Yahoo email service stopped in china சீனாவில் இ மெயில் சேவையை நிறுத்திக் கொள்வதாக ‘யாஹூ‘ இணையதளம் அறிவித்துள்ளது. சீனாவில் இணைய தளங்கள் மூலம் அரசுக்கு எதிராக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அரசுக்கு எதிரான வெப்சைட்டுகளை சீன அரசு முடக்கி வருகிறது. இந்நிலையில், தனது இ மெயில் சேவையை இந்த மாதம் 31ம் தேதி நிறுத்தி கொள்ள போவதாக யாஹூ இணையதளம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தனது வாடிக்கையாளர்களுக்கு இ மெயிலில் தகவல் அனுப்பி உள்ளது. அதில், ஆகஸ்ட் 31ம் தேதி வரை யாகூ இ மெயில் வழியாக தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம். English Summary: Yahoo email service stopped in China Yahoo’s email service in China has shut down, with a note on its log-in page asking users to…
Read More சீனாவில் யாஹூ இணையதளத்தின் இமெயில் சேவை நிறுத்தம்Category: உலகம் சிறகுகள்
ஜப்பானின் சகுரஜிமா எரிமலை 500-வது முறையாக நேற்று வெடித்து
Volcano has erupted in southwestern Japan and coated a nearby city with a layer of ash. ஜப்பானின் ககோஷிமா நகர் அருகே உள்ள 1117 மீட்டர் உயரமுடைய சகுரஜிமா எரிமலை நேற்று மாலை வெடித்து சிதறியது. சுமார் 5,000 மீட்டர் தூரத்திற்கு மேலே சாம்பலை பீய்ச்சி அடித்தது. இதனால் எரிமலை சாம்பல் அந்த நகரின் பெரும்பாலான பகுதியில் பறந்ததால் ரயில், பஸ் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் லைட் போட்டு சென்றன. இதிலிருந்து வெளியேறிய எரிமலைக்குழம்பானது ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வழிந்தோடியது. இந்த ஆண்டில் சகுரஜிமா எரிமலை 500-வது முறையாக நேற்று வெடித்து சிதறியது என்று கூறப்படுகிறது. Volcano has erupted in southwestern Japan and coated a nearby city with a layer of ash. Buying,…
Read More ஜப்பானின் சகுரஜிமா எரிமலை 500-வது முறையாக நேற்று வெடித்துவிமானத்தை விட வேகமாக செல்லும் வாகனம் விரைவில் அமெரிக்க அறிமுகம்
போக்குவரத்து முறைகள் காலத்துக்கேற்ப மாற்றம் கண்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் எத்தகைய போக்குவரத்து முறைகள் எப்படி இருக்கும் என்பதற்கான அடையாளங்களும் இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் (Elon Musk), ஹைபர் லூப் (Hyperloop) என்ற பெயரில் புதிய போக்குவரத்து முறை குறித்த செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். ரயிலை போன்றே தோற்றம் கொண்ட இந்த வாகனம் ஒலியை விட வேகமாக பறக்கும் கன்கார்டு விமானத்தின் தொழில் நுட்பத்தை கொண்டதாக இருக்கும் என எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்தார். மின்காந்த அலைகளை கொண்டு இயங்கும் இந்த வாகனம் தரையை தொடாமல் காற்றின் மேல் வழுக்கிக் கொண்டும் செல்வதாக இருக்கும். அமெரிக்காவின் முக்கிய நகரங்களான சான் ஃபிரான்சிஸ்கோவுக்கும் லாஸ் ஏஞ்சலிசுக்கும் இடையிலான 600 கிலோ மீட்டர் தூரத்தை இந்த வாகனம் அரை மணி…
Read More விமானத்தை விட வேகமாக செல்லும் வாகனம் விரைவில் அமெரிக்க அறிமுகம்அமெரிக்காவின் ரகசிய தகவல்களை அளித்த பிராட்லி மேன்னிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு
விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு அமெரிக்காவின் ரகசிய தகவல்களை அளித்த பிராட்லி மேன்னிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை ஆதரித்து அவரது ஆதரவாளர்கள் ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேர் கையொப்பமிட்டுள்ளனர். ஜூலியன் அசாஞ்சேவால் தொடங்கப்பட்ட விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு அமெரிக்காவின் ரகசிய ராணுவ அறிக்கைகள், இதர நாடுகளில் உள்ள அமெரிக்க தூதர்கள் அனுப்பிய ரகசிய கடிதங்களை அளித்தவர் பிராட்லி மேன்னிங்(25). இந்த குற்றச்சாட்டுக்கு அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் 90 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், பிராட்லி மேன்னிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் பரிந்துரை செய்த கையெழுத்து பிரதிகள் நார்வேயிலுள்ள நோபல் பரிசு அறக்கட்டளை அலுவலகத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டன. அமைதியையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்டும் வகையில் பணியாற்றிய பிராட்லி மேன்னிங்கிற்கு நோபல் பரிசு…
