபோகிறது: மைக் டைசன்பராகுவே நாட்டில் சிலுவையில் அறைந்து கொண்டு போராட்டம்
Sacked Paraguay bus drivers stage crucifixion protest பணி நீக்கம் செய்யப்பட்ட தங்களுக்கு மீண்டும் பணி வழக்க வேண்டும் எனக் கூறி, கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தங்களைத் தாங்களே சிலுவையில் அறைந்து போராடி வருகின்றனர் பராகுவேயைச் சேர்ந்த 8 ஊழியர்கள். பராகுவே நாட்டின் தலைநகர் அசன்சியானில் செயல்பட்டு வரும் வேன்கார்டியா என்ற பேருந்து நிறுவனத்தின் ஊழியர்கள் கூடுதல் நேர பணிக்கான ஊதியம், மருத்துவப்படி,ஓய்வூதியம் வழங்க வேண்டி அதன் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். அவர்களில் 8 ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது பேருந்து நிறுவனம். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த ஊழியர்கள் கடந்த 20 நாட்களாக தங்களை தாங்களே சிலுவையில் அறைந்துக்கொண்டு கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் ஊழியரின் மனைவி ஒருவரும் பங்கெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. போராட்டத்தின்…
Read More பராகுவே நாட்டில் சிலுவையில் அறைந்து கொண்டு போராட்டம்மைக்கிரோசாப்ட் சிஈஓ செய்த தவறுகள்!!!
Steve Ballmer’s Biggest Mistakes As CEO Of Microsoft உலகின் முன்னனி நிறுவனங்களில் ஓன்றாக மைக்கிரோசாப்ட் விளங்கி வருகிறது. இப்பொழுது மைக்கிரோசாப்டின் சிஈஓவாக இருப்பவர் ஸ்டீவ் பால்மர் என்பது நமக்கு தெரிந்ததே. இவர் அடுத்த சில மாதங்களுக்குள் தான் ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்புக்கு பின்னர் மைக்கிரோசாப்டின் அடுத்த சிஈஓ யார் என்ற கேள்வி டெக்னாலஜி உலகில் பரவ தொடங்கியுள்ளது. தொழில்நுட்ப உலகில் உள்ள வல்லுநர்கள் பல பெயர்களை இதற்க்கு பரிந்துரை செய்கின்றனர். ஸ்டீவ் பால்மரின் ஓய்வுக்கு பின்னர் இந்த கேள்விக்கான விடை கிடைக்கும். ஸ்டீவ் பால்மர் சிஈஓவாக இருந்த தனது பதவி காலத்தில் மைக்கிரோசாப்ட் நிறுவனத்தின் நலனுக்காக பல நல்ல விஷியங்களை செய்துள்ளார். நிறுவனத்தின் லாபங்களை அதிகரித்துள்ளார். அதே சமயம் அவர் தனது பதவி காலத்தில் நிறைய தவறுகளையும் செய்துள்ளார்…
Read More மைக்கிரோசாப்ட் சிஈஓ செய்த தவறுகள்!!!எங்களை தாக்க நினைத்தால் சமாதியாக்கப்படுவார்கள்: சிரியா
29-8-13/12.30 28-8-13 சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஆனால் பதவி விலக மறுக்கும் அவர் போராட்டக்காரர்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தி வருகிறார். அதில், சுமார் 1 லட்சத்துக்கும் மேலானோர் கொல்லப்பட்டுள்ளனர். 7 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த நிலையில் தலைநகர் டமாஸ்கஸ் புறநகரமான கவுட்டா மற்றும் மொடமியே பகுதிகளில் சிரியா ராணுவம் கடந்த 21-ம் தேதி ரசாயன குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. அதில் இருந்து வெளியான நச்சு புகையில் சிக்கி குழந்தைகள், பெண்கள், முதியர்கள் உட்பட 1300-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இக்கொடூர சம்பவத்துக்கு ஐ.நா. கடும் கண்டனமும், வருத்தமும் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து காலதாமதமின்றி உடனடியாக…
Read More எங்களை தாக்க நினைத்தால் சமாதியாக்கப்படுவார்கள்: சிரியாநியூஜெர்சியில் சீக்கியர் சுட்டுப் படுகொலை
