Information to Cause us Government Worst Damage in History. வரலாற்றில் அமெரிக்காவை இதைவிட வேறு யாராலும் அவமானப்படுத்த முடியாது என்ற நிலையில், அந்த அரசுக்கு எதிராக ஸ்னோடென் கைவசம் அவ்வளவு தகவல்கள் உள்ளதாக, ஸ்னோடெனின் ரகசியங்களை அம்பலப்படுத்திவரும் The Guardian பத்திரிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் அதிகாரி ஸ்னோடென், ”இணைய தளங்களில் ஊடுருவி அமெரிக்கா உளவு வேலை பார்க்கிறது” என்று அமெரிக்காவிற்கு எதிராக பகிரங்கமாக தகவலை வெளியிட்டார். இதனை அடுத்து அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டு அவர் மாஸ்கோ விமானநிலையத்தில் பதுங்கியுள்ளார். உலக நாடுகள் அவருக்கு தஞ்சம் அளிக்க கூடாது என்று அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்தபின்னும் அவருக்கு க்யூபா, நிகராகுவே, வெனிசுலா போன்ற அழைப்பு விடுத்தன. இந்த நிலையில் ஸ்னோடென் பிரிட்டனில் தற்போது தஞ்சம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் கார்டியன் பத்திரிக்கையின் கட்டுரையாளர் க்லீன்…
Read More அமெரிக்க உளவுதுறையின்(NSA) போக்கு: அமெரிக்காவிற்கு அவமானம்Category: உலகம் சிறகுகள்
அமெரிக்காவுடன் இணைந்து தொழில்வாய்ப்பு – ப.சிதம்பரம்
India US to work together : Chidambaram வாஷிங்டன்: அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில் கூட்டத்தின் 38-வது தலைமை உச்சி மாநாடு வாஷிங்டனில் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசிய போது, இந்தியா பொருளாதார சீர்திருத்ததை மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவுடன் இணைந்து புதிய தொழில் வாய்ப்புகளை இந்தியாவில் ஏற்படுத்துவது பெரும் வாய்ப்பாக கருதுகிறேன். இதனால் பல இந்திய நிறுவனங்களின் அந்தஸ்து உயர்வதோடு அமெரிக்க இந்திய நிறுவனங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி நிலவும். அது பொருளாதார மேம்பாட்டிற்கான அடித்தளமாகவும் அமையும், என்று கூறினார். English Summary: India US to work together : Chidambaram Washington: Making a passionate plea to the US and Indian businesses to work together for a prosperous society, Finance Minister…
Read More அமெரிக்காவுடன் இணைந்து தொழில்வாய்ப்பு – ப.சிதம்பரம்கென்யாவில் 1000க்கும் அதிகமான பள்ளிச் சிறுவர்கள் கைது: மதுப்பழக்கம்
school students arrested in kenya for alcohol consumption 10 ஜூலை 2013: கென்யாவில் மதுப்பழக்கத்தில் ஈடுபட்டதாக 1000க்கும் அதிகமான பள்ளிச் சிறுவர்களை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்தனர். கென்யாவில் சம்பள உயர்வு கோரி ஆசிரியர்கள் கடந்த மூன்று வாரமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பள்ளிகள் அனைத்தும் இயங்காததால், பெரும்பாலான பள்ளிச் சிறுவர்கள் கிளப்புகள் மற்றும் மதுபானக்கடைகளில் சுற்றித் திரிகின்றனர். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல்துறையினர் தலைநகர் நைரோபியில் மட்டும் மதுப்பழக்கத்தில் ஈடுபட்ட 1000-க்கும் அதிகமான பள்ளிச் சிறுவர்களை கைது செய்தனர். school students arrested in kenya for alcohol consumption English Summary: More than 1,000 children suspected of under-age drinking were arrested in Kenya’s capital Nairobi over…
Read More கென்யாவில் 1000க்கும் அதிகமான பள்ளிச் சிறுவர்கள் கைது: மதுப்பழக்கம்சீனாவில் தாய்ப்பால் விற்பனை
சீனாவில் தற்போது தாய்ப்பால் விற்பனை சூடுபிடித்துள்ளது, இதற்கு கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. சீனாவில் ஊட்டச் சத்து நிறைந்தது, உடலுக்கு அதிக எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என்பதால் தாய்ப்பாலை புட்டியில் அடைத்து விற்க பல ஏஜென்சிகள் திடீரென முளைத்துள்ளன. இதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்க பணக்காரர்கள் தயாராக உள்ளனர். தங்களது குழந்தைகளுக்கு மட்டுமின்றி இளவயதினரும் தாய்ப்பாலை விலைக்கு வாங்கி குடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக சிறிய அளவிலான இயந்திரங்களும் மறைமுகமாக விற்பனைக்கு வந்துள்ளன. தாய்மார்களிடம் இருந்து சிறிய பம்ப் மூலம் தாய்ப்பாலை உறிஞ்சி கணிசமான விலைக்கு விற்கின்றனர். இதற்காக தாய்மார்களுக்கு கூலியும் கொடுக்கப்படுகிறது. ஒருவருக்கு அவரவர் உடல் தகுதிக்கு ஏற்ப ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை கூலியாக கொடுக்கப்படுகிறது. இதற்காக ஏராளமான புரோக்கர்கள், கிராமங்களில் உள்ள குழந்தை பெற்ற ஏழை தாய்மார்களை அடிமாட்டு…