Read More அமெரிக்காவின் ரகசிய தகவல்களை அளித்த பிராட்லி மேன்னிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசுஇலங்கையில் முஸ்லிம், கிறிஸ்தவக் குழுக்களை ஓட ஓடத் துரத்துவோம்: சிங்கள வெறியன் வண கிரம விமலஜோதி தேரர் பேச்சு
Srilanka Religious issue இலங்கை தனி பெளத்த நாடு: பொது பல சேனாவின் தலைவர் வண கிரம விமலஜோதி தேரர் பேச்சு இலங்கை பல்லின சமய நாடல்ல. இது ஒரு தனி பெளத்த நாடு. 2,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த எமது கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என பொது பலசேனா அமைப்பின் தலைவர் வண கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார். பொது பலசேனா வின் குருணாகல் மாவட்ட மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை குருணாகல் சத்தியவாதி மைதானத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை ஒரு சிங்கள நாடு. உலகில் வேறு சிங்கள நாடுகள் இல்லை. முஸ்லிம், கிறிஸ்தவக் குழுக்கள் சிங்கள பெளத்தர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி மதம் மாற்றி வருவதாகக் குற்றம் சாட்டிய அவர் இந்தச் செயற்பாட்டை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார், இல்லாவிடின் அவர்களை ஓட…
Read More இலங்கையில் முஸ்லிம், கிறிஸ்தவக் குழுக்களை ஓட ஓடத் துரத்துவோம்: சிங்கள வெறியன் வண கிரம விமலஜோதி தேரர் பேச்சுஸ்னொடென்னால் ஒபமாவின் ரஷ்ய பயணம் ரத்து
அமெரிக்க ரகசியங்களை வெளியிட்ட ஸ்னோடென்னை, ரஷ்யா ஒப்படைக்காததால் அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய பயணத்தை ரத்து செய்துள்ளார். அமெரிக்க உளவுத் துறையில் பணியாற்றிய ஸ்னோடென், முக்கியமான ரகசியங்களை வெளிப்படுத்தினார். இதை தொடர்ந்து அவர், தற்போது ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார். தங்கள் நாட்டின் முக்கிய ரகசியங்களை அம்பலப்படுத்திய, எட்வர்ட் ஸ்னோடென்னை ஒப்படைக்கும் படி, அமெரிக்கா வற்புறுத்தியது. ஆனால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்து விட்டார். ரஷ்யாவின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்தார். அடுத்த மாதம், மாஸ்கோவில் நடக்கும், பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள இருந்த ஒபாமா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஸ்னோடென்னை ஒப்படைக்காத காரணத்தால் ரஷ்யா பயணத்தை ஒபாமா ரத்து செய்துள்ளார். ஒபாமாவின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளதாக ரஷ்ய அதிபர் புடின்…
Read More ஸ்னொடென்னால் ஒபமாவின் ரஷ்ய பயணம் ரத்துநோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி எகிப்தில் நுழையத் தடை
Nobel prize winner for peace, Tawakkul Karman Denied Entry Into Egypt ஏமனை சேர்ந்த தவக்கோல் கம்ரான், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். அரபு நாட்டினரில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றவர். எகிப்தில் சமீபத்தில் நடந்த இராணுவ புரட்சி மூலம் ஜனாதிபதி முகமது முர்சி பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் முர்சிக்கு அவரது ஆதரவாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவும் தவக்கோல் கருத்து தெரிவித்து வருகிறார். மேலும், போராட்டக்காரர்களுக்கு நேரில் ஆதரவு தெரிவிக்க நேற்று எகிப்து வந்தார். தலைநகர் கெய்ரோ விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை எகிப்துக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்தது. உடனே அவர் மற்றொரு விமானம் மூலம் ஏமனுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கு முர்சியின்…
