apple new iwatch coming soon ஆப்பிள் நிறுவனமானது புதிய iWatch உற்பத்தியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது . தற்போது குறித்த iWatch தொடர்பான வடிவமைப்பு தொடர்பான தகவல்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 2014ம் ஆண்டளவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இச்சாதனம் ஆப்பிளின் முன்னைய ஸ்மார்ட் கைக்கடிகாரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. மேலும் இதனை செல்போண்ணுக்கு இணையாக பயன்படுத்தக்கூடியவாறு இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதனிடையே ஆப்பிளுக்கு போட்டியாக விளங்கும் சாம்சுங் நிறுவனம் இவ்வருட இறுதியில் தனது ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ இணைப்பு apple new iwatch coming soon We know that Apple is working on their new Apple iWatch, although we have no idea what the device will look like. The following…
Read More ஆப்பிளின் அடுத்த படைப்பு கை கடிகாரம் விரைவில்Category: உலகம் சிறகுகள்
ஒபாமாவை திணற வைத்த இளம் பெண்
obama questioned by a young lady அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உரையாற்றிய போது குறுக்கிட்ட ஒரு பெண், அரசு ரகசியங்களை வெளியிட்டதற்காக தண்டனை விதிக்கப்பட்ட பிராட்லி மேனிங்கை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தினார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, நியூயார்க்கின் சிராக்யூஸ் பகுதியில் உள்ள உயர்நிலைப் பாடசாலையொன்றில் நேற்று உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தில் அமர்ந்திருந்த இளம்பெண் ஒருவர் எழுந்து, “பிராட்லி மேனிங்கை விடுதலை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை எழுப்பினார். அவர் தொடர்ந்து தனது கருத்துகளைக் கூறிக் கொண்டிருந்தார். இதனால், தனது உரையை சில நொடிகள் நிறுத்திய ஒபாமா, “நீங்கள் பேசுவது எனக்குக் கேட்கிறது” என்று தெரிவித்தார். அப்போதும், அந்தப் பெண் உரத்த குரலில் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தார். இதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் அப்பெண்ணை உட்காருமாறு சத்தம் போட்டனர். ஆனால், ஒபாமா குறுக்கிட்டு, “அமைதியாக…
Read More ஒபாமாவை திணற வைத்த இளம் பெண்சிரியாவில் ராணுவம் ரசாயன குண்டு தாக்குதல்:1300 பொதுமக்கள் பலி
1300 civilians killed in Syria சிரியாவில் அரசுப்படையினர் நடத்திய ரசாயன வெடிகுண்டு தாக்குதலில் 1300 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள அயர்ன் டர்மா, சமால்கா, ஜோபர் ஆகிய பகுதிகளில் நேற்று இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இந்த விஷவாயு தாக்குதலில், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோரின் நுரையீரலுக்குள் ஊடுருவிய நச்சுப் பொருட்கள், நரம்பு மணடலத்தை பாதித்ததால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளனர். இதற்கான வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணி அளவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலை அறியாமலேயே பலர் மரணத்தை தழுவியுள்ளனர். இதில் பலி எண்ணிக்கை மேலும் பன்மடங்கு உயரும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து ஆராயவதற்கு ஐ.நா பாதுகாப்பு சபை மற்றும் ஐ.நா-வின் மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக கூடுகிறது.…
Read More சிரியாவில் ராணுவம் ரசாயன குண்டு தாக்குதல்:1300 பொதுமக்கள் பலிமலேசியாவில் மலையில் பஸ் கவிழ்ந்து 33 பேர் பலி
Malaysia crash: Toll rises to 37 after bus plunges into ravine கோலாலம்பூர்: மலேசியாவில் நடந்த கோரமான சாலை விபத்தில் 33 பேர் பலியானார்கள். இவர்களில் இந்தியர்கள் இருவர் என்று கூறப்படுகிறது. ஜென்டிங் ஹைலேண்ட்ஸ் பகுதியில், இந்த விபத்து நடந்துள்ளது. பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்தானது, 60 மீட்டர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததால் விபத்து நேரிட்டது. விபத்தில் சிக்கிய பேருந்தில் 53 பேர் இருந்தனர். இவர்களில் 27 ஆண்களும், 10 பெண்களும் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் மலேசியர்கள் தவிர வங்கதேசம், தாய்லாந்து, சீன நாட்டவரும் அடக்கம். பலத்த காயமடைந்தவர்கள் செலயாங் மருத்துவமனை, கோலாலம்பூர் மருத்துவமனை, சுங்காய் புலோ மருத்துவமனை, பென்டாங் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த மலைப் பகுதியில் அமைந்துள்ள ரிசார்ட்டிலிருந்து திரும்பும் வழியில் பஸ் விபத்துக்குள்ளானது. இறந்தவர்களில் 30…
Read More மலேசியாவில் மலையில் பஸ் கவிழ்ந்து 33 பேர் பலிபிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்!