Read More சீனாவில் தாய்ப்பால் விற்பனைஇந்தியா உள்பட 38 நாடுகளின் தூதரகத்தை அமெரிக்கா உளவு
India, including the embassies of 38 countries watched the shocking secret U.S. intelligence have been reported. அமெரிக்கா: வாஷிங்டன்: இந்தியா உள்ளிட்ட 38 நாடுகளின் தூதரகங்களை அமெரிக்க புலனாய்வுத் துறையினர் உளவு பார்த்துள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்துள்ளது. அமெரிக்க உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றிய எட்வர்டு ஸ்நோடென், தன் நாட்டு தேசிய பாதுகாப்பு அமைப்பின் அத்துமீறல் உளவு நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களை பதிவு செய்த லேப்டாப்புடன் கடந்த மாதம் ஹாங்காங்குக்கு தப்பி வந்தார். அங்கு அந்த ஆவணங்களை உலகுக்கு வெளியிட்டார். இதனால் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரமாக இறங்கி உள்ளது. ஆனால், ஹாங்காங்கில் இருந்து ரஷ்யாவுக்கு சென்ற அவர், ஈகுவடார் நாட்டிடம் அடைக்கலம் கேட்டுள்ளார். தற்போது அவர் எங்கு உள்ளார் என்பது ரகசியமாக உள்ளது. சீனாவை, அமெரிக்கா உளவு…
Read More இந்தியா உள்பட 38 நாடுகளின் தூதரகத்தை அமெரிக்கா உளவுஎய்ட்ஸ் நோய்க்கு புதிய சிகிச்சை முறை: உலக சுகாதாரக் கழகம்
AIDS HIV ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான புதிய வழிகாட்டு விதிகளை உலக சுகாதாரக் கழகம் அறிமுகப்படுத்துகிறது. எய்ட்ஸ் நோயால் ஏற்படக்கூடிய லட்சக்கணக்கான உயிரிழப்புகளைத் தவிர்க்க இந்த புதிய விதிமுறை உதவும் என அவர்கள் அது தெரிவிக்கிறது. ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்று ஏற்பட்ட ஆரம்பத்தில் அதாவது நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுவதற்கு முன்பாகவே மூன்று மருந்துகளை ஒன்றாக சேர்த்துச் செய்த மாத்திரை ஒன்றை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என உலக சுகாதாரக கழகம் பரிந்துரைக்கிறது. வளர்ந்துவரும் நாடுகளில் ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்று ஏற்பட்டு எய்ட்ஸ் நோய் தாக்கம் வருவதைத் தள்ளிப்போட மருந்து சாப்பிடுகின்ற நபர்களின் எண்ணிக்கையை ஒரு கோடியே அறுபது லட்சத்திலிருந்து இரண்டு கோடியே அறுபது லட்சமாக இந்த புதிய மருத்துவ முறை அதிகரிக்கும். ஆனாலும் விலை மலிவான சிகிச்சையாகவே இந்த புதிய…
Read More எய்ட்ஸ் நோய்க்கு புதிய சிகிச்சை முறை: உலக சுகாதாரக் கழகம்ஸ்நொவ்டென் எச்சரிக்கை – சீனா உதாசீனம்
Edward Snowden பெய்ஜிங்: அமெரிக்காவின் தேச துரோகியாக கருதப்படும் எட்வர்ட் ஸ்நொவ்டெனனுக்கு அடைகலம் கொடுக்கவேண்டாம் என நேற்று அமெரிக்கா கேட்டுகொண்டிருந்த நிலையில், சீன கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் தொலைகாட்சியில் அவரை சிறந்த சிந்தனையாளர் என்றும் புரட்சியாளராகவும் சித்தரித்து செய்திகள் வெளியிட்டுள்ளன. அமெரிக்காவுடன் சுமுகமான உறவு நிலைக்கவேண்டுமெனில் ஸ்நொவ்டெனுக்கு அடைக்கலம் கொடுக்கவேண்டாம் எனவும், அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்குமாறு சீனாவை அமெரிக்க வெள்ளைமாளிகை அறிக்கை வெளியிட்டது அனைவரும் அறிந்ததே… China’s state newspaper praises Edward Snowden for ‘tearing off Washington’s sanctimonious mask’ Edward Snowden இதையும் படியுங்கள் தமிழகம் முழுவதும் பள்ளி நேரங்கள் 9.30 என்பது 8.30 ஆகா மாற்றம். மாநிலங்களவை தேர்தல் அதிமுக திமுக வெற்றி தமிழகஅரசு என்.எல்.சி. பங்குகளை வாங்க தயார்: முதல்வர்.
