கருமுட்டைகளைச் சேமிக்கும் தைவான் பெண்கள்

Career first, children later: Women put their eggs on ice எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தங்கள் திருமணத்தைத் தள்ளிப்போடும் தைவான் பெண்கள், எதிர்காலத்தில் குழந்தைப்பேறைக் கணக்கில் கொண்டு தங்கள் கருமுட்டைகளைச் சேமிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார்களாம். நமது பாட்டிக்காலத்தில் எல்லாம் 12, 13 வயதிலேயே திருமணம் செய்து விடுவார்கள் எனக் கதைச் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால், இன்றோ பெண்களின் திருமண வயது கூடிக் கொண்டே வருகிறது. அதற்குக் காரணம், கல்வியறிவு கொண்ட பெண்கள் சிலகாலமாவது உழைத்து, தன் சொந்தக் காலில் நிற்க நினைப்பது தான். திருமணத்திற்குப் பிறகு இதன் சாத்தியம் குறைவு என எண்ணுகிறார்கள். உலகளவில் பரவிக் காணப்படும் இந்தக் கருத்துக்களால், குழந்தைப்பேறு பாதிக்கப்பட்டு விடக்கூடாது எனக் கருதும் தைவான் பெண்கள் முன்னெச்சரிக்கையாக தங்கள் கருமுட்டைகளை சேமிக்கத் தொடங்கி விட்டார்களாம். ஆசியாவில் உள்ள 14 நாடுகளில் பெண்கள்…

Read More கருமுட்டைகளைச் சேமிக்கும் தைவான் பெண்கள்

வீடியோ கேம் விளையாடிவிட்டு பாட்டியை சுட்டுக் கொன்ற சிறுவன்

Boy Kills Granny After Playing video Game 8 Year Old Boy Kills Granny After Playing video Game அமெரிக்காவில் 8 வயது சிறுவன் ஒருவன் டிவி பார்த்துக் கொண்டிருந்த தனது பாட்டியை சுட்டுக் கொலை செய்துள்ளான். அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் மேரி ஸ்மாதர்ஸ்(87). அவர் தனது 8 வயது பேரனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் அந்த சிறுவன் கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ IV என்ற வீடியோ கேமை விளையாடி உள்ளான். அதன் பிறகு அவன் டிவி பார்த்துக் கொண்டிருந்த தன்னுடைய பாட்டிக்கு பின்னால் வந்து நின்றுள்ளான். வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து அவன் தனது பாட்டியின் தலையில் சுட்டான். இதில் மேரி தலையில் குண்டடிபட்டு பரிதாபமாக உயிர் இழந்தார். விசாரணையில் சிறுவன் துப்பாக்கியில் இருந்து குண்டு ஏதேச்சையாக வெளிவந்ததாக முதலில்…

Read More வீடியோ கேம் விளையாடிவிட்டு பாட்டியை சுட்டுக் கொன்ற சிறுவன்

மைக்ரோசாப்ட்டின் அடுத்த சி.இ.ஓ இந்தியரா?.

India born techies in race to replace Microsoft CEO Steve Ballmer  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பால்மெர் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் அடுத்த சிஇஓ பொறுப்புக்கு இரு இந்தியர்களின் பெயர்கள் அடிபடுகிறது. உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் சிஇஓவாக இருந்த ஸ்டீவ் பால்மெர் ஓய்வு பெறுகிறார் என்று வெள்ளிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டது. பால்மெர், மைக்ரோசாப்ட்டை பில்கேட்ஸுடன் இணைந்து உருவாக்கிய இணை நிறுவனர்களில் ஒருவர் பால்மெர். தற்போது மைக்ரோசாப்ட்டின் அடுத்த சிஇஓ பதவிக்கு இரு இந்தியர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வருபவர் சத்யா நடெல்லா. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தவரும் தற்போதை கூகுள் நிறுவனத்தில் பணிபுரிபவருமான குண்டோட்ரா. இந்த இரு இந்தியர் பெயர்தான் மைக்ரோசாப்ட்டின் அடுத்த சிஇஓ பதவிக்கு அடிபடுகிறது. India born techies in race to…

Read More மைக்ரோசாப்ட்டின் அடுத்த சி.இ.ஓ இந்தியரா?.

உலக அழகிப் போட்டியை ரத்து செய்ய வலியுறுத்தல்!