India, US bank on Manmohan visit to boost ties அடுத்த மாதம் ஐ.நா. அவைக் கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசுகிறார். வாஷிங்டன்னில் பிரதமரின் பயண ஏற்பாடுகள் குறித்து அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைசுடன், ஆலோசனை நடத்திய பாதுகாப்பு ஆலோசகர் மேனன் இந்த தகவலை தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் 27ம் தேதி அமெரிக்கா வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த பயணத்தின் போது அமெரிக்க அதிபர் ஒபாமாவை அவர் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இச்சந்திப்பின் போது பாதுகாப்பு, வர்த்தகம், பருவநிலை மாற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறினார். பின்னர் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா.சபை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் கலந்து கொள்கிறார். India, US…
Read More பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்!அமெரிக்காவில், 4 வயது சிறுவனின் கால் முட்டிக்குள் ‘கடல் நத்தை’
நியூயார்க்: விளையாடும் போது தவறுதலாக சிறுவனின் முட்டுக்கால் பகுதிக்குள் சென்ற நத்தையை தற்போது வெளியே எடுத்து மீன் தொட்டியில் வளர்த்து வருகின்றனர். விளையாடும் போது சிறுவர்களுக்கு அடிபடுவது இயல்பு தான். அப்படி அடிபடும் வேளைகளில் உடலில் வீக்கம் ஏற்படுவதுண்டு. சில சமயங்களில் அத்தகைய வீக்கங்களில் சில முள் போன்றவைக் கிடைப்பதுண்டு. ஆனால், அமெரிக்கச்சிறுவனின் கால் வீக்கத்தில் இருந்து வெளிவந்த சிறிய நத்தையைக் கண்டு அனைவரும் அதிர்ந்து விட்டனர். During a family trip to the beach last month, 4-year-old Paul Franklin fell and scraped his right knee. That’s not unusual; little boys do all the time. It’s what emerged from his swollen knee that makes this a tale worth telling: a snail. Paul…
Read More அமெரிக்காவில், 4 வயது சிறுவனின் கால் முட்டிக்குள் ‘கடல் நத்தை’கடலுக்கடியில் வனுவாத்தூ தபால் நிலையம்
Vanuatu Postal Station Underwater நாட்டின் தொலைத் தொடர்புப் பணியில் தபால் சேவைக்கென முக்கியப் பங்கு இன்றைக்கும் இருக்கிறது. அப்படிப்பட்ட சேவையை அளிக்கும் தபால் நிலையங்கள் பொதுவாக மக்கள் எளிதாக அணுகும் இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும்.ஆனால் இந்தத் தபால் நிலையம் முற்றிலும் வித்தியாசமானது. வனுவாத்தூ தபால் நிலையம் நிலத்திலிருந்து 3 மீட்டர் கடலுக்கடியில் செயல்பட்டு வருகிறது.ஆஸ்திரேலியா அருகே சுமார் 100 தீவுகள் சிதறிக் கிடக்கின்றன. வனுவா என்றால் நிலம் என்று பொருள். இதனால் இந்த தீவு வனுவாத்தூ என அழைக்கப்படுகிறது. ஹைடுஅவே தீவின் அருகே கடலுக்கு அடியில் இருக்கும் இந்த தபால் நிலையத்தை காண வரும் பார்வையாளர்கள் தண்ணீருக்குள்ளே அணியப்படும் முகமூடி உள்ளிட்ட கவசங்களையெல்லாம் அணிந்துக்கொண்டு செல்கின்றனர். வனுவாத்தூவில் கிடைக்கும் சிறப்பு வாட்டர் ப்ரூப் தபால் அட்டைகளை இதுவரை ஆயிரக்கணக்கானோர் தங்கள் அன்பானவர்களுக்கு அனுப்பி மகிழ்ந்துள்ளனர். இங்கிருந்து அனுப்பபடும்…
Read More கடலுக்கடியில் வனுவாத்தூ தபால் நிலையம்சீனாவில் 10 மாத குழந்தைக்கு சரமாரி கத்திக்குத்து