Read More ஸ்நொவ்டென் எச்சரிக்கை – சீனா உதாசீனம்சுவிஸ் வங்கியில் இந்தியர்களை விட பாகிஸ்தானிய கருப்புப்பணம் அதிகம் .
pakistani black money in swiss banks சூரிச் : மக்கள் தொகையிலும், பரப்பளவிலும், தொழில்நுட்பத்திலும் மிக வேகமாக வளர்ந்துள்ள இந்தியாவை விட, பாகிஸ்தான் நாட்டவர்கள் சுவிஸ் வங்கியில் அதிகமான தொகையை கருப்புப் பணமாக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. சமீபத்தில் சுவிஸ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, அந்த வங்கியில் இந்தியர்கள் வைத்துள்ள கணக்குகளில் உள்ள பணத்தை விட, பாகிஸ்தானியர்கள் மற்றும் அந்நாட்டு தொழில் நிறுவனங்கள் வைத்துள்ள கணக்கில்தான் அதிகமான கறுப்புப்பணம் பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. சுவிஸ் வங்கியில் பாகிஸ்தானியர்கள் வைத்துள்ள பணத்தின் அளவு ரூ.92000 கோடியாகும். சுவிஸ் வங்கியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் பணத்தின் அளவு ரூ.9000 கோடியாக குறைந்துள்ளது. இது 2012ம் ஆண்டை விட 35 சதவீதம் அல்லது ரூ.4900 கோடி குறைவாகும். 2012ம் ஆண்டின் தொடக்கத்தில் ரூ.14,000 கோடி இந்தியர்களின் சேகரிப்பில் இருந்த பணம் மூடப்பட்டுள்ளது.…
Read More சுவிஸ் வங்கியில் இந்தியர்களை விட பாகிஸ்தானிய கருப்புப்பணம் அதிகம் .சோமாலி தீவிரவாதிகள் ஐ.நா மையம் மீது தாக்குதல், 22 நபர்கள் பலி
வியாழக்கிழமை, 20 ஜூன் 2013 : மொகாடிசு : சோமாலியா தலைநகர் மொகாடிசுல் உள்ள முக்கிய ஐ.நா மையம் மீது பயங்கரவாத தாக்குதலில் 22 நபர்கள் பலியாகியுள்ளனர். மொகாடிசுவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் முன்னேற்ற திட்ட மையத்தின் நேற்று காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் ஏற்பட்ட பரபரப்பை பயன்படுத்தி ஆயுதமேந்திய தீவிரவாதிகள் ஐ.நா மையத்தின் உள்ளே நுழைந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அமைதி படைக்கும் போராளிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 22 பேர் பலியாகினர். பலியானோரில் 4 ஐ.நா பாதுகாப்பு படையினர் மற்றும் 4 உள்ளூர் பாதுகாப்பு படையினர் அடங்குவர். இந்த தாக்குதலை ஐ.நா பொது செயலர் பான் கீ மூன் வன்மையாக கண்டிப்பதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பொறுபேற்று அல் சபாப் என்ற தீவிரவாத அமைப்பு, அமெரிக்காவின் நலன்களை பாதுகாக்க அமைக்கப்பட்ட சாத்தானிய சக்தியான ஐ.நாவை விரட்டும் வரை இது போன்ற தாக்குதல் தொடரும் என…
Read More சோமாலி தீவிரவாதிகள் ஐ.நா மையம் மீது தாக்குதல், 22 நபர்கள் பலிஇங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் உடலில் இந்திய மரபணு
england prince william indian origin இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் உடலில் ஒரே ஒரு இந்திய மரபணு இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வில்லியம்ஸ், ஹாரியின் தாயார் டயானா மூலம் தான் இந்த மரபணு அவர்களது உடலில் பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். டயானாவின் மூதாதையரான தியோடார் போர்ப்ஸ் 1788 முதல் 1820 வரை இந்தியாவில் பணிபுரிந்த போது, அவருடைய வீட்டில் பணிபுரிந்த எலிசா கெவார்க் என்ற பெண்மணி மூலம் இந்திய வம்சாவளி மரபணு பரவியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எனவே இந்திய வம்சாவளி மரபணு உள்ள ஒருவர் முதன்முறையாக இங்கிலாந்து பிரிட்டன் மன்னராக வரவுள்ளார் என்று கூறபடுகிறது. ஆயினும் இந்த மரபணுக்கள் தாய்வழி சொந்தங்களில் மட்டுமே பரவும் காரணத்தால் வில்லியம்ஸ் மற்றும் ஹாரியின் குழந்தைகளுக்கு பரவாது என கூறப்படுகிறது. england prince william indian origin இதையும் படியுங்கள்…
Read More இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் உடலில் இந்திய மரபணு