pazha nedumaran upset over modi not speaking about ezham tamils
ஈழத் தமிழர் பிரச்சனை சம்பந்தமாக பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி எந்த ஒரு கருத்தும் வெளியிடாதது தமக்கு பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக உலகத் தமிழர் பேரியக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசத்தில் ஓர் பிரபல பத்திரிக்கைக்கு நெடுமாறன் பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில், பா.ஜ.க தங்களது தேர்தல் அறிக்கையில் ஈழத்தமிழர்கள் பிரச்சனை பற்றியும், இலங்கை அதிபர் ராஜபக்சே மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை மற்றும் இந்திய தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது போன்ற பிரச்சனைகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
பா.ஜ.க தலைமை இந்த பிரச்னைகளை முற்றிலும் புறக்கணித்திருக்கிறது. மேலும், பிரசாரத்திற்கு தமிழகம் வந்த நரேந்திரமோடியும் மேற்கூறிய பிரச்சனைகள் பற்றி எந்த ஒரு கருத்தும் நேரடியாக தெரிவிக்கவில்லை.
இது நரேந்திர மோடியின் இந்த செயல் உலகத் தமிழர்கள் எல்லோருக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது என கூறியுள்ளார்.