China knife attack: Police arrest suspect in bus rampage சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள பெய்குவோ நகரில் இருந்து அனியாங் மாவட்டத்திற்கு நேற்று ஒரு பஸ்சில் 33 பயணிகள் சென்றுக் கொண்டிருந்தனர். அயாங் நகரை நெருங்கும்போது பஸ்சில் பயணித்த ஒரு நபருக்கும் மற்றவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி கைகலப்பாக உருமாறிய போது, தகராறு செய்த பயணி மடியில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பயணிகளை சரமாரியாக வெட்டினான். கத்திக்குத்தில் படுகாயமடைந்த 10 மாத கைக்குழந்தை ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவத்தில் மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். கத்தியால் வெட்டிய ஆசாமி பஸ்சில் இருந்து எகிறி குதித்து தப்பித் தலைமறைவானான். படுகாயமடைந்த 15 பேரையும் ஒரு ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். போகும் வழியிலேயே 10 வயது சிறுவன் ஒருவனும்,…
Read More சீனாவில் 10 மாத குழந்தைக்கு சரமாரி கத்திக்குத்துஅதிவேகமாக பைக் ஒட்டி சாதனை படைத்த பார்வையற்றவர்
A BLIND former British soldier has vowed to break the 200mph barrier — on a motorbike இங்கிலாந்தில் கண்பார்வையை இழந்த ஒரு நபர் அதிவேகமாக பைக்கை ஓட்டி புதிய சாதனை படைத்து பார்ப்போரை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார். எடின்பர்க்கை சேர்ந்தவர் ஸ்டுவர்ட் கன். இவருக்கு வயது 39. உலகில் மிக அதிவேகமாக பைக் ஓட்டிய கண் பார்வையற்றவர் என்னும் பெருமையை ஸ்டுவர்ட் பெற்றுள்ளார். கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் ஸ்டுவர்ட் சிக்கினர். விபத்தில் சிக்கி தோள் பட்டை எலும்பு உள்பட முதுகில் 2 இடங்களில் எலும்பு நொறுங்கி, அவரது உடலின் வலது புறத்தில் பக்கவாதம் ஏற்பட்ட போதும் மனவலிமை இழக்காமல் அவர் தொடர்ந்து போராடினார். அதிவேகமாக பைக் ஓட்டவேண்டுமென தன்னம்பிக்கையுடன் முயற்சித்த ஸ்டுவர்டிற்கு அவரது தந்தையான ஜியோப் உறுதுணையாக இருந்தார். A BLIND…
Read More அதிவேகமாக பைக் ஒட்டி சாதனை படைத்த பார்வையற்றவர்610 கிலோ எடை: கிரேன் மூலம் சிகிச்சைக்கு சென்ற இளைஞர்
Tuesday Aug 20, 2013: 610 kg Saudi man forklifted to hospital for treatment சவுதி அரேபியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டிற்குள் முடங்கி கிடந்த 610 கிலோ இளைஞர் கிரேன் மூலம் சிகிச்சைக்காக வெளியேற்றபட்டார். சவிதியில் உள்ள ஜிசான் பகுதியில் வசித்து வருபவர், காலித் மோஷின் ஷைரி. 610 கிலோ உடல் எடையினால் அவதிப்பட்டுவரும் இந்த இளைஞர் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டை விட்டு கூட வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக மோஷின் ஷைரி வீட்டினுள்ளேயே முடங்கி கிடக்கிறார். இவரை பற்றி அறிந்த சவுதி மன்னர் அப்துல்லா காலித் மோஷின் ஷைரியை வீட்டை விட்டு அப்புறப்படுத்தி, மருத்துவமனையில் அனுமதித்து, அரசு செலவில் எடை குறைப்பு சிகிச்சை வழங்குமாறு உத்தரவிட்டார். English News Summary: 610 kg Saudi man…
Read More 610 கிலோ எடை: கிரேன் மூலம் சிகிச்சைக்கு சென்ற இளைஞர்