பா.ஜ.க. தேர்தல் பிரசாரக் குழுவின் தலைவராக குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியை நியமனம் செய்தது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணியிலும், இந்திய அரசியலிலும் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
ஆனால், இவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றும் வகையில் மோடி அடுத்த வியுகம் வகுத்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
முதல் கூட்டமாக உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.வின் செல்வாக்கு மிக்க தொகுதிகளை பட்டியலிட்டு வைத்திருக்கும் அவர், மஹாராஜ் கஞ்ச், டியோரியா, கோராக்பூர், குஷி நகர், வாரணாசி, பால்லியா, துமாரிகஞ்ச், பஹ்ரியாச், சுல்தான்பூர், லகிம்பூர், தவுர்ஹரா, லக்னோ உன்னாவ், கான்பூர், காசியாபாத், மீரட், ஆக்ரா உள்ளிட்ட 42 தொகுதிகளை சூறாவளி பிரசாரம் செய்வதற்காக தேர்ந்தெடுத்துள்ளார்.
1998ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் உ.பி.யில் உள்ள 80 தொகுதிகளில் 57 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றியது.
2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தலில் வெறும் 10 இடங்களை மட்டுமே கைப்பற்றிய பா.ஜ.க., வரும் 2014 தேர்தலில் 1998ம் ஆண்டு நிகழ்த்திய சாதனையை முறியடிக்கும் என மாநில பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் நம்பிக்கையுடன் கூறுகிறார்.
இதையும் படியுங்கள்
- இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் உடலில் இந்திய மரபணு
- தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம் முதல்வர் நடவடிக்கை
- கேபினட் அமைச்சர்கள் சி.பி. ஜோஷி, அஜய் மக்கான் ராஜினாமா
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
- விஜய் தேர்தல் வழக்கு: குழந்தைகளிடம் கேட்டது ஊழல் நடைமுறை ஆகாது; சேலம் வடக்கு தேர்தல் மனுவை நிராகரிக்கும் நிலையில் உயர் நீதிமன்றம்
- அண்ணன் சீர் திட்டம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கக் காசு, பட்டுப் புடவை பெற ஆதார் கட்டாயம்; ரூ.812 கோடி ஒதுக்கீடு
- கவின் ஆணவக் கொலை வழக்கு: குற்றப்பத்திரிகை ரத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
← முந்தைய செய்தி: கேபினட் அமைச்சர்கள் சி.பி. ஜோஷி, அஜய் மக்கான் ராஜினாமா
அடுத்த செய்தி →: இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் உடலில் இந்திய மரபணு
