இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் உடலில் இந்திய மரபணு

england prince william indian origin

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் உடலில் ஒரே ஒரு இந்திய மரபணு இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வில்லியம்ஸ், ஹாரியின் தாயார் டயானா மூலம் தான் இந்த மரபணு அவர்களது உடலில் பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டயானாவின் மூதாதையரான தியோடார் போர்ப்ஸ் 1788 முதல் 1820 வரை இந்தியாவில் பணிபுரிந்த போது, அவருடைய வீட்டில் பணிபுரிந்த எலிசா கெவார்க் என்ற பெண்மணி மூலம் இந்திய வம்சாவளி மரபணு பரவியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

எனவே இந்திய வம்சாவளி மரபணு உள்ள ஒருவர் முதன்முறையாக இங்கிலாந்து பிரிட்டன் மன்னராக வரவுள்ளார் என்று கூறபடுகிறது.

ஆயினும் இந்த மரபணுக்கள் தாய்வழி சொந்தங்களில் மட்டுமே பரவும் காரணத்தால் வில்லியம்ஸ் மற்றும் ஹாரியின் குழந்தைகளுக்கு பரவாது என கூறப்படுகிறது.

england prince william indian origin

Related posts