Indian man shot dead in the US கலிபோர்னியாவில் கொலை செய்யப்பட்ட இந்தியர் மன்பிரீத் குமான் சிங் வழக்கு குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ. 253,429.99 பரிசு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மஜ்கி கிஷேவாலி கிராமத்தைச் சேர்ந்தவர் மன்ப்ரீத் குமான் சிங்(27). அவர் கலிபோர்னியா சவுத் லேக் தஹோவில் உள்ள கேஸ் ஸ்டேஷனில் கிளார்க்காக வேலை பார்த்து வந்தார். அவர் கடந்த 6ம் தேதி மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளி யை தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. கேஸ் ஸ்டேஷனில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த குற்றவாளியின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். ஆனால் குற்றவாளி தனது முகத்தை துணியால் மறைத்துள்ளார். இந்நிலையில் குற்றவாளி குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ.253,429.99…
Read More அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டுக் கொலைCategory: உலகம் சிறகுகள்
ஷூவில் மறைத்து வைத்து யுரேனியம் கடத்தியவர் கைது
Uranium shoe man arrested in US அமெரிக்காவின் பிரபல இணையதளம் ஒன்றில் யுரேனியம் தொடர்பாக விளம்பரம் ஒன்று வெளியானது. அதில் உலகம் முழுவதும் ‘எல்லோ கேக்’ என்று அழைக்கப்படும் ‘யுரேனியத்தை யாரேனும் விற்க தயாராக இருக்கிறீர்களா. எவ்வளவு விலை கொடுத்தும் அதை வாங்க தயார் என்று விளம்பரத்தை வெளியிட்டவர் தெரிவித்திருந்தார். இந்த விளம்பரத்தை கண்ட பேட்ரிக் கேம்பல் என்பவர், தனக்கு தங்கம், வெள்ளி, யுரேனியம் போன்றவற்றை விற்பவர்களுடன் தொடர்பு இருப்பதாகவும், உலகின் எந்த மூலைக்கும் தன்னால் யுரேனியத்தை கொண்டு சென்று விற்க முடியும் என்றும் விளம்பர நபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். அதற்கு, Ôஈரானுக்கு கொண்டு செல்ல முடியுமா’ என விளம்பரம் வெளியிட்டவர் கேட்டுள்ளார். ‘ஈரானில் உள்ள பந்தர் அபாஸ் துறைமுகத்துக்கு யுரேனியத்தை 1000 கிலோ வரை கடத்தி சென்று சப்ளை செய்ய முடியும்’…
Read More ஷூவில் மறைத்து வைத்து யுரேனியம் கடத்தியவர் கைதுஆபிசிற்கு லீவு போட தன்னை தானே கட்டிப்போட்டு கொண்ட பெண்
Japan woman ties herself up to skip work ஜப்பானில் அலுவலகத்திற்கு செல்ல விருப்பமில்லாத ஒரு பெண் தன்னை தானே கட்டிப்போட்டு கொண்டு நாடகமாடிய சம்பவம் நடந்துள்ளது. ஜப்பானின் டோக்கியோவில் இளம் பெண் ஒருவர் தன்னைத்தானே கட்டிப் போட்டுக் கொண்டு வீட்டில் அபாயகரமான நிலையில் மீட்கப் பட்டார். கால்களும், கைகளும் கயிற்றில் கட்டப்பட்டு அப்பெண் மயங்கிய நிலையில் இருந்ததை அவர் வசித்த அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் கண்டு அதிர்ச்சியடைந்தார். பெண்ணை கட்டிப்போட்டு விட்டு வீட்டை திருடர்கள் கொள்ளையடித்திருக்ககூடுமென எண்ணிய அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டை முழுவதுமாக சோதனையிட்டனர். ஆனால் அவ்வாறு எதுவும் தெரியவில்லை. அந்த பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் சுய நினைவு திரும்பிய அந்தப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அந்தப் பெண், அன்றைய தினம் தனக்கு வேலைக்குச் செல்ல…
Read More ஆபிசிற்கு லீவு போட தன்னை தானே கட்டிப்போட்டு கொண்ட பெண்மியான்மரில் முஸ்லிம் வீடுகளுக்குத் தீ வைத்த புத்த மதத்தினர்