INDONESIAN CLERICS CALL MISS WORLD BAN பெண்களை கவர்ச்சிப் பொருளாக வெளிப்படுத்தும் உலக அழகிப் போட்டியை இந்தோனேசியாவில் நடத்தக் கூடாது என்று இஸ்லாமிய மதக்குருக்கள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம். வரும் செப்டம்பர் மாதம், இங்குள்ள பாலித்தீவில், உலக அழகி போட்டி நடக்க உள்ளது. 137 பேர் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர். இந்த மாதம் தொடக்கத்தில் இந்தோனேசியாவின் மிகவும் செல்வாக்கு உள்ள உலமா சபையின் இஸ்லாமிய மதக்குருக்களின் உயர் மட்டம் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில், பெண்கள் தங்களின் தோலை காட்டி நடந்து வரும் இப்போட்டியானது இஸ்லாமிய மதக்கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால், இப்போட்டியை இந்தோனேசியாவில் நடத்தக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது. English Summary:  INDONESIAN CLERICS CALL MISS WORLD BAN One of Indonesia’s most influential Islamic groups is urging the…

Read More உலக அழகிப் போட்டியை ரத்து செய்ய வலியுறுத்தல்!

ஓட்டுநரே இல்லா கார் தயாரிப்பில் இறங்கும் கூகுள்

Google to build a fleet of ‘robo-taxis’ ஓட்டுநரே இல்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்று குறிப்பிட்ட இடத்தில் விடும் ரோபோ-டாக்ஸியை தொழில்நுட்பத் துறை ஜாம்பவானான கூகுள் நிறுவனம் உருவாக்க திட்டமிட்டுள்ளது.  போக்குவரத்துத் துறையையே இந்த வாகனங்கள் அடியோடு மாற்றிவிடும் என்று கூகுள் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, கூகுளின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னணி கார்த் தயாரிப்பாளர்கள் இதுபோன்ற வாகனங்களைத் தயாரிப்பார்கள் என்று கூகுள் நிறுவனம் எதிர்பார்த்தது. 2010ஆம் ஆண்டு தானியங்கித் தொழில்நுட்பத்தை உருவாக்கிய அந்நிறுவனம், டொயோட்டா பிரையஸ் மற்றும் லெக்ஸஸ் கார்களில் பொருத்தி சோதனை மேற்கொண்டது.  இருந்தாலும், கார் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்பங்களை கூகுளுக்கு தர விரும்பாத வாகன நிறுவனங்கள், கூகுளுடன் தொழில் ஒப்பந்தம் செய்ய முன்வராரததால், தாமே கார் உற்பத்தியிலும் இறங்க கூகுள் முடிவு செய்துள்ளது.இதற்காக, சமீபத்தில் உலகின் முன்னணி கார் உதிரிபாக உற்பத்தி நிறுவனமான கான்டினென்டலுடன்…

Read More ஓட்டுநரே இல்லா கார் தயாரிப்பில் இறங்கும் கூகுள்

விளையாட்டுச் சண்டையில் 6 வயது தோழியை சுட்டுக் கொன்ற 7வயது சிறுமி

7 year old South African girl shoots playmate dead தென் ஆப்பிரிக்காவில், தாத்தா வீட்டிற்கு விடுமுறைக்குச் சென்ற 7 வயது சிறுமி ஒருத்தி கோபத்தில் தனது சகதோழியைச் சுட்டுக் கொன்றுள்ளாள். இதனால் அச்சிறுமி மீதும், அவளது தாத்தா மீதும் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர் போலீசார். சுமார் 5 கோடி மக்கள் தொகையைக் கொண்ட தென் ஆப்பிக்காவில் கிட்டத்தட்ட 50 லட்சத்து 95 ஆயிரம் பேர் துப்பாக்கி வைத்துள்ளனர். ஆனால், முறைப்படி உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அவர்களில் 30 லட்சத்து 73 ஆயிரம் பேர் மட்டுமே. தென் ஆப்பிரிக்கா, பிரயோரியா பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி, லிம்போபோ மாகாணத்தின் பேலா பேலா என்ற கிராமத்தில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு சென்றிருந்தாள். ஒருநாள் அச்சிறுமி அங்குள்ள பண்ணையில் தனது 6 வயது…

Read More விளையாட்டுச் சண்டையில் 6 வயது தோழியை சுட்டுக் கொன்ற 7வயது சிறுமி

20 வயது பெண்ணை விலைக்கு வாங்கி மணந்த பாகிஸ்தான் தாத்தா கைது

Pakistani Man buys girl to give birth பாகிஸ்தானில் ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகளுக்குத் தந்தையான 55 வயது ஆண், ஆண் குழந்தை வேண்டி 20 வயது இளம் பெண்ணை விலைக்கு வாங்கி, மணந்த குற்றத்திற்காக கைது செய்யப் பட்டுள்ளார். பாகிஸ்தான், ஷாகிலால் மாவட்டத்தில் உள்ள சீசா வாடன் என்ற பகுதியைச் சேர்ந்த முதியவர் முகமது அலி. ஐம்பத்தைந்து வயதான இவருக்கு ஏற்கனவே மணமாகி மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். மூன்றும் பெண் குழந்தைகளாக அமைந்ததில் இவருக்கு ஏகப்பட்ட மனவருத்தமாம். அதனால், வேறு ஒரு இளம் பெண்ணை மணந்து அவர் மூலம் ஆண் குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவிற்கு வந்துள்ளார் முகமது. அதனைத் தொடர்ந்து, லாகூர் அருகேயுள்ள மமூ கஞ்சன் என்ற கிராமத்தை சேர்ந்த பேகம் பீபி என்ற 20 வயது பெண்ணை ரூ.1 லட்சத்து…

