5 வயது சிறுவன் இளம் விமானம் ஓட்டி கின்னஸ் சாதனை

 5 Year old Chinese Boy becomes youngest pilot, breaking Guinness world record

 5 Year old Chinese Boy becomes youngest pilot, breaking Guinness world record

சீனாவைச் சேர்ந்த 5 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் உலகின் மிக இளம் வயதில் விமான ஓட்டுநராக விமானத்தைச் செலுத்தி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளான். ஆகஸ்ட் 31 ஆம் திகதி டுவோடுவோ என்று செல்லப் பெயரால் அழைக்கப் படும் ஹே யிடே எனும் இச்சிறுவன் பீஜிங் உயிரியல் பூங்காவிற்கு மேலாக 35 நிமிடம் அல்ட்ராலைட் விமானம் ஒன்றை  ஓட்டி கின்னஸ் சாதனை புரிந்ததாக செவ்வாய்க்கிழமை சீன மீடியா அறிவித்துள்ளது. டுவோடுவோ விமானம் ஓட்டுவதைக் கற்றுக் கொண்ட ஏவியேஷன் கிளப்பின் இயக்குனரான ஷாங்க் யொங்குயி இது பற்றிக் கூறுகையில் இச்சிறுவன் 30 Km தூரத்துக்கு விமானத்தை ஓட்டியிருந்ததாகக் கூறியுள்ளார். மேலும் குளோபல் டைம்ஸ் பத்திரிகைக்கு இச்சிறுவனின் தந்தையான ஹே லியெஷெங் பேட்டியளிக்கையில் தனது மகன் வருங்காலத்தில் மிக வீரமும் திறமையும் மிக்க பைலட்டாக வர வேண்டும் எனவும் இத்துறையில் மேலும் புதிய கண்டுபிடிப்புக்களை நிகழ்த்த வேண்டும் எனத் தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார். மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் போது அவர்கள் எதில் அதிக ஆர்வம் காட்டி விளையாடுகின்றார்களோ அதற்கேற்ப அவர்களை ஊக்குவித்து சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கூறினார். விமானம் ஓட்டுவதைத் தவிர இச்சிறுவன் சர்வதேச படகோட்டும் போட்டி ஒன்றில் கலந்து கொண்டதுடன் புயல் மழை அடிக்கும் போது ஜப்பானின் ஃபுஜியாமா மலையில் ஏறியும் சாதனை படைத்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

 5 Year old Chinese Boy becomes youngest pilot, breaking Guinness world record

 5 Year old Chinese Boy becomes youngest pilot from East China’s Jiangsu Province. He piloted a light aircraft by own at the Beijing Wildlife Park on Saturday.  At Saturday Evening around 6pm, the Chinese boy, named Duoduo, took off from an airfield, and flew to the Daxing district Beijing Wildlife Park in  and returned.  The whole flight took just 35 minutes, according to He Liesheng (Duoduo’s father).  that Duoduo flew The total distance of 30 kilometers, according to Mr Zhang Yonghui who is the person in-charge of an aviation club where the chinese kid Duoduo learned to fly an aircraft.

The Kid’s Pop, He Liesheng told the media that he wants his son to become braver by flying a plane and develop his curiosity and desire to explore. He was previously dubbed “eagle dad” for his strict parenting methods. In 2012, He made Duoduo run outside in the snow in New York wearing only his underwear. The temperature was 13 C below zero at the time. “He’s education style is worth learning, but not every child is suitable for it,” Gu Li, the director of a learning research center in Nanjing told the media. Sun Yunxiao, deputy director of the China Youth and Children Research Center, disapproves of He’s education ideas. Sun noted that if the boy had encountered problems it could have impacted his entire life. “We should not force children to do what they are not able to do. Children can benefit more from playing with toys or mud than flying a plane,” Sun told the media Monday. Zhang Qihuai, a lawyer who specializes in aviation, told the media that there were legal implications to the case. “Anyone who drives aviation devices must have a pilot license and permission from the aviation administration. An aircraft controlled by a 5-year-old boy may threaten public safety,” he said.

Related posts