Read More நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி எகிப்தில் நுழையத் தடைவேஷ்டியால் ரயில் பயணம் ரத்து இந்தியருக்கு துபாயில் அவமானம்
Indian wearing dhoti not allowed on Dubai metro துபாயில் வேஷ்டி அணிந்து சென்ற இந்தியருக்கு அந்நாட்டு மெட்ரோ ரயிலில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இது குறித்து அவரது மகள், அந்நாட்டு நீதிமன்றத்தில், ரயில் நிலைய அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தியாவை சேர்ந்த மதுமதி. துபாயில் வசித்து வருகிறார். இவரை காண, மதுமதியின் தந்தை அடிக்கடி துபாய் செல்வது வழக்கம். இந்நிலையில், 67 வயதான மதுமதியின் தந்தை நேற்று துபாயில் உள்ள எதிசலாத் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வேஷ்டி அணிந்து சென்றார். ரயில் நிலைய அதிகாரிகள், அவரை உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால், அவருடன் சென்ற மதுமதி அதிர்ச்சி அடைந்தார். தந்தையை தடுப்பதற்கான காரணம் கேட்டபோது, அவர் வேஷ்டி அணிந்திருப்பதால் ரயிலில் பயணிக்க அனுமதி இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், வேஷ்டி, இந்தியர்களின் பாரம்பரிய உடை என்றும் சுற்றுலா பயணிகளுக்கு…
Read More வேஷ்டியால் ரயில் பயணம் ரத்து இந்தியருக்கு துபாயில் அவமானம்அமெரிக்க ராணுவ செக்ஸ் புகார்: 60 பயிற்சியாளார்கள் நீக்கம்
வாஷிங்டன், ஆக. 5 – அமெரிக்க ராணுவத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக பயிற்சியாளர்களாக பணியாற்றும் 60 வீரர்கள் அதிரடியாக நீக்கப் பட்டுள்ளனர். சமீபகாலமாக அமெரிக்க ராணுவத்தில் செக்ஸ் குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்க ராணுவத்தில் பணிபுரியும் ஆண் வீரர்களாலேயே பெண் வீரர்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுக்கப்படுவதாக பெண்டகன் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணயில் 60 பயிற்சியாளர்கள் செக்ஸ் குற்றதில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ராணுவ அமைச்சர் ஷாக் ஹாகெல் உத்தரவிட்டார். அதன்படி, ராணுவப் பயிற்சியாளர்கள் 55 பேரும், கடற்படை பயிற்சியாளர்கள் ஐவரும் அதிரடியாக பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடை பெற்று வருவதால் பணி நீக்கம் செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை கூடலாம் என தெரிகிறது. இதையும் படியுங்கள் தொகுப்பாளர், இசையமைப்பாளாரான ஜேம்ஸ் வசந்தன்…
Read More அமெரிக்க ராணுவ செக்ஸ் புகார்: 60 பயிற்சியாளார்கள் நீக்கம்பாகிஸ்தானில் இந்து கிறிஸ்தவ பெண்களிடம் பாலியல் பலாத்காரம்: அமெரிக்க அறிக்கை
Hindus in Pakistan are the worst victims of rape, says a report by an independent American group. வாஷிங்டன்: பாகிஸ்தானில் நடைபெறும் கற்பழிப்பு சம்பவங்களுக்கு இந்து பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக அமெரிக்காவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மத சுதந்திரம் என்ற தலைப்பில் அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் உலகளாவிய அளவில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த அறிக்கையின் முடிவு அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. ஷியா-சன்னி பிரிவினருக்கு இடையில் நடைபெற்ற 203 இன மோதல் சம்பவங்களில் 717 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 635 பேர் ஷியா பிரிவினர் என்பது தெரிய வந்துள்ளது. பலியாகும் இந்துப் பெண்கள் பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்களை குறிவைத்து கடந்த 18 மாதங்களில் 16 தாக்குதல் நடைபெற்றுள்ளன. இந்த தாக்குதல்களில் 3 இந்துக்கள் பலியாகியுள்ளனர். 4 பேர் படுகாயமடைந்தனர். கடந்த…
Read More பாகிஸ்தானில் இந்து கிறிஸ்தவ பெண்களிடம் பாலியல் பலாத்காரம்: அமெரிக்க அறிக்கை