Buddhists in Myanmar Torch Muslim Homes and Shops புத்த மதத்தினருக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர் கலவரங்களால் மியான்மர் நாடு அமைதி இழந்து நிற்கிறது. இனக்கலவரங்கள் சிறிது தணிந்திருந்த வேளையில், தற்போது நேற்று புத்த மதப் பெண் ஒருவர், முஸ்லிம் ஒருவனால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் என்ற வதந்தி பரவியதை அடுத்து மீண்டும் கலவரம் வெடித்துள்ளது.கண்ட்பாலு என்ற இடத்திற்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. செய்தியை கேள்விப்பட்ட கிராம மக்கள் அங்கிருந்த காவல் நிலையத்தை அணுகி குற்றவாளியைத் தங்களிடம் விடுமாறு கேட்டுள்ளனர். அங்கிருந்த காவலர்கள் மறுக்கவே, ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் பனிரெண்டுக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களின் வீடுகளையும், கடைகளையும் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர். இந்தத் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று குறிப்பிட்ட காவல்துறை அதிகாரி…
Read More மியான்மரில் முஸ்லிம் வீடுகளுக்குத் தீ வைத்த புத்த மதத்தினர்ஈராக்கில் தற்கொலைப் படை தாக்குதல் 28 பேர் பலி
Iraq suicide bomber kills at least 28 people ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் நேற்று முன்தினம் மாலை நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். பாக்தாத்தின் வடகிழக்குப் பகுதியான அல் – கஹிராவில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்த பூங்காவில் வெடிகுண்டுகளை அணிந்த நபர் ஒருவர் தற்கொடைப் படை தாக்குதலை நடத்தியிருக்கிறான். இத்தாக்குதலில் பூங்காவில் இருந்த ஏராளமான குழந்தைகள், பெண்கள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர். மேலும் 36 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Iraq suicide bomber kills at least 28 people At least 28 people were killed and 36 others wounded in a suicide bombing in Iraq on Friday evening. Police officials in Baghdad said a man wearing an…
Read More ஈராக்கில் தற்கொலைப் படை தாக்குதல் 28 பேர் பலிபொலிவியா சிறை கலவரம்.. குழந்தை உட்பட 30 பேர் பலி
Violence in Bolivia jail takes 30 lives பொலிவியா நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள சிறையில் இரு பிரிவினருக்கு இடையே நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர மோதலில் ஒரு குழந்தை உள்பட 30 பேர் பலியாகினர். பொலிவியாவின் சான்டா குரூஸில் இருக்கிற பால்மசோலா சிறைச் சாலையில் நேற்று திடீரென வன்முறை மூண்டது. இந்த வன்முறையின் போது சிறைக்குள் இருந்த ப்ரோபோன் வாயு டேங்குகளை கைதிகள் சிலர் தீயிட்டனர். மேலும் பலரை எரித்தும் கொன்றுள்ளனர். இந்த மோதலில் 18 மாத கைக்குழந்தை உட்பட 30 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். சிறைக் கைதிகளுக்கு யார் தலைவராக இருப்பது என்ற மோதலிலேயே இந்த கலவரம் மூண்டதாக தெரிகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பொலிவியா அரசு 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தங்கள் பெற்றோருடன் சிறையில் இருக்க…
Read More பொலிவியா சிறை கலவரம்.. குழந்தை உட்பட 30 பேர் பலிநைஜீரியாவில் 44 பேர் குரல் வளையை அறுத்து கொடூர கொலை
Islamist extremists in Nigeria slit 44 villagers’ throats in dawn attack நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 41 பேரின் குரல் வளையை அறுத்து பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம், போர்னோ மாகாணத்தில் உள்ள டும்பா கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை நிகழ்ந்தது. டும்பா கிராமம் மலைப் பகுதியில் உள்ளது. அங்குள்ள தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததால் இச்சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமைதான் வெளியுலகுக்கு தெரிய வந்தது. அப்பகுதியில் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான போகோ ஹராம் அமைப்பினர் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். எனவே போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் இக்கொலையை நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கிராமவாசிகளை துப்பாக்கியால் சுட்டால், பாதுகாப்புப் படையினருக்கு தெரிந்து விடும் என நினைத்து பயங்கரவாதிகள் இந்த முறையைக் கையாண்டிருக்கலாம் என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிலரது கண்களை…