Read More 20 வயது பெண்ணை விலைக்கு வாங்கி மணந்த பாகிஸ்தான் தாத்தா கைது

அமெரிக்காவில் 10 நாட்களாக பற்றி எரியும் காட்டூத்தீ

Fire crews report progress against massive Yosemite fire   அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான்பிரான்சிஸ்கோ அருகே உள்ள ஸ்தனிஸ்லாஸ் தேசிய பூங்காவில் கடந்த 17–ந்தேதி திடீரென தீ பிடித்தது. பின்னர் இது காட்டுத்தீயாக மாறி பூங்கா முழுவதும் பரவியது. அங்கு தொடர்ந்து வீசி வரும் அனல்காற்றினால் தீ மளமளவென பரவி வருகிறது. இந்த தீயை அணைக்க நாடெங்கிலும் இருந்து சுமார் 2 ஆயிரத்து 700 தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். எனினும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் குடியிருப்புகளை காலி செய்து வருகிறார்கள். இந்த தீயினால் சுமார் 1¼ லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த காடு முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகளும் நாசமாகி உள்ளன. தொடர்ந்து எரியும் காட்டுத்தீயால் சான்பிரான்சிஸ்கோ நகரில்…

Read More அமெரிக்காவில் 10 நாட்களாக பற்றி எரியும் காட்டூத்தீ

ஜப்பானில் காபி கோப்பையால் 70வயது கணவனை அடித்து கொன்ற மனைவி

wife kills cheating husband with coffee cup in japan 70 வயதான தனது கணவர் இன்னொரு பெண்ணுடன், அதுவும் தான் வெறுத்து ஒதுக்கிய பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் கோபமடைந்த அவரது 61 வயது மனைவி தனது கணவரை காபிக் கோப்பையால் அடித்தேக் கொன்று விட்டார். ஜப்பானில் தான் இந்த பயங்கரம் நடந்துள்ளது. டோக்கியோவின் தென் மேற்கில் இந்தத் தம்பதியினர் வசித்து வந்தனர். அந்த தாத்தாவுக்கு வயது 70 ஆகிறது. பெயர் யசுவோ ஹிரோஷே. இவரது மனைவி பெயர் எமிகோ ஹிரோஷே. அவருக்கு 61 வயதாகிறது. இந்த நிலையில் தனக்குப் பிடிக்காத ஒரு பெண்ணுடன் கணவருக்குத் தொடர்பு இருப்பது எமிகோவுக்குத் தெரிய வந்தது. இதனால் அவர் கடும் கோபமடைந்தார். வீட்டில் இருந்த காபிக் கோப்பையை எடுத்து கணவரை சரமாரியாக அடித்தார். பத்துக்கும் மேற்பட்ட முறை தலையில்…

Read More ஜப்பானில் காபி கோப்பையால் 70வயது கணவனை அடித்து கொன்ற மனைவி

ஆஸ்திரேலியா ஆற்றில் குளித்தவரை முதலை கடித்து கொன்றது

Crocodile suspected of snatching man in Australia  ஆஸ்திரேலியாவில் தென் கிழக்கில் உள்ள யூனியன் பிரதேசம் டார்வின். சுற்றுலா தலமான இங்கு ‘மேரி ரிவர்’ என்ற ஆறு ஓடுகிறது. சம்பவத்தன்று டார்வின் நகரை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவர் தனது நண்பரின் பிறந்த நாளை குதுகலமாக கொண்டாடினார்.பின்னர், நண்பர்கள் இருவரும் அந்த ஆற்றில் நீந்தி குளித்தனர். அப்போது, ஒரு கொடூர 16 அடி நீள முதலை 27 வயது வாலிபரை தண்ணீருக்குள் இழுத்து சென்று கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும், இந்த ஆற்றில் அதிக முதலைகள் இருப்பதால் யாரும் குளிக்கவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். Crocodile suspected of snatching man in Australia Police say they have found…

Read More ஆஸ்திரேலியா ஆற்றில் குளித்தவரை முதலை கடித்து கொன்றது