லஞ்சமாக பாலியல் சேவைகளை அளிப்பது குற்றம் என ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம்

தகாத உறவுக்காக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கூடாது: ஐகோர்ட் ஜெய்ப்பூர்:ராஜஸ்தானை சேர்ந்த ஒரு பெண் காவல்துறை அதிகாரிக்கும், ஒரு ஆண் காவல்துறை அதிகாரிக்கும் இடையே, தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனு நீதிபதி சர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 'ராஜஸ்தான் அரசு பணியாளர் நடத்தை சட்டத்தை மீறியதால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது' என்று அரசு வழக்கறிஞர் கூறினார். நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தகாத உறவுக்காக அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்று பிறப்பித்தார். ஆனால் தகாத உறவால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்வு காணலாம் என்று தெரிவித்தார்.

இந்தியாவில் லஞ்சம் ரொக்க பணமா மட்டுமின்றி வீடு ,கார் ,வெளிநாடு என்று வேறு பல வழிகளிலும் கொடுக்கப்படுகிறது .அதேபோல் சில அதிகாரிகள் , பெண்களை பாலியல் தேவைக்கு அழைப்பதையும் ஒரு லஞ்ச முறையாக கடைப்பிடித்து வருகிறார்கள் .

தற்போது இது ஒருவகையான லஞ்சம் என்று ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. 30 வருடங்களுக்கு முன் கொண்டு வரப்பட்ட ஊழல் தடுப்பு சட்டம் 10க்கும் அதிகமான முறை திருத்தங்களை சந்தித்துள்ளது. இந்த நிலையில், தற்போது இதில் புதிய சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி லஞ்சமாக பாலியல் சேவை அளிப்பதும், கேட்பதும் குற்றம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு 7 வருடம் வரை சிறை தண்டனைஅளிக்கப்படும் என்றும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் லஞ்சமாக வீடு வழங்குவது, உணவு வழங்குவது, வெளிநாட்டு மதுபானம் வழங்குவது, வெளிநாடு அழைத்து செல்வது ஆகியவையும் 7ஆண்டு சிறைக்குள் வரும் என்று கூறப்பட்டுள்ளது.

 

Related posts