Sikh fatally shot in New Jersey இந்தியாவை சேர்ந்தவர் சுரேந்தர்சிங் (வயது 40). சீக்கியரான இவர் அமெரிக்காவில் நியூஜெர்சியில் ஒரு கியாஸ் நிறுவனத்தில் 14 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.வேலைக்கு சென்று வந்த அவரை, 2 கொள்ளையர்கள் வழிமறித்து அவரிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றனர். அப்போது அவர் பணத்தை தர மறுத்ததால் அவர்கள் துப்பாக்கியால் சுரேந்தர்சிங்கை சரமாரியாக சுட்டு வீழ்த்தினர்.இதில் மார்பு மற்றும் கையில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கொலையாளிகளை பிடித்து கொடுப்பவர்களுக்கு 8 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (ரூ.5.44 லட்சம்) பரிசாக வழங்கப்படும் என்று உள்ளூர் போலீசார் அறிவித்துள்ளனர். மேலும், கொலையாளியின் உருவப்படத்தை வெளியிட்டு போலீசார், அவர்களை தேடி வருகிறார்கள்.இதற்கிடையே சீக்கியர்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க அமெரிக்க சட்ட அமலாக்க அமைப்புகள் தவறி விட்டதாக…
Read More நியூஜெர்சியில் சீக்கியர் சுட்டுப் படுகொலைசிறுவனை கடத்தி, கண்களை தோண்டி எடுத்த கொடூரம்
Chinese organ trafficker steals boy’s two eyes சீனாவில் சிறுவனை கடத்தி கண்ணை தோண்டி எடுத்து விழி வெண்படலத்தை மட்டும் வெட்டி எடுத்துச் சென்ற மனித உடல் உறுப்புகளைக் கடத்தும் கும்பலின் கோரச்செயல் அதிரவைத்திருக்கிறது. சீனாவின் சான்ஜி மாகாணத்தில் லின்பென் என்ற பகுதியில் வசித்து வந்த பின்பின் என்ற சிறுவன் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென அவனைக் காணவில்லை. அவன் காணாமல் போய் சில மணி நேரங்கள் கழித்து அவன் முகம் முழுவதும் ரத்தம் தோய்ந்த நிலையில் குற்றுயிராய் அலறித் துடித்துக் கொண்டிருந்ததை பெற்றோர் பார்த்திருக்கின்றனர். இதைக் கண்டு அலறிய பெற்றோர் அவனைத் தூக்கிப் பார்த்த போது திடுக்கிட்டுப் போயினர். அவனது இரண்டு கண்களும் தோண்டி எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிறுவனை மருத்துவமனைக்கு அனுப்பிய கையோடு அந்த இடத்தை சுற்றிப் பார்த்திருக்கின்றனர். அந்த பெற்றொருக்கு…
Read More சிறுவனை கடத்தி, கண்களை தோண்டி எடுத்த கொடூரம்‘சர்வதேச குழந்தைகளின் அமைதி பரிசு’ பெறும் மலாலா
Malala Yousafzai awarded 2013 Children’s Peace Prize பெண் கல்விக்காக போராடி பாகிஸ்தான் தலிபான்களின் துப்பாக்கி குண்டுகளால் சிதைக்கப்பட்ட மலாலாவுக்கு சர்வதேச குழந்தைகளின் அமைதிக்கான உயரிய பரிசு வழங்கப்படுகிறது. நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இயங்கி வரும் ‘கிட்ஸ் ரைட்ஸ்’ என்ற குழந்தைகளின் உரிமைகளுக்கான அமைப்பு இந்த விருதினை வழங்கி கவுரவிக்கிறது. பெண் கல்வியை ஊக்குவித்த பாகிஸ்தான் மாணவி மலாலா(15) என்பவரை தலிபான்கள் கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். தலை உள்பட பல இடங்களில் குண்டுபாய்ந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவருக்கு இலவச உயர்சிகிச்சை அளிக்க இங்கிலாந்து அரசு முன்வந்தது. இதனையடுத்து, தனி விமானம் மூலம் கொண்டுசெல்லபட்டு லண்டனில் உள்ள ராணி எலிசபத் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்று வந்த மலாலாவுக்கு இதுவரை 3 ஆபரேஷன்கள்…
Read More ‘சர்வதேச குழந்தைகளின் அமைதி பரிசு’ பெறும் மலாலா