ஹாரி பாட்டர் புத்தகம் 1 1/2 லட்சம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது

harry potter book records

ஹாரி பாட்டர் புத்தகத்தின் கதாசிரியர் ஜே.கே.ரவுலிங் என்பவர் எழுதிய ஹாரி பாட்டர் கதையின் கையெழுத்து பிரதி 1 1/2 லட்சம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது.

25 ஆயிரம் பவுண்டுகளில் இருந்து தொடங்கிய இந்த ஏலம், படிப்படியாக கூடிக்கொண்டே போனதால் ஏல அரங்கில் பயங்கர நிசப்தம் நிலவியது. இறுதிக் கட்டத்தில் 2 முக்கிய பிரமுகர்கள் மட்டும் போட்டியில் இருந்தனர். இறுதியாக அதில் ஒருவர் 1 1/2 லட்சம் பவுண்டுகளுக்கு அந்த புத்தகத்தை ஏலத்தில் எடுத்தபோது அங்கு கூடியிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

‘டேல்ஸ் ஆப் பீடில் த பர்ட்’ என்ற பெயரில் ஜே.கே.ரவுலிங் எழுதிய வேறொரு புத்தகத்தின் கையெழுத்து பிரதி கடந்த 2007ம் ஆண்டு 20 லட்சம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

harry potter book records

Related posts