மசூதி அருகே குண்டு வெடிப்பு லெபனானில் 42 பேர் பலி

Bombs kill 42 outside mosques in Lebanon’s Tripoli

திரிபோலி:லெபனானில் மசூதி அருகே நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 42 பேர் பலியானார்கள்.   லெபனானில் ஷியா, சன்னி முஸ்லிம் பிரிவினருக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. ஷியா முஸ்லிம் பிரிவினர் ஹெஸ்போலாக் என்ற அமைப்புடன் சேர்ந்து சன்னி பிரிவினருக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இருதரப்பினரிடையே இதுவரை நடந்த தாக்குதல் சம்பவத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் லெபனான் திரிபோலி நகரத்தில் உள்ள தாஹ்வா மசூதியில் ஏராளமான சன்னி பிரிவை சேர்ந்த முஸ்லிம்கள் தொழுகை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது மசூதி அருகே திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 14 பேர் பலியானார்கள். இந்த பரபரபரப்பு அடங்கும் முன்பு சில நிமிடங்களில் அல் சலாம் மசூதி அருகே மற்றொரு குண்டு வெடித்தது. இதில் ஏராளமானோர் இறந்தனர். இரண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் 42 பேர் பலியாகி உள்ளனர்.

Bombs kill 42 outside mosques in Lebanon’s Tripoli

Related posts