Read More நைஜீரியாவில் 44 பேர் குரல் வளையை அறுத்து கொடூர கொலைஅமெரிக்காவில் இறுதி சடங்கு முடிந்த பிறகு உயிரோடு திரும்பிய பெண்
US woman turns up alive after her own funeral அமெரிக்காவில் இறந்ததாக உறுதி செய்யப்பட்டு இறுதி சடங்கு முடிந்த பின்னர் ஒரு பெண் உயிரோடு திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிலடெல்பியாவை சேர்ந்த 50 வயது பெண்ணான ஷரோலின் ஜாக்சன் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் இறுதி சடங்குகளை முடித்துள்ளனர்.கடந்த மாதம் 20 ஆம் தேதி, தெருவில் கிடந்த ஒரு சடலத்தை ஷரோலின் ஜாக்சன் என அவரது மகன் மற்றும் ஒரு சமூக சேவகர் அடையாளம் காட்டி சடலத்தை தங்களது வீட்டிற்கு கொண்டு சென்று இம்மாதம் 3 ஆம் தேதி அனைத்து இறுதி சடங்குகளையும் முடித்து புதைத்துள்ளனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதத்தில் ஷரோலின் ஜாக்சன் ஒரு மருத்துவமனையில் இருந்தது தெரியவந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அவர் அந்த மருத்துவமனைக்கு வந்துள்ளதாக தெரிந்த பிறகு, யாருக்கு இறுதி…
Read More அமெரிக்காவில் இறுதி சடங்கு முடிந்த பிறகு உயிரோடு திரும்பிய பெண்திடீரென ஓய்வு பெறுகிறார் மைக்ரோசாப்டின் CEO
microsoft ceo steve ballmer retire soon அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஸ்டீவ் பால்மர் அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஸ்டீவ் பால்மர் பதவி வகித்து வருகிறார். இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்சின் நீண்டநாள் நண்பரும், நம்பிக்கைக்குரியவரும் ஆவார். இந்நிலையில் ஸ்டீவ் பால்மர் அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு சிஇஓ தேர்வு செய்யப்படும்வரை ஸ்டீவ் பால்மர் பதவியில் நீடித்திருப்பார். புதிய சிஇஒ தலைமையின் கீழ் புதிய உத்திகளுடன் சந்தையில் தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் மைக்ரோசாப்ட் உள்ளது குறிப்பிடத்தக்கது. microsoft ceo steve ballmer retire soon In a surprise move, Microsoft on Friday announced that CEO Steve…
Read More திடீரென ஓய்வு பெறுகிறார் மைக்ரோசாப்டின் CEOமசூதி அருகே குண்டு வெடிப்பு லெபனானில் 42 பேர் பலி
Bombs kill 42 outside mosques in Lebanon’s Tripoli திரிபோலி:லெபனானில் மசூதி அருகே நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 42 பேர் பலியானார்கள். லெபனானில் ஷியா, சன்னி முஸ்லிம் பிரிவினருக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. ஷியா முஸ்லிம் பிரிவினர் ஹெஸ்போலாக் என்ற அமைப்புடன் சேர்ந்து சன்னி பிரிவினருக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இருதரப்பினரிடையே இதுவரை நடந்த தாக்குதல் சம்பவத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் லெபனான் திரிபோலி நகரத்தில் உள்ள தாஹ்வா மசூதியில் ஏராளமான சன்னி பிரிவை சேர்ந்த முஸ்லிம்கள் தொழுகை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது மசூதி அருகே திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 14 பேர் பலியானார்கள். இந்த பரபரபரப்பு அடங்கும் முன்பு சில நிமிடங்களில் அல் சலாம் மசூதி அருகே மற்றொரு குண்டு…
Read More மசூதி அருகே குண்டு வெடிப்பு லெபனானில் 42 பேர் பலி